ராணுவ பலத்தில் உலகின் டாப் - 10 நாடுகள் - எந்த இடத்தில் இந்தியா?
அன்னிய நாடுகளிடமிருந்து தனது வளங்களையும், மக்களையும் தற்காத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பலம் மிக முக்கியமானதாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் பல ஆயிரம் கோடிகளை ராணுவத்திற்கு வாரி இறைத்து, தனது ராணுவ பலத்தை பெருக்கிக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றன.
இந்தநிலையில், ராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகளை குளோபல் ஃபயர்பவர் அமைப்பும், கிரெடிட் சூசேவும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன. இதில், அணு ஆயுத வல்லமை குறித்த தகவல்களில் முரண்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததால், ஆய்வில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள், உலக நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவ தந்திரங்களை எதிர்கொள்ளும் விதத்தில் இந்தியாவும் இந்த பட்டியலில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது. வாருங்கள் ஸ்லைடரில் பல முக்கியத் தகவல்களோடு, ராணுவ பலத்தில் உலக நாடுகளின் வரிசைப்பட்டியலையும் காணலாம்.

10. துருக்கி
உலக அளவில் சக்திவாய்ந்த ராணுவ பலத்தை பெற்றிருக்கும் நாடுகளில் 10வது இடத்தை துருக்கி பெறுகிறது. ஆண்டுதோறும் ராணுவத்திற்காக 18 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. துருக்கியிடம் 4,10,500 ராணுவ வீரர்களு், 3,778 பீரங்கிகளும், 1,020 போர் விமானங்களும், 13 நீர்மூழ்கி போர்க்கப்பல்களும் உள்ளன.

09. ஜப்பான்
இரண்டாம் உலகப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜப்பான் ராணுவ பலத்தில் தற்போது 9வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டிடம் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. குறிப்பாக, ஜப்பான் கடற்படை மிக வலிமையானது. ஜப்பானிடம் 2,47,173 ராணுவ வீரர்கள், 678 பீரங்கிகள், 1,613 போர் விமானங்கள் மற்றும் 16 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

08. ஜெர்மனி
ராணுவ பலத்தில் ஜெர்மனி 8வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம், இதே பொருளாதார நிலை கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, ராணுவத்திற்கு மிக குறைவாக செலவிடும் நாடாக ஜெர்மனி இருக்கிறது. ஜெர்மனி ராணுவத்திடம் 1,79,046 ராணுவ வீரர்களும், 408 பீரங்கிகளும், 663 போர் விமானங்களும், 4 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஜெர்மனியின் கடற்படை வலிமை குறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.

07. தென்கொரியா
வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவே தென்கொரியா ராணுவ பலத்தை சிறப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. தென்கொரியாவிடம் 6,24,465 ராணுவ வீரர்களும், 2,381 பீரங்கிகளும், 1,412 போர் விமானங்களும், 13 நீர் மூழ்கி கப்பல்களும் உள்ளன. விமானப் படை வலுவிலந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், இங்கிலாந்து மற்றும் பிாரன்ஸ் நாடுகளைவிட இதன் கடற்படை சற்றே வலுமிக்கதாக தெரிவிக்கப்படுகிறது.

06. பிரான்ஸ்
ராணுவ வீரர்கள், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் போன்றவற்றில் எண்ணிக்கை அடிப்படையில் குறைவாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பங்களில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அளவுக்கு ராணுவத்திற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் பிரான்ஸிடம் 2,02,761 ராணுவ வீரர்கள், 423 பீரங்கிகள், 1,264 போர் விமானங்கள், 10 நீர்மூழ்கிக் கப்பல்கள், 4 விமானம் தாங்கி போர் கப்பல்களை பெற்றிருக்கிறது.

05. இங்கிலாந்து
ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக ஆண்டுதோறும் செலவிடுகிறது இங்கிலாந்து. இது இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டைவிட அதிகம். இங்கிலாந்திடம் 1,46,980 ராணுவ வீரர்கள், 407 பீரங்கிகள், 936 போர் விமானங்கள், 10 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது.

04. இந்தியா
ராணுவ வீரர்கள் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வரிசையில் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடத்தை பெறுகிறது. ஆனால், ஒட்டுமொத்த கணக்கீடுகளில் 4வது இடத்தை பெறுகிறது. இந்தியாவிடம் 13,25,000 ராணுவ வீரர்கள், 6,464 பீரங்கிகள், 1,905 போர் விமானங்கள், 15 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள், 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

03. சீனா
மூன்றாவது இடத்தை சீனா பிடித்ததற்கு முக்கிய காரணம் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் மிக முக்கிய காரணம். ஆம், சீன ராணுவத்திடம் 23,33,000 ராணுவ வீரர்கள் உள்ளனர். அத்துடன் 9,150 பீரங்கிகள், 2,860 போர் விமானங்கள், 67 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. ஒரேயொரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது. விமானம் தாங்கி போர்க்கப்பல் எண்ணிக்கையில் மட்டும் இந்தியா முன்னிலை பெறுகிறது.

02. ரஷ்யா
உலகின் மிக வலிமையான ராணுவத்தில் ரஷ்யா இரண்டாம் இடம் பெறுகிறது. ரஷ்யாவிடம் 7,66,055 ராணுவ வீரர்களும், 15,398 பீரங்கிகளும், 3,429 போர் விமானங்களும், 55 நீர்மூழ்கி போர்க்கப்பல்களும், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் உள்ளன. பீரங்கி மற்றும் போ் விமானங்கள் எண்ணிக்கையில் மிக வலிமையானதாக உள்ளது.

01. அமெரிக்கா
உலக நாட்டாமை என்று அழைக்கப்படும் அமெரிக்காதான் ராணுவ பலத்தில் நம்பர்- 1 இடத்தை பெறுகிறது. ஆண்டுதோறும் 600 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக கொட்டிக் கொடுக்கிறது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் ராணுவ பட்ஜெட்டை குறைக்க அந்த நாடு முடிவு செய்திருக்கிறது. அமெரிக்காவிடம 1,40,000 ராணுவ வீரர்களும், 8,848 பீரங்கிகளும், 13,892 போர் விமானங்களும், 72 நீர் மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை பெறுவதே கடினமான நிலையில், அமெரிக்காவிடம் 20 விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள் உள்ளன.

ராணுவ பலம் குன்றிய நாடுகள்
ராணுவ பலத்தை பெருக்குவதற்கு பல நூறு பில்லியன் டாலர்களை நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், பொருளாதாரத்தில் வலு குன்றிய நாடுகள், ராணுவ பலம் மிக்க நாடுகளை சேனை நாடுகளாக பாவித்து, வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. ஆபத்து காலங்களில் ராணுவ பலம் குன்றிய நாட்டிற்கு, ராணுவ பலம்மிக்க அதன் சேனை நாடுகள் உதவியும், ஒத்துழைப்பும் வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications








