உலகின் அதிபயங்கர டாப் 10 முதன்மை போர் பீரங்கிகள்!

By Saravana

போர் நடைபெறும்போது தரை வழித்தாக்குதலில் மிக முக்கிய பங்கு வகிப்பது பீரங்கிகள்தான். குறிப்பாக, நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தரைப்படையினருக்கு மிக முக்கிய கருவியாக பீரங்கிகள் விளங்குகின்றன.

இந்த நிலையில், தற்காப்பு, தாக்குதல் திறன், வேகம், இலக்கை தாக்கும் துல்லியம் போன்றவற்றில் நவீனமான பீரங்கிகளை முதன்மை போர் பீரங்கிகள் என்று குறிப்பிடுகின்றனர். அந்த வகையில், உலகின் அதிபயங்கரமான டாப் 10 பீரங்கிகளின் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஒப்லாட்-எம் - உக்ரைன்

10. ஒப்லாட்-எம் - உக்ரைன்

பதட்டம் நிறைந்த எல்லைப்பகுதிகளை கொண்டிருப்பதோடு, ராணுவ பலத்தில் உக்கிரமான நாடு உக்ரைன். சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைன் உருவாக்கியிருக்கும் முக்கிய போர் பீரங்கி மாடல் ஒப்லாட்-எம். ரஷ்யாவின் டி-90 பீரங்கிக்கு இணையான சிறப்பம்சங்களை கொண்டது. அதில், முக்கியமானது தானியங்கி முறையில் வெடிகுண்டுகள் நிரப்பும் வசதியை குறிப்பிடலாம். சாதாரண வெடிகுண்டுகளை தவிர்த்து, இலக்குகளை குறிவைத்து செல்லக்கூடிய ஏவுகணைகளையும் செலுத்த முடியும்.

Photo Source

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பீரங்கி மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும் என்பதோடு, 540 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய பலம். 43 ரவுண்டுகள் சுடக்கூடிய 125மிமீ விட்டம் கொண்ட வெடிகுண்டு வீச்சு குழாய், 7.62மிமீ விட்டம் கொண்ட இரண்டாம் நிலை எந்திர துப்பாக்கி மற்றும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கான 12.7 மிமீ விட்டம் கொண்ட எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

Photo Source

 02. டி-90, ரஷ்யா

02. டி-90, ரஷ்யா

மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் பீரங்கிகளுக்கு இணையாக கருத முடியாவிட்டாலும், குறைந்த செலவில், அதிக எண்ணிக்கையில் எளிதாக தயாரிக்கக்கூடியது. வணிக ரீதியில் உலகின் வெற்றிகரமான பீரங்கி மாடல். இன்றைக்கு உலகில் பயன்படுத்தப்படும் முதன்மை போர் பீரங்கிகளில் குறைவான விலை கொண்டதும் கூட. ஆனால், இதன் கேபினிலேயே வெடிகுண்டுகள் நிரப்பும் அமைப்பு உள்ளதால், சிறிய தவறு நிகழ்ந்தாலும் பீரங்கியே வெடித்து சிதறும் வாய்ப்புள்ளது பெரும் குறை.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சாதாரண வெடிகுண்டுகளை வீசி நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக அழிக்காவிட்டாலும், இந்த பீரங்கியில் வழிகாட்டப்பட்ட இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவ முடியும். இந்த பீரங்கியில் 125மிமீ விட்டம் கொண்ட வெடிகுண்டு வீச்சு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. தற்போது புதிய எஞ்சின் உள்ளிட்டவற்றுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இது டி-90எம்எஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பீரங்கி 550 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

Photo Source

08. லெக்லெர்க் - பிரான்ஸ்

08. லெக்லெர்க் - பிரான்ஸ்

1992ல் பிரான்ஸ் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த பீரங்கி முதன்மை போர் பீரங்கி ரகத்தை சேர்ந்தது. இதன் டிசைன் அம்சங்களை மேற்கத்திய நாடுகளும் பின்பற்றி தங்களது பீரங்கிகளை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. மூன்று வீரர்கள் இயக்கக்கூடியது. வெடிகுண்டுகளை தானியங்கி முறையில் பொருத்தும் அமைப்பு உள்ளது. ஹைட்ரோநியூமாட்டிக் சஸ்பென்ஷன் 1,500 குதிரைசக்தி திறனை வழங்கும் எஞ்சின் இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மணிக்கு 72 கிமீ வேகம் வரை செலுத்த முடியும். கூடுதல் எரிபொருள் டேங்குககளை பொருத்தி 650 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இந்த பீரங்கியில் 120மிமீ வெடுகுண்டு வீச்சு கருவியும், 12.7மிமீ விட்டம் கொண்ட எந்திர துப்பாக்கியும், 3,000 ரவுண்டு சுடக்கூடிய 7.62மிமீ எந்திர துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. களத்தில் புகுந்துவிட்டால், எதிரிகளை துவம்சம் செய்யும் அத்துனை அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

