போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் சக்திவாய்ந்த டாப் 10 ஆயுதங்கள்!
போரை ஏற்படுத்தும் நோக்கம் இல்லையெனினும், எதிரி நாடுகள் போர் தொடுக்க அஞ்சுவதற்காகவாவது, சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளுக்கும் உண்டு. அதிலும், பூகோள ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டு வரும் நம் நாடும் தனது ராணுவ பலத்தை மிகச்சிறப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்காக, பல நவீன போர்க் கருவிகளை இந்தியா பெற்றிருக்கிறது. ராணுவ பலத்தில் உலகின் 4வது பெரிய நாடு என்ற பெருமைமிக்க இந்தியாவின் சக்திவாய்ந்த 9 போர் கருவிகள் எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குகின்றன. வல்லாதிக்க நாடுகளேயே அஞ்சி நடுங்கச் செய்யும் இந்தியாவிடம் இருக்கும் அந்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. டி-90 பீஷ்மா
ரஷ்யாவின் மூன்றாம் தலைமுறை அம்சங்கள் கொண்ட முதன்மை போர் பீரங்கிதான் டி-90. பீஷ்மா என்ற பெயரில் இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வரும் இந்த பீரங்கி தரைத்தாக்குதல்களில் முன்னின்று எதிரிகளை துவம்சம் செய்யும் வல்லமை கொண்டது. ரஷ்ய ராணுவம் மற்றும் கடற்படையிலும் இந்த பீரங்கி பயன்பாட்டில் உள்ளது. இரவிலும் எதிரி இலக்குகள் மற்றும் படையினரின் நகர்வுகளை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்தவும், தற்காத்துக் கொள்வதற்கான வசதியும் உள்ளது. இந்த பீரங்கியை இயக்க 3 வீரர்கள் தேவைப்படுவர்.
Picture credit: cell105/Wiki Commons

டி-90 பீஷ்மா தாெடர்ச்சி...
இந்த பீரங்கியில் 43 ரவுண்டுகள் சுடக்கூடிய 125மிமீ விட்டம் கொண்ட முதன்மை துப்பாக்கி உள்ளது. அடுத்து 12.7மிமீ விட்டம் கொண்ட எந்திரத் துப்பாக்கியும் உள்ளது. மேலும், தீத்தடுப்பு வசதி, சக்திவாய்ந்த எஞ்சின், இரவில் எதிரி நகர்வுகளை கண்டறியும் நைட் விஷன் அசிஸ்ட், புகையை வெளித்தள்ளும் வசதி, லேசர் எச்சரிக்கை ரிசீவர்கள், எதிரிகளின் கண்களுக்கு எளிதில் புலப்படாத வண்ணக் கலவை போன்றவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. 46 டன் எடை கொண்ட இந்த பீரங்கியில் 950 எச்பி பவரை வழங்க வல்ல 12 சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின் உள்ளது. 550 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 60 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக செலுத்த முடியும்.
Picture credit: cell105/Wiki Commons

02. பிரம்மோஸ்
உலகிலேயே மிக நவீன ரக ஏவுகணைதான் பிரம்மோஸ். இந்திய- ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான குறைந்த தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ரகத்திலான ஏவுகணை. இலக்குகளை மிக துல்லியமாக அழிக்கக்கூடிய திறன் படைத்தது. தரையிலிருந்தும், கடலிலிருந்தும் ஏவக்கூடிய அம்சங்களை கொண்டது இதன் கூடுதல் சிறப்பு. நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.

பிரம்மோஸ் தொடர்ச்சி...
சூப்பர்சானிக் ரகத்தை சேர்ந்த பிரம்மோஸ் மேக்-3 வேகத்தில் பயணிக்கும். அதாவது, மணிக்கு 3,700 கிமீ வேகம் வரை பறந்து செல்லும். குறைந்தபட்சமாக 3முதல் 4 மீட்டர் உயரத்திலும், அதிகபட்சமாக 14 கிமீ உயரம் வரையிலும் இது பறக்கும் என்பதால், எதிரிகளின் ரேடார் கண்களில் எளிதில் சிக்காது. இலக்கிலிருந்து 1 மீட்டர் தூரத்திற்குள்ளாக தாக்குதல்களை நடத்தும் மிக துல்லியமான ஏவுகணை.

