வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

Written By:

ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் ஒவ்வொரு புது பயண அனுபவம் கிடைப்பது ரயில் பயணத்தில் தான். வாழ்வில் ரசனையே இல்லாதவர்கள் ரயிலில் பயணம் செய்தால் ரசிக்க துவங்கி விடுவர்.

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

இப்படி பட்ட ரயில் பயணத்தில் நீங்கள் ரசிக்க வேண்டிய பல இடங்கள் இருக்கிறது. இந்த இடத்தில் தற்போது புதிதாக இணைந்திருப்பது தான் தென்காசி - கொல்லம் ரயில் பாதை

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

இந்த பெயரை நீங்கள் இப்பொழுதுதான் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால் இந்த இடத்தை நீங்கள் பார்த்திக்க அதிக வாய்ப்பு உண்டு, திருடா திருடா படத்தில் குகைக்குள் வைத்து ரயிலில் சண்டை போடும் காட்சி

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

இடம் கற்றது தமிழ் படத்தில் கதாநாயகனும், நாயகியும் சிறுவயதில் தங்கள நாயை தொலைத்து, கிளைமேக்ஸில் தாங்களே ரயில் குகைக்குள் சென்று உயிரை விடும் காட்சி என தமிழ் சினிமாவில் பேசப்படும் பல படங்களில் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டிருந்தன.

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

இது பாதையை இந்தியாவில் பிரிட்டிஷ் காரர்கள்ஆட்சி செய்தபோது கட்டப்பட்டது. 1888ம் ஆண்டு இதற்கு திட்டம் போடப்பட்டு 1900வது ஆண்டு இந்த பாதையை அமைக்க துவங்கினர். இந்த பாதை வழியாக 1902 ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் சென்றது. 1904 ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் சென்றது. அப்பொழுது மீட்டர் கேஜ் ரயில் பாதை பயன்பாட்டில்இருந்து

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

இந்த பாதை கடந்த 2010ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையாகவே தான் இருந்தது. அதன் பின் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு கடந்த வாரம் தான் பயன்பாட்டிற்கு வந்தது.

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

சுமார் 45 கி.மீ., ரயில் பாதையை 8 ஆண்டுகளாக போட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். இவ்வளவு சவாலானது இந்த பாதை. மலைகள் காடுகள் என இந்த பாதை முழுவதும் கரடுமுரடு பகுதிகளால் ஆனாது.

பகவதிபுரம் என்ற ரயில் நிலையத்தில் இருந்து புனலூருக்கு இடையான ரயில் பாதை முழுவதும் மலை மற்றும் காட்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் பயணம் செய்யும் அனுபவமே தனிதான்.

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

பசுமையாக ஓங்கி உயர்ந்த மரங்கள், மழை காலங்களில் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பசுமை காட்சிகள், ரயில் சத்தத்திற்கு இடையே பறவைகள் சத்தம் என நீங்கள் இதுவரை பெற்றிறாத ஆனுபவமாக இது இருக்கும்.

இந்த பாதையில் ஏற்கனவே 2 பெரிய குகை உட்பட 5 குகைகள் இருந்தது. அகல ரயில் பாதை உருவாக்கப்பட்ட பின்பு 1 குகை புதிதாக அமைக்கப்ட்டு தற்போது மொத்தம் 6 குகைகள் உள்ளது.

இந்த பாதையில் உண்ணத அனுபவமே இந்த குகைகள் தான் இந்தியாலேயே மொத்தம் 25 ரயில் பாதைகளில் தான் குகைகள் உள்ளது. இதில் இதுவும் ஒன்று

மேலும் தென் இந்தியாவில் உள்ள குகைகள் உள்ள ஒரே ரயில் பாதையாக இந்த ரயில் பாதை உள்ளது. இது தென்னிந்திய ரயில் பயண ரசனையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாகவே இருக்கும்.

இந்த பாதையில் இதுமட்டுமல்லாமல் கேரள மாநிலம் ஆரியங்காவு - தென்மலை இடையே கழித்துருத்தி 13 கண் பாலம் என்ற இடம் இருக்கிறது. அந்த பாலம் அமைந்துள்ள பகுதி மிகவும் ரம்மியான இயற்கை காட்சியுடன் அமைந்திருக்கும்.

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

சுமார் 108 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 102.7 மீட்டர் நீளம் கொண்டது இந்த பாதை முற்றிலும் கல்தூண்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்திற்கு கீழேயே ரோடும் உள்ளது. இதனால் இந்த பாலத்தில் ரயில் போகும் போது ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ரயில் செல்லும் அழகை ரசிப்பார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்த ரயில் பாதை நாம் வாழ்வில் ஒரு முறையாவது சென்று ரசிக்க வேண்டிய பகுதி. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தவற விட்டு விடாதீர்கள்.

தற்போது சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில் இந்த பாதை வழியாகதான் செல்கிறது.

வாழ்நாளில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய தென்காசி - கொல்லம் ரயில் பயணம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5.30க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் புறப்படுகிறது. மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.

அதேபோல் சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 05.05க்கு சென்னை எழும்பூர் வந்தடையும் இந்த ரயில் தற்காலிகமாக இயக்கப்பட்டலும். இதை நிரந்தமாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

02.ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

03.பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

04.சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Never miss Tenkasi - Kollam Train Experience. Read in Tamil

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark