திக், திக், திக்...இந்தியாவின் அபாகயரமான ரயில் பாலங்கள்!

Written By:

விரைவான போக்குவரத்திற்கு பாலங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இருப்பினும், பாலங்கள் அமைக்கப்படும் விதம், சூழல் போன்றவை சில சமயங்களில் அபாயகரமானதாக மாற்றிவிடுகின்றன.

அந்த விதத்தில், மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய ரயில் பயணங்களை அபாயகரமானதாக பார்க்கச் செய்யும் இந்தியாவின் 10 ரயில் பாலங்கள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. ஜம்மு- உதம்பூர்

10. ஜம்மு- உதம்பூர்

காஷ்மீரில் உள்ள ஜம்மு- உதம்பூரை இணைக்கும் ரயில் வழித்தடம் பல சவால்களை வென்று பொறியாளர்களின் 21 ஆண்டுகால அயராத முயற்சியிலும், உழைப்பிலும் உருவாக்கியிருக்கிறது. 54 கிமீ தூரம் கொண்ட இந்த வழித்தடம் ரூ.515 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், 20 சுரங்கப் பாதைகள், 158 பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில், மன்வல் ரயில் பால பயணமும் பலருக்கு அச்சத்தை தரக்கூடிய ரயில் பயணமாகவே அமையும். ஏனெனில், இந்த ரயில் வழித்தடம் அதிக நில அதிர்வு ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளதே முக்கிய காரணம்.

Picture credit: oddpad

09. ராயகடா- கோரபுட்

09. ராயகடா- கோரபுட்

ஒடிஷா மாநிலம், ராயகடா- கோராபுட் இடையிலான ரயில் வழித்தடம் இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடமாக குறிப்பிடப்பட்டாலும், இதிலுள்ள பாலங்கள் மிகவும் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த வழித்தடத்தில் நிலச்சரிவு ஆபத்தும் அதிகம் என்பதே இதற்கு காரணம். இந்த வழித்தடத்தில் உள்ள ஒரு அபாயகரமான பாலத்தை படத்தில் காணலாம்.

Picture credit: indiarailinfo

08. தூத் சாகர், சோனாலிம்

08. தூத் சாகர், சோனாலிம்

கோவாவிலுள்ள தூத்சாகர் அருவி விழும் இடத்தை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பாலமும் மிகவும் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது. மத்கான்- பெல்காமை இணைக்கும் ரயில் வழித்தடத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த ரயிலில் பயணித்தவாறே, தூத் சாகர் அருவியை காண பலர் பயணிக்கின்றனர். ஆனாலும், ஆபத்தான ரயில் பாலமாகவே குறிப்பிடப்படுகிறது.

Picture credit: hamusoku

07. பான்வெல், மஹாராஷ்டிரா

07. பான்வெல், மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிர மாநிலம், பான்வெல் ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாகவே குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான இதற்கு 1995ல் சிறந்த கான்கிரீட் கட்டுமானம் கொண்ட வடிவமைப்பாக சிறப்பிக்கப்பட்டது. இந்த பாலத்தில் செல்லும்போது, ரயில் பயணிகள் அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வை பெறுவர்.

Picture credit: YouTube

06. காசரா காட் பிரிட்ஜ்

06. காசரா காட் பிரிட்ஜ்

மஹாராஷ்டிர மாநிலம், மும்பை- நாசிக் நகரங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் காசரா காட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாவகே இருந்து வருகிறது. பக்கவாட்டில் எந்த தடுப்பும் இல்லாமல் அந்த ரயில் பாலத்தை ஒவ்வொரு முறையும் அச்சத்துடனே கடந்து வருகின்றன ரயில்கள்.

Picture credit: YouTube

05. கங்கரா வாலி

05. கங்கரா வாலி

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் நகரையும், இமாச்சலப்பிரதேச மாநிலம், ஜோகிந்தர் நகரையும் இணைக்கும் இந்த ரயில் வழித்தடத்தில் பல அபாயகரமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல பாலங்களில் தடுப்பு இல்லாமல் வளைந்து நெளிந்து செல்லும் ரயில் பயணம் அச்சமூட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

Picture credit: indiarailinfo

 04. சக்லேஷ்பூர்- சுப்ரமண்யா காட் செக்ஷன்

04. சக்லேஷ்பூர்- சுப்ரமண்யா காட் செக்ஷன்

கர்நாடக மாநிலம், மங்களூர்- ஹாசன் இடையிலான ரயில் வழித்தடத்தில் சக்லேஷ்பூர்-சுப்ரமண்யா மலைப்பகுதியிலுள்ள ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாகவே குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த ரயில் வழித்தடமும் நிலச்சரிவு ஆபத்தில் அடிக்கடி சிக்குண்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Picture credit: indiarailinfo

03. நீலகிரி மலை ரயில்

03. நீலகிரி மலை ரயில்

தமிழகத்தில் பலருக்கும் பிடித்தமான நீலகிரி மலை ரயில் பாதையிலும் பல அபாயகரமான பாலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த ரயில் வழித்தடத்தில் பலரும் தவம் கிடந்து ஏறினாலும், சில பாலங்கள் அச்சத்தை வழங்குவதாக அமைகிறது. இந்த ரயில் வழித்தடத்திலும் நிலச்சரிவு ஆபத்து அதிகமிருக்கிறது.

Picture credit: Stephan Niewolik/Wiki Commons

02. லும்திங் பதர்பூர், அசாம்

02. லும்திங் பதர்பூர், அசாம்

அசாம் மாநிலத்திலுள்ள லும்திங் பதர்பூர் மலைப்பகுதி ரயில் வழித்தடம் மிகுந்த ஆபத்துக்களை கடந்தே பயணிக்கிறது. இந்த வழித்தடமும் இந்தியாவின் மிகவும் ஆபத்தான ரயில் வழித்தடமாகவும், இதிலுள்ள பாலங்கள் மிகவும் அபாயகரமானதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Picture credit: K K Bhuyan/irfca

01. பாம்பன்

01. பாம்பன்

நூற்றாண்டு கண்டுவிட்ட, தமிழகத்திலுள்ள பாம்பன் ரயில் பாலம்தான் இந்தியாவிலேயே மிக பழமையானதும், மிகவும் அபாயகரமான ரயில் பாலங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது. 1914ம் ஆம்டில் திறக்கப்பட்ட இந்த பாலம், 1964ம் ஆண்டு புயல் தாக்கியதில் பலத்த சேதமடைந்தது. அதன்பின்னர், இந்த பாலத்தை 46 நாட்களில் இந்த பாலத்தை சீரமைத்தனர். தற்போது 8 கிமீ முதல் 12 கிமீ வேகத்தில் ரயில்கள் இந்த பாலத்தில் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகவும் அபாயகரமான ரயில் பாலமாக குறிப்பிடப்படுகிறது.

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ten Most Dangerous Rail Bridges In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more