03. எம்ஐ-35 ஹிண்ட் இ
பன்முக பயன்பாட்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வரும் ஹெலிகாப்டர்தான் எம்ஐ-35 ஹிண்ட் இ. இதனை அக்பர் என்றும் குறிப்பிடுகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான துருப்புகளை போர் முனைக்கு உடனடியாக கொண்டு சேர்ப்பதற்கும், எதிரிகளின் இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பயன்படுத்த முடியும். போர்முனையில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி கொடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்த முடியும்.
Picture credit: Alan Wilson/Wiki Commons

எம்ஐ-35 ஹிண்ட் இ தொடர்ச்சி...
இந்த ஹெலிகாப்டரில் ஜிஎஸ்எச்-23வி என்ற 23மிமீ விட்டமுடைய இரட்டைக் குழல் துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 470 ரவுண்டுகள் வரை சுடமுடியும். ஒரு நிமிடத்திற்கு 3,600 ரவுண்டுகள் வரை சுடக்கூடிய திறன் படைத்தது இந்த துப்பாக்கி. பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை இதன் இறக்கைகளில் பொருத்தி செலுத்தி முடியும். இதுதவிர, லேசர் எச்சரிக்கை ரிசீவர்கள், ரேடார் கருவி, இலக்குகளை கண்டுபிடிக்கும் கருவி போன்றவையும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதி உயர மலைப்பிரதேசங்களிலும் இயக்க்கூடிய திறன் வாய்ந்த எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்ரன> மணிக்கு 310 கிமீ வேகத்தில் பறக்கும் என்பதோடு, 460 கிமீ தூரம் பயணிக்கும். முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 1,000 கிமீ தூரம் வரைகூட பயணிக்கும்.
Picture credit: Alan Wilson/Wiki Commons

04. அக்னி-5 ஏவுகணை
அக்னி குடும்ப வரிசையில் லேட்டஸ்ட் மாடல்தான் அக்னி-5 ஏவுகணை. தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கழகத்தால்[டிஆர்டிஓ] உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் இதுதான். எனவே, இருந்த இடத்திலிருந்தே பல ஆயிரம் கிமீ., தூரத்துக்கு அப்பால் இருக்கும் இலக்குகளை மிக துல்லியமாக அடித்து விடலாம். நம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிக முக்கியமான ஆயுதம் இது.

இதர விபரம்
அக்னி-5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கிமீ தூரம் வரை பயணிக்கும். மேக்-24 என்ற ஒலியைவிட 24 மடங்கு கூடுதல் வேகத்தில் பயணிக்கும். அக்னி-5 ஏவுகணையில் மிக மிக நவீன தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டுதல் அமைப்பு இருக்கிறது. எனவே, இதில் வைத்து செலுத்தப்படும் வெடிபொருட்கள் இலக்குகளை குறி தவறாமல் மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்.

05. பினாகா ராக்கெட் லாஞ்சர்
டிஆர்டிஓ அமைப்பால் உருவாக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர். கார்கில் போரில் பினாகா பயன்படுத்தப்பட்டது. அதாவது, ஏவுகணை ஏவும் கருவி. பினாகா மார்க்-1 மாடல் அதிகபட்சமாக 40 கிமீ தூரத்திற்கும், மார்க்-4 மாடல் அதிகபட்சமாக 65 கிமீ தூரம் வரையிலும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்டது.

