சிலிர்க்க வைக்கும் வேகம்... உலகின் அதிவேக டாப் 10 விமானங்கள்!

விமானங்களின் வேகமும், பொறியியலும் வியக்க வைக்கும் வைக்கும் விஷயங்களாகவே இருந்து வருகிறது. அதிலும், ராணுவ விமான பொறியியல் துறையின் வியத்தகு தயாரிப்புகளும், சாதனைகளும் அனைவரையும் பிரம்மிக்க வைக்கக்கூடியது.

அந்த வகையில், குண்டு வீச்சு, உளவு பார்த்தல் மற்றும் சோதனை முயற்சிகளுக்காக உருவாக்கப்பட்ட உலகின் அதிவேக விமானங்கள் பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. சுகோய் எஸ்யூ- 27 ப்ளாங்கர்

10. சுகோய் எஸ்யூ- 27 ப்ளாங்கர்

சோவியத் யூனியன் தயாரிப்பான இந்த சுகோய் எஸ்யூ- 27 ப்ளாங்கர் விமானம் மணிக்கு 2,878 கிமீ வேகத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது இந்த விமானம். எதிரிகளின் வான் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறன் கொண்ட இந்த விமானத்தை அமெரிக்காவின் எஃப் - 15 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்துக்கு போட்டியாக சோவியத் யூனியன் தயாரித்தது. குறைந்த மற்றும் நடுத்தர தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள், 30மிமீ துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டது. 1977ம் ஆண்டு வெளியிடப்பட்ட இதன் வரிசையில் எஸ்யூ 30, 33, 34, 35 மற்றும் 37 ஆகிய விமானங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Photo credit: Wiki Commons/Dmitriy Pichugin

09. ஜெனரல் டைனமிக்ஸ் எஃப் 111 ஆர்ட்வார்க்

09. ஜெனரல் டைனமிக்ஸ் எஃப் 111 ஆர்ட்வார்க்

இது குண்டு வீச்சு ரக விமானம். மணிக்கு 3,062 கிமீ வேகத்தில் பறக்கக்கூடிய வல்லமை பொருத்தியது. 1998ம் ஆண்டு பயன்பாடு நிறுத்தப்பட்ட இந்த விமானம் 14,300 கிலோ எடையுடைய குண்டுகளை சுமந்து செல்லும் கட்டமைப்பை பெற்றிருந்தது. அணுகுண்டையும் எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தும். இந்த விமானத்தில் 2,000 ரவுண்டு சுடக்கூடிய திறன் கொண்ட எந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருந்தது. இதன் இறக்கைகள் பயன்பாட்டை பொறுத்து மாற்றிக் கொள்ளும்.

Photo credit: Wiki Commons

08. மெக்டொனல் டக்ளஸ் எஃப்-15 ஈகிள்

08. மெக்டொனல் டக்ளஸ் எஃப்-15 ஈகிள்

ஐந்தாம் தலைமுறை அம்சங்கள் பொருந்திய இந்த விமானம் அமெரிக்காவின் தயாரிப்பு. இதுவும் மணிக்கு அதிகபட்சமாக 3,062 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. 1976ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. வரும் 2019ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருக்கும். பல்வேறு தாக்குதல் ஆயுதங்களையும், ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது.

Photo credit: Wiki Commons/U.S. Air Force photo

 07. மிகோயன் மிக்- 31 ஃபாக்ஸ்பேட்

07. மிகோயன் மிக்- 31 ஃபாக்ஸ்பேட்

மணிக்கு 3,466 கிமீ வேகம் வரை பறக்கக்கூடியது. இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானம் சூப்பர்சானிக் விமானங்களுக்கு இணையாக பறக்கும் திறன் கொண்டது. எதிரி விமானத்தை வழிமறித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கட்டமைப்பை பெற்றது. 4 ஃபாக்ஸ்பேட் விமானங்கள் இணைந்தால் 900 கிமீ தூரத்திற்கான வான்பகுதியை கட்டுப்பாட்டுகள் கொண்டு வர முடியும். நடுத்தர மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்து. 1994ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Photo credit: Wiki Commons/Dmitriy Pichugin

