இப்போது விற்பனையில் இருக்கும் தோற்றத்தில் கவர்ச்சியற்ற சில கார் மாடல்கள்!

Posted By:

கார் வாங்குவோர் முதலில் பார்க்கும் விஷயம், டிசைன்தான். மேலும், விற்பனையில் வெற்றிகரமாக சில கார் மாடல்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமும் அதன் டிசைனாகத்தான் இருக்கிறது. இந்தநிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் கவர்ச்சியற்ற தோற்றம் கொண்ட சில கார் மாடல்களின் பட்டியலை வழங்கியிருக்கிறோம்.

இவை நல்ல கார்கள் இல்லை என்று சொல்ல வரவில்லை. பிற அம்சங்களில் சிறப்பாக இருந்தாலும், டிசைன் காரணமாக, விற்பனையிலும் அவை சொதப்பி வருகின்றன. கவர்ச்சியற்ற டிசைன் காரணமாக, மார்க்கெட்டை இழந்து நிற்பதை காண முடிகிறது. மேலும்,  மறு விற்பனை மதிப்பையும் பெற்றுத் தரும் என்று சொல்வதற்கில்லை. அந்த கார்களை ஸ்லைடரில் காணலாம்.

01. டாடா நானோ

01. டாடா நானோ

அதிக மைலேஜ், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறப்பான மாடல், ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்ற பல சிறப்புகளை கொண்டிருந்தாலும், டாடா நானோ காரின் தோற்றமே அதற்கு போதிய வரவேற்பு இல்லாமல் செய்துவிட்டது. டாடா நானோ தங்களது அந்தஸ்தை கெடுத்துவிடும் என்று வாடிக்கையாளர்களிடம் ஓர் அச்சம் இருப்பதும் உண்மை.

02. செவர்லே பீட்

02. செவர்லே பீட்

பட்ஜெட் விலையிலான டீசல் கார் மாடல், சிறப்பான இன்டிரியர், வசதிகள் இருந்தாலும், மிக குறைவான இடவசதி, கவர்ச்சியற்ற தோற்றம் போன்றவை இந்த காருக்கான மார்க்கெட்டை குலைத்துவிட்டது.

03. டொயோட்டா லிவா

03. டொயோட்டா லிவா

சிறந்த எஞ்சின், இடவசதி மற்றும் கட்டுறுதியான உடலமைப்பு போன்றவை இருந்தாலும், டொயோட்டா லிவா தனது கவர்ச்சியற்ற தோற்றம் காரணமாக, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக, பின்புற டிசைன் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

04. மஹிந்திரா குவான்ட்டோ

04. மஹிந்திரா குவான்ட்டோ

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த மஹிந்திரா குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவி தனது கவர்ச்சியற்ற தோற்றத்தால் வெற்றிபெற இயலவில்லை. சிறப்பான இடவசதி, செயல்திறன் மிக்க டீசல் எஞ்சின், வசதிகள் மற்றும் சரியான விலையில் வந்தும் குவான்ட்டோ எஸ்யூவி வெற்றி பெறாததற்கு அதன் தோற்றமே முக்கிய காரணமாக இருக்கிறது.

 05. மாருதி ரிட்ஸ்

05. மாருதி ரிட்ஸ்

செயல்திறன் மிக்க எஞ்சின் ஆப்ஷன், சரியான விலை, குறைவான பராமரிப்பு, மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் போன்ற அனைத்தையும் தாண்டி வாடிக்கையாளர்களை மாருதி ரிட்ஸ் கவரவில்லை. இதற்கு காரணம், இதன் பின்புற டிசைன் கவர்ச்சியாக இல்லை என்பதாகவே கருதப்படுகிறது.

06. ஹோண்டா பிரியோ

06. ஹோண்டா பிரியோ

மிகவும் எதிர்பார்ப்புடன் வந்த குறைவான விலை கொண்ட ஹோண்டா கார் மாடல். ஆனால், இதன் பின்புறத் தோற்றம் வாடிக்கையாளர்களை கவரவில்லை. மற்றபடி, சிறப்பான இடவசதி மற்றும் நம்பகமான ஹோண்டா பெட்ரோல் எஞ்சின் இருந்தும், டிசைனால் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது.

07. மஹிந்திரா ரேவா இ2ஓ

07. மஹிந்திரா ரேவா இ2ஓ

நவீன தொழில்நுட்ப வசதிகள், நான்கு பேர் செல்வதற்கான இடவசதி, குறைவான எரிபொருள் செலவு ஆகியவை இருந்தும், இந்தியாவின் ஒரே எலக்ட்ரிக் கார் மாடல். ஆனால், ஒரு முழுமையான காரின் தோற்றம் இல்லாமல் போனது மிகப்பெரிய மைனஸ். அத்துடன் அதிக விலையும் இந்த கார் பக்கம் பலரை நெருங்க விடவில்லை.

08. நிசான் சன்னி/ ரெனோ ஸ்காலா

08. நிசான் சன்னி/ ரெனோ ஸ்காலா

இடவசதியிலும், சிறப்பான எஞ்சின் ஆப்ஷன்களும் இருந்தும் நிசான் சன்னி கார் வெற்றி பெறாததற்கு, அதன் கவர்ச்சியற்ற தோற்றமும் முக்கிய காரணங்களில் ஒன்று. அதேபோன்று, இதன் ரீ-பேட்ஜ் மாடலான ரெனோ ஸ்காலாவும் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருந்தாலும், வாடிக்கையாளர்களை கவரவில்லை.

 09. டாடா மான்ஸா

09. டாடா மான்ஸா

சிறப்பான இடவசதி கொண்ட செடான் மாடலாக இருந்தாலும், டிசைன்தான் வாடிக்கையாளர்களை கவரவில்லை. மேலும், டாடாவின் விற்பனைக்கு பிந்தைய சேவையும் வாடிக்கையாளர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

10. மஹிந்திரா வெரி்டடோ வைப்

10. மஹிந்திரா வெரி்டடோ வைப்

சிறப்பான பூட்ரூம், இடவசதி கொண்டிருந்தாலும், வாடிக்கையாளர்களை மஹிந்திரா வெரிட்டோ வைப் கார் கவரவில்லை. அதற்கு முக்கிய காரணம், அதன் டிசைன்தான் என்றால் மிகையில்லை.

11. டாடா ஆரியா

11. டாடா ஆரியா

அதிக இடவசதியுடன், ஏராளமான சிறப்பம்சங்களையு வாரி வழங்கியும் டாடா ஆரியாவுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. அதன் டிசைன்தான் மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. தற்போது டாடா ஆரியா டிசைனில் சில மாற்றங்களை செய்து, எஸ்யூவி மாடலாக அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

 12. உங்கள் சாய்ஸ்...

12. உங்கள் சாய்ஸ்...

உங்களுக்கு பிடிக்காத டிசைன் கொண்ட கார் மாடல்களின் விபரத்தையும் கமென்ட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ளலாம். உடனுக்குடன் அப்ரூவல் செய்யப்படும். அடுத்து, இந்தியாவின் அழகான கார் மாடல்களின் பட்டியலை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

டிசைனில் கவர்ச்சியற்ற கார் மாடல்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ten Ugliest Cars For Sale Right Now In India

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark