இந்திய கல்யாண ஊர்வலத்தில் வேற்று கிரக வாசிகளின் ஸ்பேஸ்ஷிப்! மாலைலாம் போட்டு நம்ம ஊரு வண்டியா மாத்தீட்டாங்க!
இந்தியாவின் முன்பெல்லாம் திருமண ஊர்வலங்களில் குதிரைகள் பயன்படுத்தப்படும். குதிரை மீது மணமகன் கம்பீரமாக அமர்ந்து வருவார். ஆனால் தற்போதெல்லாம் இந்திய மக்களின் திருமண ஊர்வலங்களில் குதிரைகளை காண முடிவதில்லை. அதற்கு பதிலாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மணமகனை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரும் வழக்கம்தான் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊர்வலத்திற்கு பெரும்பாலும் சாதாரண கார்களைதான் இந்திய மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியர்களின் ஒரு திருமணத்தில் தற்போது டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சைபர்டிரக் ஓனர்ஸ் ஒன்லி (Cybertruck Owners Only) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், இது தொடர்பான புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. ஜூலியான் ஜேபி (Julyon JB) என்பவர் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஒரு இந்திய திருமண நிகழ்ச்சிக்காக டெஸ்லா சைபர்டிரக் வாகனம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனால் டெஸ்லா சைபர்டிரக் வாகனம் இந்தியர்களின் திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக மற்றொரு டெஸ்லா சைபர்டிரக் வாகனம் இந்தியர்களின் திருமண ஊர்வலத்தில் டிஜே வாகனமாக பயன்படுத்தப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்றும் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
இந்த சிறிய வீடியோவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தில், முழுமையான டிஜே செட்-அப் உடன் பாடல்கள் இசைக்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இப்படி இந்தியர்களால் தற்போது பரவலாக திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் டெஸ்லா சைபர்டிரக் உலகம் முழுக்க பிரபலமாக உள்ள வாகனங்களில் ஒன்றாகும்.
சைபர்டிரக் என்பது அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் ஆகும். பார்ப்பதற்கு ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப் போன்ற வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டெஸ்லா சைபர்டிரக் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெஸ்லா நிறுவனம் இன்னும் இந்திய சந்தையில் நுழையவில்லை. எனவே டெஸ்லா சைபர்டிரக் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. ஒருவேளை டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தாலும் கூட, சைபர்டிரக் இங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பது சந்தேகம்தான்.
ஏனெனில் இது இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருப்பது மிகவும் சிரமம். இருப்பினும் டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை நாம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம். டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை என்பது மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஒரு விஷயம் ஆகும்.
ஆனால் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில், இந்தியாவின் மத்திய அரசுக்கும், டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. தற்போது இந்த பிரச்னைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் பல்வேறு பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை (Elon Musk) அவர் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகுதான், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளிவந்தன.
தற்போதைய நிலையில் புது டெல்லி மற்றும் மும்பை ஆகிய 2 நகரங்களில், ஷோரூம்களை திறக்க டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, அதாவது அடுத்த மாதத்தில் இருந்து, இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவன வாகனங்களின் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








