இவங்க நினைச்சி இருந்தா விலையுயர்ந்த காரை கூட வாங்கி இருக்கலாம்!! மலிவான எலக்ட்ரிக் காருடன் டிவி சீரியல் நடிகை!
எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலக்ட்ரிக் காரை வாங்குவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த எம்ஜி காரின் குறைவான விலை ஆகும். இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இவி விளங்குகிறது.
இருப்பினும், இந்த காரை செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் வாங்க மாட்டார்கள் என நாம் நினைத்துக் கொண்டி நிலையில், கன்னட டிவி சீரியல் நடிகை ஒருவர் எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். யார் அவர்? எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் விளைவாக விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இந்த வகையில் கடந்த ஆண்டில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய எலக்ட்ரிக் கார், கோமெட் இவி ஆகும்.
இருப்பினும், மற்ற எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் இது கொஞ்சம் ஸ்பெஷலானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.99 லட்சத்தில் இருந்து ரூ.9.24 லட்சம் வரையில் உள்ளன.

பெட்டகம் போன்றதான வடிவமைப்பை கொண்டிருக்கும் எம்ஜி கோமெட் இவி காரை குறைந்த விலையின் காரணமாகவே மக்கள் பலர் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலமாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து எம்ஜி மோட்டார் நிறுவனம் உள்ளதை சமீபத்தில் பார்த்திருந்தோம்.
மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமின்றி, ஸ்டைலான தோற்றத்தினால் செல்வந்தர்களும் இந்த காரை வாங்குவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. அந்த வரிசையில், கன்னட டிவி சீரியல் நடிகை நம்ரதா கவுடா எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். தாய், தந்தை உள்பட குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று காரை டெலிவிரி எடுத்துள்ளதை இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றின் வாயிலாக நம்ரதா கவுடா தெரிவித்துள்ளார்.

இந்திய மார்க்கெட்டில் ஸ்டார்ரி பிளாக், அரோரா சில்வர், கேண்டி வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் எம்ஜி கோமெட் இவி கிடைக்கிறது. இவை இல்லாமல், கேண்டி வெள்ளை - ஸ்டார்ரி பிளாக் என்கிற ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனிலும் இந்த எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. இதில், ஸ்டார்ரி பிளாக் பெயிண்ட் ஆப்ஷனில் கோமெட் இவி காரை கன்னட நடிகை நம்ரதா கவுடா வாங்கியுள்ளார்.
ஆனால், எந்த வேரியண்ட்டில் கோமெட் காரை நம்ரதா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. எக்ஸ்க்யூட்டிவ், எக்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் எம்ஜி கோமெட் இவி விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாகவே வெறும் 3 கதவுகளை மட்டுமே கொண்ட எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரில் 4 பேர் வரையில் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களை கவரும் விதமாக கோமெட் இவி எலக்ட்ரிக் காரை எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த காரை நடிகர்களும் வாங்குவது சந்தையில் கோமெட் இவி ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









