3.5 கோடி ரூபா காரை வாங்கிய தெலுங்கு நடிகர்!.. அந்த நடிகையின் முன்னாள் கணவர்தானே அவர்! மனுஷன் ஜாலியா இருக்காரு!
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சூப்பர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார்? அவர் வாங்கி இருப்பது என்ன மாதிரியான சிறப்புகள் கொண்ட கார் மாடல் என்பது போன்ற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான நாக சைதன்யாவே அந்த 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சூப்பர் காரை வாங்கியவர் ஆவார். திரை துறையைச் சேர்ந்த பெரும்பாலான நடிகர்கள் மிகப் பெரிய வாகன காதலர்களாக இருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக பலரை நம்மால் கூற முடியும். இவர்களில் ஒருவராகவே நாக சைதன்யா இருக்கின்றார். இவரிடத்தில் ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) மற்றும் சிவப்பு நிற ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB) போன்ற சூப்பர் கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன.
இவற்றின் வரிசையிலேயே அவர் தற்போது புதிய போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் (Porsche 911 GT3 RS) காரை அவர் இணைத்திருக்கின்றார். ஆமாங்க, இந்த காரை ரூ. 3.5 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து அவர் வாங்கி இருக்கின்றார். சென்னையில் உள்ள போர்ஷே கார் விற்பனையாளர் வாயிலாக தெலுங்கு நடிகர் இந்த சூப்பர் காரை வாங்கி இருக்கின்றார்.

இந்த கார் வெற்றிகரமாக டெலிவரி செய்யப்பட்டதை போர்ஷே சென்னை விற்பனையாளரும் உறுதி செய்திருக்கின்றார். இத்துடன், நாக சைதன்யா அந்த காருடன் நிற்கும் படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது. உலகின் அதிக வேகத்தில் இயங்கும் கார் மாடல்களில் ஒன்றாக போர்ஷே 488 ஜிடிபி காட்சியளிக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 296 கிமீ ஆகும். இதில் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் 4 லிட்டர் 6 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 518 பிஎச்பி பவரையும், 468 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு டிசிடி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதனால்தான் டிராக்குகளில் ஓட்ட உகந்த கார் மாடலாக போர்ஷே 911 ஜிடி3 இருக்கின்றது. இந்த கார் வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
நார்மல், ஸ்போர்ட் மற்றும் டிராக் ஆகியவையே அவை ஆகும். மிக சிறந்த பிரைக்கிங் சிஸ்டத்தை இந்த காரில் போர்ஷே வழங்கி இருக்கின்றது. அந்தவகையில் முன் பக்க வீலில் 36 மிமீ அடர்த்தியான பிஸ்டனும், பின் வீலில் 32 மிமீ அளவுள்ள அடர்த்தியான பிஸ்டன்களும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மிக சிறந்த டிராக் (Drag) அனுபவத்தை வழங்கும் விதமாக டிஆர்எஸ் (DRS) அமைப்பு இந்த கார் மாடலில் வழங்கப்பட்டு உள்ளது. மெட்டாலிக் சில்வர் நிறத்தில் நாக சைதன்யா வாங்கி இருக்கும் போர்ஷே கார் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்த காரைப் போலவே அவர் வைத்திருக்கும் மற்ற கார்களும் அதிக சிறப்புகளைத் தாங்கியவையாக இருக்கின்றன.
குறிப்பாக, அவர் வைத்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ரூ. 4 கோடிக்கும் அதிகமான மதிப்புக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இதேபோல், அவர் வைத்திருக்கும் ஃபெர்ராரி 488 ஜிடிபியும் அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. அதன் விலை ரூ. 4.88 கோடி ஆகும்.
இந்த கார் மாடல்களுடன் சேர்த்து அவர் இன்னும் சில சொகுசு மற்றும் ஆடம்பர வகை கார்களை பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8, டொயோட்டா வெல்ஃபையர், ஃபெர்ராரி எஃப்430 ஆKிய கார் மாடல்களை பயன்படுத்தி வருகின்றார். இதுதவிர, நிஸான் ஜிடி-ஆர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மிட்சுபிஷி லேன்சர் போன்ற கார் மாடல்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடிகர்கள் பலர் மிகப் பெரிய சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக பாலிவுட், கோலிட் மற்றும் டோலிவுட் என அனைத்து மொழி திரையுலகையும் நம்மால் உதாரணமாக கூற முடியும். இதை உறுதிப்படுத்தும் விதமாக நாக சைதன்யா போர்ஷேவின் விலை உயர்ந்த காரை தற்போது வாங்கிய சம்பவம் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









