நீண்ட நாள் கனவை மனைவி உடன் சேர்ந்து நிறைவேற்றிய வளர்ந்துவரும் நடிகர்!! காஸ்ட்லீயான டாடா கார்...

நடிகர் அமர்தீப் புதியதாக டாடா சஃபாரி (Tata Safari) காரை வாங்கியுள்ளார். ஷோரூமுக்கு மனைவி உடன் சேர்ந்து சென்று காரை அமர்தீப் டெலிவிரி எடுத்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை பெற்றுள்ளது. இதுகுறித்தும், டாடா சஃபாரி கார் குறித்தும் கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

நடிகர் அமர்தீப், தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர். ராஜூ கரி கிட்னாப், இரவாதம், அபிலாஷா என கடந்த சில வருடங்களில் அமர்தீப்பின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதுமட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அமர்தீப் கலந்துக் கொண்டார்.

actor amardeep buys tata safari

தெலுங்கு பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துக் கொண்ட நடிகர் அமர்தீப் இந்த போட்டி நிகழ்ச்சியில் ரன்னர்-அப், அதாவது 2வது இடத்தை பிடித்து பலரது கவனத்தை பெற்றார். அதன்பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதினால் சில பல சர்ச்சைகளில் அமர்தீப் சிக்கினார். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தற்போது விலையுயர்ந்த டாடா காரை அமர்தீப் வாங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் அமர்தீப் வாங்கியிருப்பது டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த காரான சஃபாரி ஆகும். கார் ஷோரூமுக்கு மனைவி தேஜஸ்வினி உடன் இணைந்து சென்று கேக் வெட்டி அமர்தீப் தான் புக் செய்த சஃபாரி காரை டெலிவிரி எடுத்துள்ளார். இதனை வீடியோவாக காட்சிப்படுத்தி தேஜஸ்வினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தேஜஸ்வினி ஷோரூமில் இருந்து சஃபாரி காரை ஓட்டி செல்வதை காணலாம். நடிகர் அமர்தீப் - தேஜஸ்வினி தம்பதி கருப்பு நிறத்திலான சஃபாரி காரை வாங்கியுள்ளனர். விலைமிக்க டாடா காராக இருப்பினும், பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் சஃபாரி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.19 லட்சத்தில் இருந்து ரூ.27.34 லட்சம் வரையில் உள்ளன.

எந்த வேரியண்ட்டில் சஃபாரி காரை நடிகர் அமர்தீப் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. 'சஃபாரி' பெயர் இந்திய கார்கள் மார்க்கெட்டில் பிரபலமானது. 1998இல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முதலாக சஃபாரி காரை அறிமுகப்படுத்தியது. சந்தையில் உடனடியாக ஹிட் அடித்த முதல் டாடா சஃபாரி காரின் விற்பனை சில வருடங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.

actor amardeep buys tata safari

இருப்பினும், சஃபாரி பெயரில் மீண்டும் காரை அறிமுகப்படுத்த முனைப்புடன் இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2020ஆம் ஆண்டில் புதிய மாடர்ன் தோற்றத்தில் சஃபாரி காரை அறிமுகப்படுத்தியது. அதன்பின், கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் மேம்படுத்தப்பட்ட சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் காரை தான் தற்போது நடிகர் அமர்தீப் வாங்கியுள்ளார்.

டாடா சஃபாரி காரில் 2.0 லிட்டர் கிறையோடெக் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 3,750 ஆர்பிஎம்-இல் 167.6 பிஎச்பி மற்றும் 1,750 - 2,500 ஆர்பிஎம்-இல் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். இந்த காரில் என்ஜினின் ஆற்றல் காரின் முன் சக்கரங்களுக்கு செல்கிறது.

actor amardeep buys tata safari

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சஃபாரி கார் மிடில்-கிளாஸ் மக்களை பொறுத்தவரையில் சற்று விலைமிக்க காராக இருக்கலாம். ஆனால், சினிமாவில் நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கும் அமர்தீப்பை பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு காரை வாங்குவது பெரிய விஷயமாகவே இருக்காது. நடிகர் அமர்தீப், தான் வாங்கிய காரை முதலாவதாக மனைவியை ஓட்ட வைத்திருப்பது க்யூட்டான தருணம் என்றே சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 13, 2024, 23:01 [IST]
English summary
Telugu actor amardeep buys tata safari suv check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X