குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

டெஸ்லா காரின் ஆட்டோ பைலட் அமைப்பு சாலையில் தனக்கு முன்பாக சென்ற குதிரை வண்டியை பெரிய கனரக லாரி என கருதி குழம்பியுள்ளது.

Recommended Video

Mahindra Scorpio Classic Unveil Tamil Walkaround | புதிய அவதாரம் எடுத்த மஹிந்திரா ஸ்கார்பியோ!

எங்கு இந்த விசித்திரமான சம்பவம் நடந்தது என்பது குறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் பயன்பாடு வேகமாக பெருகி வருவதற்கு டெஸ்லா முக்கிய காரணமாக விளங்கி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் அமெரிக்க நாடுகளில் பலரது முதல் தேர்வாக மாறி வருகின்றன.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

அமெரிக்க கண்டங்கள் மட்டுமின்றி, நமது அண்டை நாடான சீனாவிலும் உள்நாட்டு இவி நிறுவனங்களை முந்திக்கொண்டு டெஸ்லா அதிகளவில் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், டெஸ்லா எலக்ட்ரிக் கார்களில் அவ்வப்போது புதியதாக அறிமுகப்படுத்தப்படும் தொழிற்நுட்பங்கள் என சொல்லலாம்.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

இந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னர் ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ பைலட் வசதியை தனது கார்களில் டெஸ்லா நிறுவனம் கொண்டுவந்தது. அதாவது இந்த வசதியின் மூலமாக நாம் காரை இயக்க தேவையில்லை, செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்தால் போதும், கார் தானாகவே இயங்கி அந்த இடத்திற்கு சென்றுவிடும்.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

உலகம் முழுவதிலும் பலரது கவனத்தை பெற்ற இந்த தொழிற்நுட்ப வசதி ஆரம்பத்தில் பல்வேறுக்கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டெஸ்லாவின் ஆட்டோ பைலட் வசதி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியது.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

அதுமட்டுமின்றி, ஆட்டோ பைலட் மோடில் கார் இயங்கி கொண்டிருக்கும்போது பயணிகள் ஓட்டுனரின் இருக்கைக்கு சென்று அதன் செயல்பாடுகளில் தலையிட செய்ததும் டெஸ்லாவிற்கு தலைவலியாக அமைந்தது. ஆனால் தற்போது இந்த விஷயங்கள் அனைத்தும் ஓரளவிற்கு சுமூகமாகி, பல்வேறு நாடுகளில் பலர் டெஸ்லாவின் ஆட்டோ பைலட் வசதியை விரும்பி பயன்படுத்திவரும் நிலையில், தற்போது புதியதொரு சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் தொழிற்நுட்பம் ஆனது நாவிகேஷன், சென்சார், ஜிபிஎஸ் ஆகியவற்றின் உதவியுடன் செயல்படக்கூடியதாகும். பயணத்தின்போது சாலையில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக காரை நிறுத்தும் விதமாக இந்த தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

முன்பாக வாகனம் சென்றாலோ அல்லது எதிராக வாகனம் வந்தாலோ அவை எத்தகைய வாகனம் என்பதை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றப்படி காரின் செயல்பாடுகளை ஆட்டோ பைலட் தொழிற்நுட்பம் மாற்றிக்கொள்ளும். மேலும், காருக்கு முன்பாக எத்தகைய வாகனம் செல்கிறத என்பதை டேஸ்போர்டில் இருக்கும் தொடுத்திரையின் மூலமாக பயணிகள் தெரிந்துக்கொள்ளலாம்.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

ஆனால் மிகவும் சில வாகனங்களை முறையாக ஆட்டோ பைலட் சிஸ்டம் அடையாளம் காணுவதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, பழமையான வாகனங்களையும், குதிரை போன்ற விலங்குகள் மூலமாக இயங்கும் வாகனங்களையும் டெஸ்லாவின் இந்த அதிநவீன தொழிற்நுட்பம் அடையாளம் காணுவதில் திணறுவதாக இதற்கு முன்னர் சிலர் இணையத்தில் தெரிவித்திருந்தனர்.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

அதேபோன்றதொரு சம்பவம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒருவர் தனது டெஸ்லா ஒய் மாடல் காரில் ஆட்டோ பைலட் வசதியின் உதவியுடன் சென்றுக் கொண்டிருந்த போது அவரது காருக்கு முன்னே சற்று தூரத்தில் குதிரை வண்டி சென்று கொண்டிருந்துள்ளது. ஆனால் திரையிலோ சைக்கிள் முன்பக்கமாக செல்வதாக காட்டப்பட்டது.

குதிரை வண்டியை பார்த்து குழம்பிய டெஸ்லாவின் ஆட்டோ பைல்ட் சிஸ்டம்!! அப்படி என்ன தான் ட்ரெயினிங் கொடுத்தாங்களோ!

இது கூட பரவாயில்லை, அவரது கார் குதிரை வண்டியை சற்று நெருங்கிய உடன் சைக்கிள் லாரியாக மாறியது. அதாவது, கார் குதிரை வண்டியை நெருங்க நெருங்க குதிரை வண்டி பெரியதாக தெரிந்ததை வைத்து முன்பக்கமாக லாரி செல்வதாக ஆட்டோ பைலட் சிஸ்டம் புரிந்து கொண்டுள்ளது.

இதனை அந்த டெஸ்லா காரில் இருந்தவர் தனது செல்போனில் காட்சிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவினை கண்ட நெட்டிசன்கள் பலரும் டெஸ்லா நிறுவனத்தையும், எலான் மஸ்க்கையும் டேக் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

Article Published On: Wednesday, August 24, 2022, 15:12 [IST]
English summary
Tesla autopilot confuses horse cart with truck
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+