06. எக்ஸ்பி-70 வல்கைரி

06. எக்ஸ்பி-70 வல்கைரி

இந்த விமானம் 6 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட ஒரு பிரத்யேக டிசைன் கொண்ட அமெரிக்க தயாரிப்பு. 2.40 லட்சம் கிலோ எடைகொண்ட இந்த விமானம் மணிக்கு 3,675 கிமீ வேகத்தில் பறக்கும் என்பது பொறியியலின் உச்சத்தை காட்டுவதாகவே இருக்கிறது. 14 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் வல்லமை பொருந்தியதுடன், எதிரிகளின் ஏவுகணை தாக்குதலிருந்தும் எளிதாக தப்பிக்கும் திறன் கொண்டது. 6,900 கிமீ தூரம் இடைநில்லாமல் பறக்கும். சோவியத் யூனியனுக்கு சென்று தாக்குதல் நடத்திவிட்டு, எரிபொருளுக்காக எங்கும் நிற்காமல் திரும்பி வரும் வகையில், இந்த விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. மொத்தமே 2 விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன. 1964ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் இப்போது பயன்பாட்டில் இல்லை.

Photo credit: Wiki Commons/NASA

05. பெல் எக்ஸ்2 ஸ்டார்பஸ்டர்

05. பெல் எக்ஸ்2 ஸ்டார்பஸ்டர்

அமெரிக்காவின் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட விமானம் இது. 1955ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் 1956ல் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது. அதாவது, சோதனையின்போது மணிக்கு 3,915 கிமீ வேகத்தில் பறந்து உச்சபட்ச வேகத்தை பதிவு செய்த, அடுத்த கணமே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை செலுத்திய மில்பர்ன் ஜி மெல் என்ற டெஸ்ட் பைலட் பாரசூட் மூலம் தப்பிக்க முயன்றார். ஆனால், அதிவேகத்தில் தரையில் வந்து விழுந்ததால் அவர் இந்த விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, இந்த விமானத் திட்டம் கைவிடப்பட்டது.

Photo credit: Wiki Commons/USAF

04. மிகோயன் மிக்- 25 ஃபாக்ஸ்பேட்

04. மிகோயன் மிக்- 25 ஃபாக்ஸ்பேட்

சோவியத் யூனியன் தயாரிப்பான இந்த விமானம் பனிப்போரின்போது அமெரிக்காவின் எஸ்ஆர்71 விமானத்தை வழிமறித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்டது. மணிக்கு 3,920 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.1964 முதல் 1984 வரை 1,100 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

Photo credit: Wiki Commons/Dmitriy Pichugin

03. லாக்ஹீட் ஒய்எஃப் -12

03. லாக்ஹீட் ஒய்எஃப் -12

பிளாக்பேர்டு விமானத்தை போன்ற தோற்றம் கொண்ட இந்த விமானம் புரோட்டோடைப் மாடலாக தயாரிக்கப்பட்டது. இதுவும் எதிரி விமானங்களை வானிலேயே கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. மணிக்கு 4,103 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியது. ஆனால், அதிகபட்சமாக மணிக்கு 3,331 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. பிரபல விமான வடிவமைப்பு நிபுணர் கிளியரன்ஸ் கெல்லி ஜான்சனால் வடிவமைக்கப்பட்ட மாடல். மொத்தம் 3 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/USAF

 02. லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு

02. லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு

மணிக்கு 4,042 கிமீ அதிகபட்ச வேகம் கொண்டது. இதுவரை 32 பிளாக்பேர்டு விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 12 விமானங்கள் விபத்துக்களில் சிக்கி முற்றிலும் சேதமடைந்துவிட்டன. 1998ம் ஆண்டு பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டது. இதன் ரகத்தில் வடிவமைக்கப்பட்ட விமானங்களில் மனிதரால் செலுத்தக்கூடிய உலகின் அதிவேக விமானம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

01. நார்த் அமெரிக்கன் எக்ஸ்- 15

01. நார்த் அமெரிக்கன் எக்ஸ்- 15

மனிதர் இயக்கும் அம்சங்கள் கொண்ட உலகின் அதிவேக விமானம். கடந்த 1967ம் ஆண்டு பைலட் வில்லியம் ஜே பீட் என்பவர் மணிக்கு 7,200 கிமீ வேகத்தில் செலுத்தி புதிய சாதனை படைத்தார். ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிக வேகத்தில் பறந்து சாதனை படைத்த விமானம் இது. மேலும், 100 கிமீ உயரத்தில் இந்த விமானம் பறந்து சாதனை படைத்தது.

Photo credit: Wiki Commons/NASA

இதர சுவாரஸ்ய செய்திகள்

இதர சுவாரஸ்ய செய்திகள்

Most Read Articles
English summary
we will look into ten of the fastest military aircraft ever flown and see what they have in the trunk.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X