ஒரு மணிநேரம் கார் ஓட்டினால் ரூ.4,000 சம்பளம்!! யாருக்கு வரும்ங்க இந்த மனசு, ஒரு மாதத்திலேயே பணக்காரர் ஆயிடலாம்

டெஸ்லா (Tesla) நிறுவனம் அமெரிக்காவில் அதன் எலக்ட்ரிக் கார்களை ஓட்டினால் ஒரு மணிநேரத்திற்கு சுமார் ரூ.4,000 வரையில் சம்பளம் தருவதாக ஓர் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெட்ரோல்/ டீசலை நிரப்பி கொடுத்தால் கார் ஓட்ட யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். அப்படியிருக்கையில், தனது எலக்ட்ரிக் கார்களை ஓட்டுபவர்களுக்காக, எதற்காக இவ்வளவு தொகையை வழங்க டெஸ்லா முன்வந்துள்ளது? என்ற கேள்விக்கான பதிலை இனி பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். அமெரிக்க கார்ப்பிரேட் நிறுவனங்கள் சீனாவில் செழிப்பாக இருக்காது என்ற கருத்தை உடைத்து, சீனாவிலும் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் பல, உலகளவில் அதிகம் விற்பனையாகக்கூடிய கார்களுள் ஒன்றாக உள்ளன.

tesla hiring ev test drivers

இவ்வாறு கார்கள் விற்பனையில் கொடிக்கட்டி பறந்தாலும், புது புது கண்டுப்பிடிப்புகள் & ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுப்படுவதை டெஸ்லா மறப்பதில்லை. உதாரணத்திற்கு, ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் டெஸ்லா கார்களை சொல்லலாம். இவ்வாறு கண்டுப்பிடிக்கப்படும் புதிய தொழிற்நுட்பங்களை காரில் பொருத்தி சோதனை செய்து பார்ப்பது அவசியமாகும்.

ஆரம்பத்தில் இந்த சோதனை ஓட்டங்கள் ஓர் மூடிய பரப்பிற்குள் நடத்தப்படும். ஆனால், புதிய தொழிற்நுட்பத்துடன் கார்கள் பொது சாலையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறியவே எந்தவொரு கார் நிறுவனமும் விரும்பும். இதில் டெஸ்லா மட்டும் என்ன விதிவிலக்கா? ஏனெனில், எல்லா சூழல்களையும் சமாளித்து கொண்டு கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதனை உடனே சரி செய்தல் வேண்டும்.

tesla hiring ev test drivers

நம் இந்தியாவில் கூட பல்வேறு கார்கள் பொது சாலையில் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டதை பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும், இவ்வாறான சோதனை ஓட்டங்களில் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களே ஈடுப்படுத்தப்படுவர். ஆனால் டெஸ்லா சற்று வித்தியாசமாக யோசித்து, கார்களை சோதனை செய்ய பொது மக்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த வேலை வாய்ப்பு அறிவிப்பை அமெரிக்காவில் லிங்கிடின் இணையத்தளத்தில் டெஸ்லா பதிவேற்றியுள்ளது. பொது சாலையில் டெஸ்லா வழங்கும் சோதனை காரை ஒரு மணிநேரத்திற்கு ஓட்டினால் 18 அமெரிக்க டாலர்களில் இருந்து 48 அமெரிக்க டாலர்கள் வரையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1,477இல் இருந்து ரூ.3,940 வரையில் ஆகும்.

tesla hiring ev test drivers

இந்த சம்பளம் தவிர, இதர சலுகைகளும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என டெஸ்லா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த பணி நிரந்தரமானது கிடையாது. வெறும் 3 மாத காலத்திற்கு மட்டுமே ஆகும். தேர்வு செய்யப்படும் ஓட்டுனர்கள் பகல் மற்றும் இரவு என இரு ஷிஃப்ட்களாக பணியில் அமர்த்தப்படுவர். டெஸ்ட் டிரைவர்களை டெஸ்லா பணிக்கு அழைப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல.

இவ்வாறு, டெஸ்லா கார்களை சோதனை செய்வதற்கு உதவ பணியாட்கள் ஒரு பக்கம் வேலையில் அமர்த்தப்படும் நிலையில், மறுப்பக்கம் டெஸ்லா கார்களை வாங்கிய உரிமையாளர்களையும் தங்களது புதிய பெடா ஃபுல் செல்ஃப்-டிரைவிங் புரோகிராம் போன்ற மென்பொருளை சோதனை செய்து அனுபவங்களை பகிரும்படி டெஸ்லா நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறு காரில் வழங்கப்படும் புதிய தொழிற்நுட்ப அம்சங்களை சோதனை செய்ய வெளியில் இருந்து பணியாட்களை வேலைக்கு அமர்த்தும் யுக்தியை இதற்குமுன் வேறெந்த நிறுவனத்திலும் நாங்கள் கேள்விப்பட்டது கிடையாது. இந்த வகையில், டெஸ்லா புதுமையாக யோசித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாக, இந்த யோசனை டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் உடையதாகவே இருக்க வேண்டும். ஏனெனில் அவர் தான் இப்படியெல்லாம் யோசிப்பார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 15, 2023, 22:03 [IST]
English summary
Tesla hiring ev test drivers for 48 dollars per hour
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X