ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

பிரபல நடிகர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி நடிகர்களில் ஒருவரான ராம் கபூர், போர்ஷே 911 கரீரா எஸ் (Porsche 911 Carrera S) ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 1.84 கோடி ரூபாய் ஆகும். இந்த கார் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ராம் கபூர் தனது புதிய போர்ஷே 911 கரீரா எஸ் காருடன் இருக்கும் புகைப்படத்தை போர்ஷே இந்தியா வெளியிட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

கரீரா வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், கரீரா எஸ் இன்னும் சக்தி வாய்ந்தது. இந்த காரில், 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 450 பிஎஸ் பவரையும், 530 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 308 கிலோ மீட்டர்கள்.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

இந்த காரில் 8 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தி பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த காரில் பேடில் ஷிஃப்டர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டி விடக்கூடிய வல்லமை இந்த காருக்கு உள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

பிரேக்கிங்கை பொறுத்தவரை முன் பகுதியில் 6 பிஸ்டன் காலிபர்களும், பின் பகுதியில் 4 பிஸ்டன் காலிபர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் முன் பகுதியில் 20 இன்ச் வீல்களும், பின் பகுதியில் 21 இன்ச் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று போர்ஷே 911 கரீரா எஸ் காரில் வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

க்ரூஸ் கண்ட்ரோல், சென்ட்ரல் லாக்கிங், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், கேமராவுடன் முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உடன் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகளை போர்ஷே 911 கரீரா எஸ் கார் பெற்றுள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

ராம் கபூர் நடிகர் என்பதுடன், கார் ஆர்வலராகவும் உள்ளார். எனவே கார்களை பார்த்து பார்த்து வாங்கி வருகிறார். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி என பல்வேறு விலை உயர்ந்த கார்களை ராம் கபூர் வைத்துள்ளார். இதுதவிர விலை உயர்ந்த பைக்குகளையும் ராம் கபூர் சொந்தமாக வைத்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

இதில், ஹார்லி டேவிட்சன், பிஎம்டபிள்யூ ஜிஎஸ் உள்ளிட்ட பைக்குகள் முக்கியமானவை. இதன் மூலம் ராம் கபூர் வாகன ஆர்வலர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பொதுவாக நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் ஆகியவற்றை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு ராம் கபூரும் விதிவிலக்கு அல்ல.

ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகர்... விலையை கேட்டதும் மயக்கமே வந்துருச்சு... எவ்ளோனு தெரியுமா?

இந்த வரிசையில் தற்போது போர்ஷே 911 கரீரா எஸ் கார் இணைந்துள்ளது. இந்த காருடன் ராம் கபூர் இருக்கும் புகைப்படத்தை சமூக வலை தளங்களில் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ராம் கபூர் மென்மேலும் நிறைய கார்களை வாங்குவதற்கு நாமும் நம்முடைய வாழ்த்துக்களை இங்கே தெரிவித்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Television Actor Ram Kapoor Buys A Porsche 911 Carrera S: Check Details Here. Read in Tamil
Story first published: Wednesday, July 14, 2021, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X