பினாகா தொடர்ச்சி...
இந்த ராக்கெட் லாஞ்சர் பன்குழல் அமைப்புடையது. எனவே, ஒரே நேரத்தில் 12 ஏவுகணைகளை பொருத்த முடியும். வெறும் 44 வினாடிகளில் 12 எச்இ ராக்கெட்டுகளை ஏவிவிட முடியும். தரைத் தாக்குதல்களில் மிக முக்கியமான போர் கருவியாக விளங்குகிறது. இந்த ராக்கெட் லாஞ்சர் தத்ரா டிரக்கில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனை கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டிலும், நேரடியாகவும் கட்டுப்படுத்தி ராக்கெட்டுகளை ஏவ முடியும் என்பது மற்றொரு சிறப்பு.
Picture credit: Hemant.rawat1234/Wiki Commons

06. இஎல்-டபிள்யூ 2090
வான் வழியாக வரும் ஆபத்துக்களை கண்டறிந்து எச்சரிக்கும் ரேடார் சாதனம். இஸ்ரேல் நாட்டிடமிருந்து வாங்கப்பட்ட இந்த கண்காணிப்பு சாதனம் உலகிலேயே மிக நவீன ராணுவ உளவு ரேடார் அமைப்பாக கருதப்படுகிறது.எ இதனை ரஷ்யாவின் இலூசன் விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. வான் பகுதி கண்காணிப்பு, எதிரிகளின் நகர்வுகள் மற்றும் போர் விமானங்களின் நகர்வுகளை துல்லியமாக கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி கொண்டது.

இஎல்-டபிள்யூ 2090 தொடர்ச்சி...
இந்த ரேடார் சாதனத்தின் கண்காணிப்பை எதிரி நாடுகளால் கூட எளிதில் தடுக்கவோ, செயலிழக்க செய்யவோ இயலாது. இந்திய விமானப்படையின் மிக முக்கியமான போர் கருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு ரேடார் சாதனத்தின் மதிப்பு 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

07. பிருத்வி ஏவுகணை
இது நடுத்தர தூர வகை ஏவுகணை. பாகிஸ்தான் நாட்டின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காகவே, இந்தியா உருவாக்கிய ஏவுகணையாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் பேச்சு உலவுவது உண்டு. எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்குதல் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஏவுகணை.
Picture credit: Sniperz11/Wiki Commons

பிருத்வி தொடர்ச்சி...
பிருத்வி ஏவுகணை மேக்-5 என்ற வேகத்தில் பயணிக்கும். அதாவது, எதிரிகளின் ஏவுகணையை 5 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று வழிமறித்து அழித்துவிடும். 300 கிமீ தூரம் முதல் 2,000 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. எதிரிநாடுகள் அணு ஆயுதங்களை வைத்து ஏவுகணைகளை ஏவினால் கூட, வான் வெளியிலேயே அதனை தகர்த்து, தரையில் அதிக பாதிப்பை தவிர்க்கும் நுட்பத்துடனும், நோக்கத்துடனும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Picture credit: Ajai Shukla/Wiki Commons

08. சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ
இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பன்முக பயன்பாட்டு வகை போர் விமானம். எதிரி நாட்டு வான் பகுதியை கூட தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திறன் படைத்த.ு ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தின் தயாரிப்பு. இதனை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் உரிமம் பெற்று அசெம்பிள் செய்து இந்திய விமானப்படைக்கு வழங்குகிறது. உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த போர் விமான மாடல் என்ற பெருமையும் உண்டு.

சுகோய் தொடர்ச்சி...
அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் மிகச்சிறப்பாக இயங்கும். மேலும், எதிரிகளின் ஏவுகணை தாக்குதல்களிலிருந்து மிக எளிதாக தப்பும் விதத்திலான வடிவமைப்பு கொண்டது. மணிக்கு 2,120 கிமீ வேகத்தில் பறக்கும் என்பதோடு, ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,000 கிமீ தூரம் வரை பயணிக்கும். ஒரு விமானத்தின் மதிப்பு 358 கோடி ரூபாய். இதுவரை 242 சுகோய் எஸ்யூவி30 எம்கேஐ விமானங்கள் உற்பத்தியாகியுள்ளன. இதுதவிர, ஆற்றல் வாய்ந்த ரேடார் கருவி, 150 ரவுண்டுகள் சுடக்கூடிய ஜிஎஸ்எச்-30-1 மெஷின் கன், வானிலிருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், லேசர் வழிகாட்டுதல் நுட்பம் கொண்ட வெடிகுண்டுகளை பொருத்த முடியும்.
Picture credit: Chris Lofting/Wiki Commons