Photo Source

07. டிகே-எக்ஸ் அல்லது டைப்-10, ஜப்பான்

07. டிகே-எக்ஸ் அல்லது டைப்-10, ஜப்பான்

கடந்த 2012ம் ஆண்டில் ஜப்பான் ராணுவத்தில் பயன்பாட்டிற்கு வந்த நான்காம் தலைமுறை பீரங்கி மாடல். இலகு எடை, அதிக உறுதியும் கொண்ட கட்டமைப்பை பெற்றிருக்கிறது. ஹைட்ரோநியூமாட்டிக் சஸ்பென்ஷன், 1,200 குதிரைசக்தி கொண்ட எஞ்சின், சிவிடி கியர்பாக்ஸ் போன்றவையும் இதன் மதிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பீரங்கியில் 120மிமீ வெடிகுண்டு வீச்சு கருவியும், இரண்டாம் நிலை ஆயுதமாக 12.7மிமீ விட்டம் கொண்ட எந்திர துப்பாக்கி மற்றும் 7.62மிமீ எந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. 400 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.

06. மெர்கவா எம்கே.4, இஸ்ரேல்

06. மெர்கவா எம்கே.4, இஸ்ரேல்

அதிக பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட உலகின் நவீன வகை பீரங்கி மாடல். முன்புறத்தில் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால், தாக்குதலில் உள்ளே இருக்கும் வீரர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் மட்டுமின்றி, வீரர்களை ஏற்றிச் செல்லவும், ராணுவ சரக்குகளை ஏற்றிச்செல்லும் இடவசதியும் உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பீரங்கியில் இருக்கும் 120மிமீ விட்டமுடைய வெடிகுண்டு வீச்சு கருவி மூலமாக தாழ்வாக பறக்கும் எதிரி ஹெலிகாப்டர்களை துல்லியமாக சுட்டு வீழ்த்த முடியும். தொழில்நுட்ப ரகசியத்தை காப்பதற்கு இந்த பீரங்கியை ஏற்றுமதி செய்வதிலிருந்து தவிர்த்து வருகிறது இஸ்ரேல். மணிக்கு 64 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பீரங்கி, ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

05. அர்மதா, ரஷ்யா

05. அர்மதா, ரஷ்யா

ரஷ்யாவின் நவீன வகை முதன்மை போர் பீரங்கி மாடல். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பீரங்கியின் உற்பத்தி 2017ல் துவங்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர். உலகின் மிகவும் பாதுகாப்பான பீரங்கி மாடல்களில் ஒன்றாக இருக்கும். 3 வீரர்கள் இயக்கக்கூடிய இந்த பீரங்கி, உலகிலேயே வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு கொண்ட மாடலாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், ஆளில்லாமல் ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக இயக்கக்கூடிய தொழில்நுட்ப வசதியும் உண்டு.

Photo Source

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அர்மதா பீரங்கியில் 125மிமீ வெடிகுண்டு வீச்சு கருவி, 152மிமீ துப்பாக்கி, 7.62மிமீ எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிக எடை கொண்ட பீரங்கி மாடலான இது மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். எதிரிகளின் ரேடார் கண்களிலிருந்து தப்பும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

Photo Source

04. சேலஞ்சர்-2, இங்கிலாந்து

04. சேலஞ்சர்-2, இங்கிலாந்து

எதிரிகளின் குண்டு வீச்சுத் தாக்குதல்களிலிருந்து சேதமடையாத கட்டமைப்பு வசதியை பெற்றிருக்கிறது. 4 வீரர்கள் இயக்கக்கூடியது. போஸ்னியா, கொசாவோ மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டபோது, அதிக சேதமடையாமல் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பீரங்கியில் முதன்மை ஆயுதமாக 120மிமீ வெடிகுண்டு வீச்சு கருவியும், இரண்டாம் நிலை ஆயுதமாக 7.62மிமீ எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக 59 கிமீ வேகத்தில் செல்லும் என்பதுடன், 550 கிமீ தூரம் பயணித்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும்.

