துபாயில் இப்படியொரு பணக்காரரா... இந்தியாவை பெருமைப்படுத்திட்டாரு!! சொந்த ஊர் எது தெரியுமா?

டெஸ்லா (Tesla) நிறுவனம் நீண்ட கால ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய எலக்ட்ரிக் வாகனம் சைபர்டிரக் (Cybertruck) ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா சைபர்டிரக் வாகனம் உலகின் பல நாடுகளில் தற்சமயம் விற்பனையில் உள்ளது. ஆனால், இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஆனால் அதற்காக இந்தியர்கள் யாரிடமும் சைபர்டிரக் இல்லை என நினைத்துவிட வேண்டாம். ஏனெனில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரிடம் இந்த டெஸ்லா வாகனம் உள்ளது. அவ்வாறு, துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது சைபர்டிரக் வாகனத்திற்கு இந்திய தேசிய கொடியின் நிறங்களில் பெயிண்ட் கொடுத்துள்ளார்.

டெஸ்லா சைபர்டிரக்கின் முக்கிய சிறப்பம்சமே அதன் தோற்றம் ஆகும். பிரம்மாண்டமான உடலமைப்பில், கம்பீரமான தோற்றத்தை கொண்டதாக சைபர்டிரக் உள்ளது. இதற்கேற்ப, இந்த வாகனத்தை சேதப்படுத்துவது எளிதான காரியம் கிடையாது என டெஸ்லா நிறுவனம் தெரிவிக்கிறது. கம்பீரமான தோற்றத்தை கொண்டிருப்பினும், சைபர்டிரக்கின் டிசைன் மிகவும் எளிமையானது ஆகும்.

cybertruck in indian flag colours

அதாவது, காருக்கு வெளியே அலங்கரிப்புகள் பெரியதாக கிடையாது. சிம்பிளான டிசைனில், எவரொருவராலும் எளிதில் வரைந்துவிடக்கூடியதாக சைபர்டிரக் விளங்குகிறது. ஆனால் உண்மையில், இத்தகைய தோற்றம் தான் சைபர்டிரக்கை உலகம் முழுவதும் பிரபலமாக்கி உள்ளது. டெஸ்லா சைபர்டிரக் ஆனது ஒரு பிக்அப் டிரக் வாகனமாகும். அதாவது, இந்த வாகனத்தில் பொருட்களை வைத்து கொண்டு செல்லலாம். மேலும், பொருட்களை வைக்கும் பகுதிக்கும் சேர்த்து மேற்கூறை வழங்கப்படுகிறது.

துபாயில் டெஸ்லா சைபர்டிரக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு துபாயில் சைபர்டிரக்கை வாங்கிய இந்தியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவர் வாகனத்தை இந்திய தேசிய கொடியின் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் பெயிண்ட் செய்துள்ளார். மேலும், இந்திய தேசிய கொடியில் உள்ளதை போன்று, அசோக சக்கரத்தையும் தனது சைபர்டிரக் வாகனத்தில் வரைந்துள்ள அவர், இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

cybertruck in indian flag colours

துபாயில் இவ்வாறு இந்தியாவை கௌரவப்படுத்தி உள்ள இந்த தொழிலதிபரின் பெயர், இக்பால் ஹத்பூர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவரான இந்த தொழிலதிபர் இந்த சைபர்டிரக் குறித்த படங்களையும், வீடியோக்களையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில், கையில் தேசிய கொடி உடன் இக்பால் ஹத்பூர் தனது சைபர்டிரக்கில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே கூறியதுபோல், தற்சமயம் உலகின் விசித்திரமான வாகனமாக டெஸ்லா சைபர்டிரக்கை சொல்லலாம். இந்த எலக்ட்ரிக் பிக்அப் டிரக் வாகனத்தை முதல்முறையாக 2019ஆம் ஆண்டில் டெஸ்லா நிறுவனம் உலகிற்கு காட்டியது. ஆனால், கிட்டத்தட்ட 4 வருட ஆய்வு & சோதனைகளுக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் டெஸ்லா சைபர்டிரக் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.

cybertruck in indian flag colours

வளையாத இரும்பினால் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்க முடியாது. அதேபோல், சைபர்டிரக்கின் ஜன்னல் கண்ணாடிகளையும் அவ்வளவு எளிதாக உடைத்துவிட முடியாது. இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் அல்லது 3 மோட்டார்கள் உடன் சைபர்டிரக் விற்பனை செய்யப்படுகிறது. 2-மோட்டார் வெர்சனில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த வாகனம் வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.

3-மோட்டார் வெர்சனில் இந்த வேகத்தை எட்ட வெறும் 2.6 வினாடிகள் மட்டுமே தேவைப்படும். 2-மோட்டார்களை கொண்ட சைபர்டிரக்கின் பேட்டரிகளை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 547கிமீ தொலைவிற்கும், 3-மோட்டார்களுடன் 514கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என்கிறது டெஸ்லா நிறுவனம். இந்த ரேஞ்ச் போதாது என்பவர்கள் கூடுதல் பேட்டரிகள் உடனும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் வசித்தாலும், நம் இந்தியர்களுக்கு எப்போதுமே நாட்டு பற்று அதிகம் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அதற்கு மற்றொரு சாட்சியாகவே, துபாயில் வசிக்கும் இந்த கேரள தொழிலதிபர் தற்போது தனது டெஸ்லா சைபர்டிரக் வாகனத்திற்கு இந்திய தேசிய கொடியின் நிறங்களில் பெயிண்ட் கொடுத்துள்ளார். இந்த நிறங்களில் சைபர்டிரக் பார்ப்பதற்கு உண்மையில் அருமையானதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2024, 14:59 [IST]
English summary
Tesla cybertruck in indian national flag colours owned by kerala entrepreneur
மேலும்... #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X