09. ஐஎன்எஸ் சக்ரா
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல். ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு வாங்கப்பட்டு விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு சேவையாற்றி வருகிறது. இந்தியாவிடம் இருக்கும் பிற நீர்மூழ்கி கப்பல்களின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக, துறைமுகத்திற்கு வர வேண்டி இருக்கும். இது போர் சமயங்களில் சற்று பாதகமான அம்சம். ஆனால், ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கி போர்க்கப்பலில் அந்த பிரச்னை இல்லை என்பதால், நீண்ட நாட்கள் கடலிலேயே மூழ்கி இருக்கும் சிறப்பம்சம் கொண்டது.
Picture credit: Indian Navy/Wiki Commons

ஐஎன்எஸ் சக்ரா தொடர்ச்சி...
உலகிலேயே மிகவும் விரைவாக செல்லக்கூடிய நீர்மூழ்கி கப்பல் என்ற பெருமையும் ஐஎன்எஸ் சக்ராவுக்கு உண்டு. இது மணிக்கு 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். அத்தோடு, 600 மீட்டர் ஆழம் வரை பயணிக்கும். போர் சமயத்தில் இதன் தலையாய பணி, எதிரி நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிப்பதுதான். சாதாரண நீர்மூழ்கி கப்பல்களைவிட இது இரண்டு மடங்கு கூடுதல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
Picture credit: Ajai Shukla/Wiki Commons

10. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
உலகிலேயே விமானம் தாங்கி போர்க்கப்பலை வைத்திருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரஷ்ய கடற்படையில் பணியாற்றிய கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி கப்பலை வாங்கி மறுகட்டமைப்பு செய்து ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற பெயரில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 60 மீட்டர் பீம் கொண்ட இந்த கப்பலை முடிந்தவரை நீட்டி பெரிதாக்கியுள்ளனர். இது மிக பிரம்மாண்டமான போர் கப்பல் 284 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. 3 கால் பந்து மைதானங்கள் அளவுக்கு இடவசதி கொண்டது. இதனை மிதக்கும் விமான தளமாக குறிப்பிடுகின்றனர். இந்த விமானம் தாங்கி கப்பல் 20 மாடிகள் கொண்ட கட்டடத்திற்கு இணையான உயரம் கொண்டது. இந்த கப்பலில் 1,600 பணியாளர்கள் இருக்கின்றனர். 5 நாட்களுக்கு கடலிலேயே இருக்கும் அளவுக்கு வசதிகள் கொண்டது. ஒரு மாதத்திற்கு இங்குள்ள பணியாளர்களுக்காக ஒரு லட்சம் முட்டைகள், 20,000 லிட்டர் பால், 16 டன் அரிசி போன்றவை தேவைப்படுமாம். புனரமைக்கப்பட்டபோது இதன் சமையலறை சப்பாத்தி, தோசை சுடும் வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளது. 400 டனசுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் 2 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

விக்ரமாதித்யா தொடர்ச்சி...
இந்த போர் கப்பலில் ஒற்றை இருக்கை கொண்ட மிக் 29கே ரக போர் விமானங்களும், இரட்டை இருக்கை கொண்ட மிக் 29கேயுபி போர் விமானங்களும் இருக்கும் வசதிகள் கொண்டது. இதுதவிர, கா-28 மற்றும் கா31 ரக ஹெலிகாப்டர்களும் இருக்கும். இந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சி தருவதற்கும், சிமுலேட்டர்கள் மற்றும் பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை பணிகளை ரஷ்யாவே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த போர் கப்பலில் இருக்கும் ரேடார் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் மூலம் 500 கிமீ தூரத்துக்கு கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்கு பின்னர் இந்த கப்பலில் ஏவுகணைகளை பொருத்தும் திட்டமும் உள்ளது.


Click it and Unblock the Notifications








