“ப்பா என்னா சூடு” நீச்சல் குளத்தில் குளிக்கும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்!! எப்படி இது நடந்ததுனு தெரியுமா?

டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்று நீச்சல் குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி உள்ளது. நீரில் மூழ்கிய டெஸ்லா காருக்கு அதன்பின் என்ன நடந்தது? என்பதையும், இந்த விபத்தில் சிக்கிய டெஸ்லா கார் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

டெஸ்லா கார்களை சுற்றி எப்போதும் சர்ச்சைகளும், அதேநேரம் பாராட்டுகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில் குறிப்பாக, டெஸ்லா எலக்ட்ரிக் காரை வாங்குவோர்க்கு மட்டும் அப்படி எங்கிருந்துதான் ஐடியா வருமோ என்று தெரியாது. டெஸ்லா கார்களில் உள்ள தொழிற்நுட்ப அம்சங்களும், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் காரை இயக்குவோரை அவ்வாறு யோசிக்க வைக்கின்றன.

tesla ev fell into pool

இந்த நிலையில், அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் டெஸ்லா கார் ஒன்று சுவற்றை இடித்துக்கொண்டு நீச்சல் குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. இந்த காட்சிகள் அனைத்தையும் வீட்டின் உரிமையாளர் நேரில் பார்த்துள்ளார். அதாவது, டெஸ்லா கார் ஒன்று வீட்டின் மதுச்சுவற்றை உடைத்துக்கொண்டு, நீச்சல் குளத்தில் விழுந்ததை வீட்டின் உரிமையாளர் சம்பவத்தின்போது நேரில் கண்டுள்ளார்.

சுவற்றை உடைத்துக்கொண்டு, நீச்சல் குளத்தில் மூழ்கினாலும், விபத்திற்குள்ளான டெஸ்லா காருக்குள் இருந்த டிரைவருக்கு பெரியதாக எந்த காயமும் இல்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விபத்திற்குள்ளான டெஸ்லா காரும், அது ஏற்படுத்திய சேதத்திற்குள்ளான வீட்டின் வளாகம் மற்றும் நீச்சல் குளமும் பலத்த சேதமடைந்துள்ளன. குறிப்பாக, நீச்சல் குளத்தில் சிக்கிக்கொண்ட டெஸ்லா கார் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலத்த சேதமடைந்துள்ளது.

tesla ev fell into pool

இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்து அறியும் முயற்சியில் போலீஸார் ஈடுப்பட்டு வருகின்றனர். ஓட்டுனரின் செயலால் இந்த விபத்து நடந்ததா அல்லது காரின் தொழிற்நுட்ப கோளாறு இதற்கு காரணமா என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த கார் விபத்தினால் சேதமடைந்துள்ள வீட்டின் உரிமையாளர் பெயர் ஜோ பபினேயூ.

இந்த விபத்து குறித்து பபினேயூ கூறுகையில், "இது எல்லாம் நடக்கும்போது நான் படுக்கையில் படுத்து கொண்டு இருந்தேன். பெரிய மோதல் மற்றும் பெரிய வெடிப்பு போன்ற சத்தம் திடீரென எனக்கு கேட்டது" என்றார். வேறொரு கார் இடித்த காரணத்தினாலேயே இந்த டெஸ்லா கார் விபத்து நடந்திருக்கும் என பபினேயூ நம்புகிறார். விபத்து நடந்த போது, விபத்தை தடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பலனளிக்காமல் போனதாக காரை ஓட்டியவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

tesla ev fell into pool

இந்த விபத்திற்குள்ளான டெஸ்லா கார் குறித்த படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை அதிர்ச்சியுற செய்துள்ளன. சுவற்றில் மோதியதில், காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது. குறிப்பாக, காரின் முன்பக்க பொனெட் அப்பளம் போல் மடங்கிப் போய் உள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த ஓட்டுனர் உயிர் தப்பியுள்ளார்.

விபத்தின்போது காருக்குள் வேறு யாரேனும் இருந்தனரா என்பது தெரியவில்லை. அதேபோல், இந்த விபத்தில் சிக்கியுள்ள டெஸ்லா கார் எந்த மாடலை சேர்ந்தது என்பதும் தெரியவில்லை. ஆனால் எந்த மாடலாக இருந்தாலும், இந்த டெஸ்லா காரை இனி பயன்படுத்த முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் பொருட்களுக்கும், தண்ணீருக்கும் ஆகாது என்பதை நான் கூற வேண்டியதில்லை. அப்படியிருக்கையில், டெஸ்லா கார் போன்ற இவ்வளவு பெரிய எலக்ட்ரிக் பொருள் அதனை முழுவதுமாக மூழ்கடிக்கக்கூடிய நீரில் மூழ்கியுள்ளது. இதனால், காரில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன என்பதை கண்டறியவே பெரிய தொகை செலவாகலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 10:45 [IST]
English summary
Tesla electric car fell into swimming pool in arizona
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X