டிவி சேனல்ல வேலை செய்தே இந்த காரை வாங்கிட்டாங்களா!.. இவ்ளோ வசதிகளை கொண்ட காரா இது!!
டிவி சீரியல் நடிகர்கள் மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் ஆடம்பர காரை வாங்கும் நிகழ்வு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இப்போதுகூட ஓர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வர்ஷா ரமேஷ், இவரே அந்த சொகுசு காரை வாங்கிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவார். மலையாள டிவி சேனல் ஒன்றிலேயே இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
முன்னணி மியூசிக் ஷோ ஒன்றையே இவர் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையிலேயே அவர் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ ஆடம்பர கார் (BMW Luxury Car)-ஐ வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வர்ஷா ரமேஷ், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமல்ல சான்ஸ் கிடைக்கும்போது அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இதுவரை அவர் இரண்டு மலையாள படங்களில் நடித்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர விரைவில் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் புதிய படம் ஒன்றிலும் அவர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே பிஎம்டபிள்யூ சொகுசு காரை அவர் வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது எக்ஸ்1 (X1) கார் மாடல் ஆகும்.
இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 50 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் விலையில் எப்படி நம்மை தலைசுற்ற வைக்கின்றதோ அதைப் போலவே சிறப்பம்சங்கள் விஷயத்திலும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் இருக்கின்றது.
மிக முக்கியமாக இந்த காரில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.70 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, அடாஸ் (ADAS) மற்றும் கார் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களை பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமல்ல காருக்குள் சாவியே இல்லாமல் நுழையும் வசதி, புஷ் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன் போன்ற வசதிகளையும் அது வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமல்ல, பனோரமிக் சன் ரூஃப், கிளைமேட் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் பிஎம்டபிள்யூ வாரி வழங்கி உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டும் அல்ல பாதுகாப்பு பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராள மனசுடன் அது இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இதுபோன்ற சகல வசதிகளைத் தாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரையே மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி வர்ஷா ரமேஷ் வாங்கி இருக்கின்றார். டிவி சேனல்ல வேலை செய்துமட்டுமல்ல திரைப்படங்களில் கிடைத்த வருமானத்தைக் கொண்டும் இந்த காரை வாங்கியிருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் இரண்டு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. எஸ் டிரைவ் 18ஐ பெட்ரோல் (sDrive18i) மற்றும் எஸ் டிரைவ் 18டி டீசல் (sDrive18d) ஆகியவையே அவை ஆகும். இதன் விலை மிக மிக அதிகமாக தெரிந்தாலும், இதுவே பிராண்டின் மலிவு விலை ஆடம்பர காராக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