03. எம்1ஏ2 எஸ்இபி, அமெரிக்கா

03. எம்1ஏ2 எஸ்இபி, அமெரிக்கா

அமெரிக்காவின் அதிநவீன பீரங்கிகளில் ஒன்று. எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அதிக சேதமடையாத கட்டமைப்பு கொண்டது. ஆனால், இதன் பராமரிப்பு செலவு மிக அதிகம் என்பதுடன், இலக்கு துல்லியமும் சுமார் வகைதான். ஆனால், முன்னேறிச் செல்லும் அம்சங்களில் சிறப்பானது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பீரங்கியில் 120மிமீ வெடிகுண்டு வீச்சு கருவி மற்றும் 7.62மிமீ எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் விதத்தில் விசேஷ தீயணைப்பு வசதிகள் கொண்டது. பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை, 10,000 பீரங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. இந்த பீரங்கி 45 கிமீ வேகம் வரை செல்லும் என்பதுடன், 426 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

 02. கே-2 பிளாக் பாந்தர், தென்கொரியா

02. கே-2 பிளாக் பாந்தர், தென்கொரியா

வடகொரியா, சீனாவிடமிருந்து இருக்கும் நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், தென்கொரியா வைத்திருக்கும் முதன்மை போர் பீரங்கி. இலகு எடை கொண்ட இந்த போர் பீரங்கியில் நவீன வகை தீயணைப்பு வசதி உள்ளது. தாழ்வாக பறக்கும் எதிரி ஹெலிகாப்டர்களை தானியங்கி முறையில் துல்லியமாக வீழ்த்தி விடும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பீரங்கியில் 120மிமீ வெடிகுண்டு வீச்சு கருவி உள்ளது. அத்துடன் 12.7மிமீ எந்திர துப்பாக்கி, 7.62மிமீ எந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எந்திர துப்பாக்கி 12,000 ரவுண்டுகள் சுடும். மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும் என்பதோடு, 450 கிமீ தூரம் பயணிக்கும்.

Photo Source

01. லியோபார்டு 2ஏ7, ஜெர்மனி

01. லியோபார்டு 2ஏ7, ஜெர்மனி

நீண்ட தூர இலக்குகளை கூட மிக துல்லியமாக அடிக்கும் திறன் கொண்டது. அத்துடன், சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிக நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட முதன்மை போர் பீரங்கி ரகத்தை சேர்ந்தது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பீரங்கியில், 120மிமீ எல்55 வெடிகுண்டு வீச்சு கருவியும், இரண்டாம் நிலை ஆயுதமாக 7.62மிமீ விட்டம் கொண்ட இரண்டு எந்திர துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மணிக்கு 72 கிமீ வேகத்தில் செல்லும் என்பதுடன், 550கிமீ தூரம் வரை பயணிக்கும்.

Photo Source

01. அர்ஜுன்

01. அர்ஜுன்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் வடிவமைக்கப்பட்ட மாடல். இந்திய ராணுவத்தில் 119 எம்கே1 வகை அர்ஜுன் பீரங்கிகளும், 118 எம்கே2 மாடல் அர்ஜுன் பீரங்கிகளும் உள்ளன. எம்கே1 மாடல் 58.5 டன் எடையும், எம்கே2 மாடல் 68 டன் எடையும் உடையது. இந்த பீரங்கியை இயக்க கமாண்டர், ஓட்டுனர், துப்பாக்கி இயக்கும் வீரர், குண்டுகளை துப்பாக்கியில் ஏற்றும் வீரர் என 4 பேர் தேவைப்படுவர். பல நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது.

02. பீஷ்மா, இந்தியா

02. பீஷ்மா, இந்தியா

ரஷ்யாவின் மூன்றாம் தலைமுறை டி90 பீரங்கிகளை 2001ம் ஆண்டு இந்தியா வாங்கியது. 310 டி90 பீரங்கிகளை இந்தியா வாங்கி பீஷ்மா என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறது. அர்ஜுன் பீரங்கியின் வடிவமைப்புப் பணிகள் தாமதமடைந்ததையடுத்து, இந்த டி90 பீரங்கிகளை இந்தியா ஆர்டர் செய்து வாங்கியது. மூன்று தவணைகளில் மொத்தம் 1050 டி90 பீரங்கிகளை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. 2020ம் ஆண்டிற்குள் மேலும் 1,000 டி90 பீரங்கிகளை ராணுவத்தில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

 03. டி72

03. டி72

இதுவும் ரஷ்ய தயாரிப்புதான். தற்போது இந்திய ராணுவத்தில் 2,414 டி72 பீரங்கிகள் உள்ளன. இந்தியாவின் சொந்த தயாரிப்பான அர்ஜுன் பீரங்கி தயாரிப்பு திட்டத்தையடுத்து, இந்த பீரங்கிகளை ஓரங்கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அர்ஜுன் திட்டப்பணிகள் தாமதமடைந்ததையடுத்து, 1500 டி72 பீரங்கிகளை மேம்படுத்தப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 23, 2015, 15:03 [IST]
English summary
Here is the list takes a look at 10 of the top-of-the-line main battle tanks in use today.
மேலும்... #ராணுவம் #military
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+