தரையிலும், தண்ணீரிலும் செல்லும் தனிநபர் பயன்பாட்டு ஆம்பிபியஸ் வாகனங்கள்!

Written By:

கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்து ஸ்தம்பித்து போயிருக்கும் சென்னை நகரில் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழல் பல இடங்களில் ஏற்பட்டது.

இந்தநிலையில், சென்னை மக்கள் பலரும், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வாகனம் இருந்தால்தான் சமாளிக்க முடியும் என்று அவர்கள் மைண்ட்வாய்ஸ் கூறுவதையும், சமூக வலைதளங்களில் அதுதொடர்பான மீம்ஸ்களையும் பார்க்க முடிகிறது.

அதுபோன்று, தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வகையில், தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உருவாக்கப்பட்ட வாகன மாடல்களை ஸ்லைடரில் காணலாம். எதிர்காலத்தில் சென்னையை குறிவைத்து இதுபோன்ற நிறுவனங்கள் வர்த்தகத்தை துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இருக்கும் நிலைமைக்கு சிலர் ஆர்டர் செய்தாவது வாங்கும் அளவுக்கு மனோநிலை சென்றுவிட்டது. உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் பயன்படலாம்.

01. பாந்தர் வாட்டர்கார்

01. பாந்தர் வாட்டர்கார்

வில்லிஸ் சிஜே8 ஜீப்பை கஸ்டமைஸ் செய்து பாந்தர் வாட்டர் ஜீப்பாக மாற்றியுள்ளது வாட்டர்கார் நிறுவனம். இந்த ஜீப்பின் ஹல் எனப்படும் நீரில் மிதப்பதற்கான அடிப்பாகம் உறுதிமிக்க ஃபைபர் கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜீப்பில் 4 பேர் வரை பயணிக்கலாம். மேலும், துருபிடிக்காத பாகங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 சக்திவாய்ந்த நீர்நில ஜீப்

சக்திவாய்ந்த நீர்நில ஜீப்

ஹோண்டாவின் 3.7 லிட்டர் வி6 வி-டெக் எஞ்சின் பொருத்தமாக இருந்துள்ளது. 250 எச்பி சக்தியை அளிக்கும் இந்த எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ், எரிபொருள் சிக்கனம் என அனைத்து விதத்திலும் சிறப்பாக இருப்பதாக வாட்டர்கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. தரையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ., வேகத்திலும், தண்ணீரில் மணிக்கு 70 கிமீ., வேகத்திலும் செல்லும்.

 சக்திவாய்ந்த நீர்நில ஜீப்

சக்திவாய்ந்த நீர்நில ஜீப்

ஹோண்டாவின் 3.7 லிட்டர் வி6 வி-டெக் எஞ்சின் பொருத்தமாக இருந்துள்ளது. 250 எச்பி சக்தியை அளிக்கும் இந்த எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ், எரிபொருள் சிக்கனம் என அனைத்து விதத்திலும் சிறப்பாக இருப்பதாக வாட்டர்கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. தரையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ., வேகத்திலும், தண்ணீரில் மணிக்கு 70 கிமீ., வேகத்திலும் செல்லும்.

02. சாலமண்டர் ஆட்டோரிக்ஷா

02. சாலமண்டர் ஆட்டோரிக்ஷா

சென்னையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையை போன்று, மழை வெள்ளத்தால் பாதிப்புகள் அடிக்கடி நிகழ்ந்த இடம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம். இதனை சமாளிக்கும் வித்ததில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் மூன்றுசக்கர பயணிகள் ஆட்டோரிக்ஷாவை சாலமண்டர் என்ற பெயரில் அந்நாட்டை சேர்ந்த எச்2ஓ என்ற நிறுவனம் வெளியிட்டது. மழை பெய்யுது சார், ஆட்டோ வராது என்று இனி ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் கூற வேண்டியிருக்காது.

