7 பேர் உயிரை காவு வாங்கிய தனியார் பஸ் விபத்து! இதை மாட்டிருந்தா பிரச்சனையே வந்திருக்காது!

தென்காசியில் நேற்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 7 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? இந்த சம்பவத்தை எப்படி தடுத்திருக்க முடியும்? எதிர்காலத்தில் இது போன் சம்பவம் நடக்காமல் எப்படி தடுப்பது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தென்காசியிலிருந்து ராஜபாளையம் நோக்கி நேற்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவில்பட்டியிலிருந்து தென்காசி நோக்கி மற்றொரு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது. இரண்டு பஸ்களும் சரியாக கடையநல்லூர் அருகே உள்ள இடைகால், துரைசாமிபுரம் பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமான நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பஸ்களிலும் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள், ஊழியர்கள் காயமடைந்தனர். இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tenkasi Private Bus Accident

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பார்க்கும் போது தென்காசியிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற தனியார் பஸ் வேகமாக சென்றதாகவும் அப்பொழுது குறுக்கே நாய் வந்ததால் டிரைவர் எதிரில் வரும் பஸ்ஸை கவனிக்காமல் நாய் மீது மோதமல் இருக்க பஸ்ஸை திருப்பியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதி அதிக விபத்து நடக்கும் பகுதியாக இருக்கிறது. கடையநல்லூரிலிருந்து வரும் வாகனங்களும், தென்காசியிலிருந்து வரும் வாகனங்களும், நகர் பகுதியில் உள்ள டிராஃபிக்கிலிருந்து வெளியேறி வேகம் எடுக்கும் பகுதி இது நடுவில் பேரிகாட் இல்லாத சாலை இதனால் ஒரு வாகனத்தை முந்தி செல்பவர்கள் எதிரே வரும் வாகனத்தின் சாலையில் ஏறி சென்று தான் வாகனத்தை முந்தை வேண்டும்.

Tenkasi Private Bus Accident

இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துநடந்து வருகிறது. மேலும் இந்த பகுதி சுமார் 1.5-2 கி.மீ வரை நேராக உள்ள சாலை என்பதால் வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளில் வேகமாக செல்ல முயற்சி செய்வார்கள். இதுவும் விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழகம் முழவதும் தனியார் பேருந்துகளுக்கு இடையே போட்டி இருக்கிறது. இதனால் வேகமாக பயணிக்கிறார்கள்.

இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவம் நடக்க தனியார் பஸ் வேகமாக வந்தது மற்றொரு காரணமாக இருக்கிறது.சம்பவ இடம் விபத்து நடக்கும் பகுதியாக இருப்பது மற்றொரு காரணம் என்றால் வேகமாக பஸ் ஓட்டி வந்தது மற்றொரு காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களையும் சரி செய்தால் எதிர்காலத்தில் இந்த இடத்தில் இப்படியான சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க முடியும்.

குறிப்பிட்ட துரைசாமிபுரம் பகதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்து நடுவில் பேரிகாட் அமைத்தால் எதிரே வரும் வாகனங்கள் செல்லும் சாலைக்கு மற்ற வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் முந்தும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியும். அதே நேரம் பள்ளி வாகனங்களில் உள்ளது போலதனியார் பஸ்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவியை கட்டாயமாக்க வேண்டும்.

குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனங்கள் பயணிக்ககூடாது என ஒவ்வொரு சாலைக்கும் வேககட்டுப்பாடுகள் உள்ளது. குறிப்பிட்ட ரூட்டில் ஓடும் பஸ்கள் அந்த சாலைகளுக்கு உள்ள குறிப்பிட்ட வேக அளவை பின்பற்றி வேக கட்டுப்பாடு கருவிகளை பொருத்தினால் இதுபோன்று அதிக வேகமாக பயணித்து விபத்து ஏற்படும் வாய்ப்பு வெகுவாக குறையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்காசியில் ஏற்பட்ட சாலை விபத்திற்கு அதிக வேகம் முக்கியமான காரணமாக இருக்கிறது. பள்ளி வாகனங்களை போல தனியார் வாகனங்களுக்கும் வேககட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். இதனால் பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்பு வெகுவாக குறையும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 13:00 [IST]
English summary
Tenkasi bus accident reason and speed limiter need for private bus
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+