தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஆம்பிபியஸ் சொகுசு பஸ்சில் ஒரு ரவுண்டு!

By Saravana

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஆம்பிபியஸ் வாகனங்கள் பற்றிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பலவற்றை படித்திருப்பீர்கள். அதில், ரொம்ப ஸ்பெஷலானது இந்த ஆம்பிபியஸ் பஸ்.

இதனை ஸ்பெஷல் என குறிப்பிடுவதற்கான காரணம், உலகிலேயே மிகவும் சொகுசான ஆம்பிபியஸ் வாகனமாக இதனை குறிப்பிடப்படலாம். வெயில் சுட்டெரிக்கும் இவ்வேளையில், இந்த பஸ்சில் ஒரு குளு குளு பயணம் செல்லலாம்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

கூல் ஆம்பிபியஸ் மேனுஃபேக்ச்சரர்ஸ் இன்டர்நேஷனல்[CAMI] என்ற நிறுவனம்தான் இந்த சொகுசு வசதிகள் நிரம்பி வழியும் ஆம்பிபியஸ் பஸ்சை கட்டித் தருகிறது. இதுதவிர, ஏராளமான ஆம்பிபியஸ் வாகனங்களை இந்த நிறுவனம் தயாரித்து கொடுத்து பெயர் பெற்றிருக்கிறது.

மாடல் விபரம்

மாடல் விபரம்

இந்த பஸ் டெர்ரா விண்ட் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. சுற்றுலா மற்றும் நீர்வழித்தட போக்குவரத்துக்கு முக்கியத்தும் பெற்ற பகுதிகளில் இயக்குவதற்கான ஏற்ற மாடல்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில், 49 பேர் வரை செல்லத்தக்கத வகையில், இந்த ஆம்பிபியஸ் பஸ்களை CAMI நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

மோட்டார் இல்லம்

மோட்டார் இல்லம்

CAMI நிறுவனத்தின் சொகுசு மாடலான டெர்ரா விண்ட் பஸ்சில் அதிகம் பேர் செல்ல முடியாது. தனி நபர் பயன்பாடு மற்றும் சுற்றுலா சொகுசு சுற்றுலா விரும்பிகளுக்கும், வித்தியாசமான பயண விரும்பிகள், ஹனிமூன் ட்ரிப் செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ளது.

வேகம்

வேகம்

இந்த பஸ் தரையில் மணிக்கு 80 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் 7 நாட்டிக்கல் மைல் வேகத்திலும் செல்லும்.

காக்பிட்

காக்பிட்

இதன் காக்பிட் விமானத்தை போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தரையிலும், தண்ணீரிலும் செல்வதற்கு ஏற்ற கட்டுப்பாட்டு அம்சங்களை கொண்டுள்ளது. இது பிரத்யேகமான நேவிகேஷன் வசதியையும் கொண்டுள்ளது.

இயக்கம்

இயக்கம்

தண்ணீரில் செல்வதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை மிக எளிதாக தொடுதிரை மூலம் இயக்க முடியும். தண்ணீரில் திருப்புவதும் மிக எளிது.

கஸ்டமைஸ் வசதிகள்

கஸ்டமைஸ் வசதிகள்

வெளிப்புறத்தை கண்டு ரசிப்பதற்கு வசதியாக பெரிய கண்ணாடி ஜன்னல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் ஜன்னலையொட்டி, மிகவும் சொகுசான இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன.

இதர வசதிகள்

இதர வசதிகள்

டிவி திரை, சமையலறை வசதிகள், பஸ்சின் பக்கவாட்டில் கூடாரம் அமைப்பதற்கான வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. உட்புறம் முற்றிலும் மர அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

படுக்கை வசதி

படுக்கை வசதி

இந்த பஸ்சில் சொகுசான இருக்கை மட்டுமின்றி, மோட்டார் ஹோம் போல படுக்கை வசதியும் உள்ளது. இதனால், எந்த ஒரு இடத்திலும், சொகுசாகவும், பாதுகாப்பாகவும் தங்குவதற்கான வசதி கொண்டது.

குளு குளு வசதி

குளு குளு வசதி

இந்த பஸ் முழுவதுமாக க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்டது. இதனால், எந்த ஒரு சீதோஷ்ண நிலையிலும் சிறப்பானதாக இருக்கும்.

 மீன்பிடி வசதி

மீன்பிடி வசதி

பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கும் ஆர்வமுடையவர்களுக்கான வசதியும் உள்ளது.

மின் வசதி

மின் வசதி

பிரத்யேக ஜெனரேட்டர் மூலமாக இந்த மோட்டார் இல்லத்திற்கான மின்சார வசதி பெறப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஆம்பிபியஸ் மோட்டார் இல்லத்தில் கேட்டர் பில்லர் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அலிசன் கியர்பாக்ஸ் கொண்டது.

தீத்தடுப்பு வசதி

தீத்தடுப்பு வசதி

இந்த மோட்டார் இல்லத்தில் இரண்டு தீத்தடுப்பு சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்கிறது.

விலை

விலை

ஒரு மோட்டார் இல்லத்தின் விலை 1.2 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சரிதான்...

சரிதான்...

எல்லாம் சரி, இந்த மோட்டார் இல்லத்தில் வாங்குவது இயலாத காரியம். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செலவதற்கும் தற்போது இயலாத நிலை உள்ளது என்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அடுத்த பக்கத்தில்...

கோவாவில்...

கோவாவில்...

முதல்முறையாக இதுபோன்ற ஆம்பிபியஸ் பஸ்சை கோவா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அனுமதி

அனுமதி

இந்த பஸ்களை இயக்குவதற்கு நீண்ட தாமதத்திற்கு பின்னர் அனைத்து அனுமதிகளையும் கோவா சுற்றுலா வளர்ச்சி கழகம் பெற்றிருக்கிறது.

மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

இந்த ஆம்பிபியஸ் பஸ் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இவை தரையிலும், தண்ணீரிலும் செல்லும் என்பதுடன், கடலிலும் இயக்கும் சிறப்பு வாய்ந்தது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஒரு பஸ்சில் 29 பேர் பயணிக்கும் இருக்கை வசதியுடன் இந்திாயவின் முதல் ஆம்பிபியஸ் பஸ் கட்டப்பட்டிருக்கிறது.

சாதாரண மாடல்

சாதாரண மாடல்

தற்போது நீங்கள் படத்தில் பார்ப்பது போல அல்லாமல், இது சாதாரண வகை பஸ் மாடலாக இருக்கும். தரையிலிருந்து நேரடியாக கடலில் இறங்கி மிதந்து செல்லும்போது புதுவித பரவசத்தை தரும். எனவே, கோவா சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள், இந்த பஸ் சர்வீஸ் துவக்கம் குறித்து தெரிந்து கொண்டு செல்வது சிறப்பானது.

தனியார் வசம்

தனியார் வசம்

கோவாவில் ஆம்பிபியஸ் பஸ் சேவையை வழங்குவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

கோவா நிறுவனம்

கோவா நிறுவனம்

கோவாவை சேர்ந்த ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன் ஆஃப் கோவா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விரைவில்...

விரைவில்...

கோவாவில், விரைவில் இந்த ஆம்பிபியஸ் பஸ் சேவையை துவங்க இருப்பதாக கோவா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தி வந்தால், உடனடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இது நிச்சயம் புது வித அனுபவத்தை தரும்.

உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லம்

உலகின் காஸ்ட்லியான மோட்டார் இல்லம்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Terra Wind Luxurious Amphibious Motor Home.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X