சிறப்புகள்

சிறப்புகள்

தரையில் மணிக்கு 80 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மிதந்து செல்லும்போது 6 நாட்டிக்கல் மைல் வேகத்திலும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம் விலை கொண்டது. இரண்டாவதாக ஒரு கார் வாங்க திட்டமிடுவோர், பேசாமல் இந்த ஆட்டோரிக்ஷாவை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

03. கிப்ஸ் குவாட்ஸ்கி

03. கிப்ஸ் குவாட்ஸ்கி

ஆம்பிபியஸ் எனப்படும் நீர்நில வாகன வடிவமைப்பில் கிப்ஸ் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. அந்த நிறுவனம் 2012ம் ஆண்டு அறிமுகம் செய்த இந்த கிப்ஸ் குவாட்ஸ்கி வாகனம் ஆல் டெர்ரெய்ன் வெகிக்கிள் எனப்படும் அனைத்து வித நிலவமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய ஏடிவி.

 மெரினா பீச்சில் ரவுண்டு

மெரினா பீச்சில் ரவுண்டு

தண்ணீர் சூழ்ந்த நேரங்களில் மட்டுமின்றி, பிற நேரங்களிலும் பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் அப்படியே மெரினா பீச்சிலும் ஒரு ரவுண்ட் அடித்து காற்று வாங்கலாம். மணிக்கு 72 கிமீ வேகம் வரை செல்லும். வெறும் 5 வினாடிகளில் தரையிலிருந்து, தண்ணீருக்கு ஏற்ற தகவமைப்புகளை பெறும் வசதி கொண்டது.

04. கிப்ஸ் அக்வாடா

04. கிப்ஸ் அக்வாடா

இதுவும் கிப்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான். இது அதிவேக சாதனையை படைத்த மாடல் என்பதும் கூடுதல் தகவல். 2003ம் ஆண்டில் 1.40:6 வினாடிகளில் இந்த ஆம்பிபியஸ் வாகனம் ஆங்கில கால்வாயை கடந்து சாதனை படைத்தது.

தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்றது

தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்றது

தரையில் 160 கிமீ வேகத்திலும், தண்ணீரில் 48 கிமீ வேகம் வரையிலும் செலுத்த முடியும். வெற்றிகரமான தனிநபர் பயன்பாட்டு ஆம்பிபியஸ் வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

05. ரின்ஸ் ஸ்பீடு ஸ்ப்ளாஷ்

05. ரின்ஸ் ஸ்பீடு ஸ்ப்ளாஷ்

சுவிட்சர்லாந்து நாட்டு சேர்ந்த ரின்ஸ்பீடு நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார்களை ட்யூனிங் செய்வதில் பிரபலமானது. அதுதவிர, புதுமையான கான்செப்ட் வாகனங்களை வடிவமைத்து அசத்துவதிலும் கெட்டிக்கார நிறுவனம். 2004ம் ஆண்டு இந்த நிறுவனம் வடிவமைத்த ஆம்பி கார் மாடல்தான் ஸ்ப்ளாஷ்.

அசத்தும் வேகம்

அசத்தும் வேகம்

ரின்ஸ்பீடு ஸ்ப்ளாஷ் தரையில் மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மணிக்கு 50கிமீ வேகம் வரையிலும் செல்லக்கூடியது. இதன் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இது இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனம். மேலும், இயற்கை எரிவாயுவில் இயங்கும் உலகின் முதல் ஆம்பி காராகவும் கூறலாம்.

06. சீரோடர் லம்போ கூன்டாச்

06. சீரோடர் லம்போ கூன்டாச்

ஆம்பிபியஸ் வாகனங்களை வடிவமைப்பில் புகழ்பெற்ற சீரோடர் நிறுவனம் லம்போர்கினி கூன்டாச் காரை நீர்நில வாகனமாக மாற்றி வெளியிட்டது. இதனை நீர்நில வாகன வடிவமைப்பில் புகழ்பெற்ற மைக் ரியான்தான் நீர்நில வாகனமாக மாற்றினார்.

கட்டுப்படியாகாது...

கட்டுப்படியாகாது...

லம்போர்கினி கூன்டாச் காரை நீர்நில வாகனமாக மாற்றுவதற்கு 3,000 டாலர் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. என்ன, இதெல்லாம் நமக்கு கட்டுப்படியாகாது என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

07. கிப்ஸ் ஹம்டிங்கா

07. கிப்ஸ் ஹம்டிங்கா

இது மீட்புப் பணிகளுக்கு ஏற்றது என்பதால், சென்னை மாநகராட்சி வாங்கி வைத்துக் கொள்ளலாம். கிப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த ஆம்பிபியஸ் வாகனம் ஓர் 5 சீட்டர் மாடல். இந்த வாகனம் 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கிப்ஸ் அக்வாடா போன்றே இதுவும் ஓர் அதிவேக வாகனம். சுனாமி ஏற்படும் சமயங்களில் மீட்பு வாகனமாக பயன்படுத்தும் நோக்கோடு இதனை கிப்ஸ் வடிவமைத்து வெளியிட்டது.

பன்முக பயன்பாடு

பன்முக பயன்பாடு

இந்த நீர்நில வாகனத்தில் 350 பிஎச்பி பவரை அளிக்கும் சக்திகொண்ட வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபுல் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த வாகனம் தரையில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் 65 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது.

08. ஹைட்ரா ஸ்பைடர்

08. ஹைட்ரா ஸ்பைடர்

லம்போ, ஃபெராரி கார் வைத்திருக்கும் சென்னைவாசிகள், அதற்கு பதிலாக யோசிக்க வேண்டிய மாடல் இது. கொஞ்சம் வித்தியாசத்தை விரும்புபவர்களுக்கான ஒரு ஓபன் டாப் அதிவேக நீர்நில ஸ்போர்ட்ஸ் கார். இதனை கூல் ஆம்பிபியஸ் மேனுஃபேக்சரர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிமுகம் செய்தது. மிக நவீனமான வடிவமைப்பு கொண்ட இந்த நீர்நில ஸ்போர்ட்ஸ் காரின் சிறப்பம்சங்கள் வியக்க வைக்கின்றன.

பவர்ஃபுல் நீர்நில வாகனம்

பவர்ஃபுல் நீர்நில வாகனம்

இந்த நீர்நில ஸ்போர்ட்ஸ் காரில் 40 எச்பி பவரை அளிக்கும் 6.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கின்றன. தரையில் அதிகபட்சமாக மணிக்கு 201 கிமீ வேகத்திலும், தண்ணீரில் அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்திலும் செல்லும் ஆற்றல் படைத்தது

09. பிஸ்கி பைக்

09. பிஸ்கி பைக்

அமெரிக்காவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆம்பிபியஸ் பைக் மாடல். தொழிலதிபரும், ஆம்பிபியஸ் வாகன வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவருமான ஆலன் கிப்ஸ் எண்ணத்தில்தான் இந்த புதிய பைக் மாடலும் உருவாகியிருக்கிறது.

சூப்பரான பைக்

சூப்பரான பைக்

தரையில் மணிக்கு 128 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மணிக்கு 59 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது. வெறும் 5 வினாடிகளில் தரையிலிருந்து தண்ணீருக்கு தகுந்தவாறும், தண்ணீலிருந்து தரைக்கு தகுந்தவாறும் தொழில்நுட்ப அம்சங்கள் மாறிக்கொள்ளும். இதற்கு ஒரு சிறிய பொத்தானை அழுத்தினால் போதுமானது.

எமது வேண்டுகோள்

எமது வேண்டுகோள்

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நீர்நில வாகனங்களை வாங்குவதில் பல நடைமுறை பிரச்னைகள் இருந்தாலும், மாநில அரசும், சென்னை மாநராட்சியும் இதுபோன்ற சில வாகனங்களையாவது வாங்கி கைவசம் வைத்துக் கொள்வது அவசியம். இயற்கை சீற்றங்களின்போது, இதுபோன்ற வாகனங்களை வைத்து ஓரளவு மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

 
மேலும்... #ஆஃப் பீட்
English summary

 Here is a list of amphibious vehicles that really exist. 
Story first published: Thursday, November 19, 2015, 12:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark