இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!

அமெரிக்காவில் டெஸ்லா காரில் ஒருவர் தனியாளாக சென்றுக் கொண்டிருந்த போது நெச்சு வலி ஏற்பட, அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரே அழைத்து சென்றிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எவ்வாறு இது சாத்தியமாகியது? அதன் பின்னர் என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

எதிர்காலத்தில் இயந்திரங்கள் மனிதர்களை ஆட்சி செய்யும் என ஒரு கருத்து பரவலாகவே உலகம் முழுவதும் உள்ளது. அதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என்றாலும், அத்தகைய நிலையை நிச்சயமாக நாம் அடைவோம் என்றே தோன்றுகிறது. ஏனெனில் இப்போதே சில தொழிற்நுட்ப வசதிகள் ஆட்டோமேட்டிக்காக இயங்கக்கூடியவைகளாக வந்துவிட்டன.

tesla model 3 saves man

குறிப்பாக, கார்கள் அவசர காலத்தில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, ஒருபடி மேலே சென்று முழுவதுமாக தன்னிச்சையாக இயங்கக்கூடிய வகையில் தனது எலக்ட்ரிக் கார்களை உருவாக்க சில வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.

இருப்பினும், இவ்வாறான ஆட்டோ-டிரைவ் கார்கள் வேண்டுமா? என்கிற கேள்வி அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் மக்களிடையே கூட இருப்பதை காண முடிகிறது. ஒரு சிலர் வேண்டாம் என சொன்னாலும், பலர் வேண்டும் என்றே சொல்கின்றனர். எதற்காக வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் போல், கார் டிரைவிங்கின் போது நெச்சு வலி ஏற்பட்ட டிரைவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று டெஸ்லா கார் அவரது உயிரை காப்பாற்றி உள்ளது.

tesla model 3 saves man

காப்பாற்றப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தப்படி இந்த சம்பவத்தை எக்ஸ் பதிவு ஒன்றின் வாயிலாக வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார். மேக்ஸ்பால் ஃபிராங்க்ளின் என பெயர் கொண்ட இந்த நபர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ள பதிவில், மருத்துவமனையில் இருந்த போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், அவரது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரையும் காணலாம்.

சம்பவத்தின்போது, மேக்ஸ்பால் ஃபிராங்க்ளினின் டெஸ்லா கார் முழுவதுமாக செல்ஃப்-டிரைவிங் திறனில் இயங்கியுள்ளது. நீர் சத்து குறைப்பாடு மற்றும் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவினால் அவதிப்பட்டுவரும் மேக்ஸ்பால் ஃபிராங்க்ளினுக்கு நெச்சு வலி எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கிற நிலைமை உள்ளது. ஆனால், ஏப்ரல் 2ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனியாக கார் ஓட்டிக் கொண்டு செல்லும்போது நெச்சு வலி ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

tesla model 3 saves man

சாலையில் சென்றுக் கொண்டிருப்பதால் உடனடி மருத்துவ உதவி கிடைப்பதற்கும் வாய்ப்புகள் குறைவே. இதனால், தனது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் உதவியை மேக்ஸ்பால் வேண்டினார். அமெரிக்காவில் தனது கார்களில் முழு செல்ஃப்-டிரைவிங் வசதியை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி டெஸ்லா அன்லாக் செய்தது. அதாவது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த செல்ஃப்-டிரைவிங் வசதியை சில காரணங்களினால் டெஸ்லா நிறுத்தி வைத்திருந்தது.

ஏப்ரல் 1ஆம் தேதியில் இந்த வசதி அன்லாக் செய்யப்பட்ட நிலையில், அதற்கடுத்த நாளே இந்த வசதி மேக்ஸ்பால் ஃபிராங்க்ளினுக்கு பெரிதும் உதவியுள்ளது. தனது டெஸ்லா காரின் ஸ்டேரிங் சக்கரத்தில் கொடுக்கப்பட்டு இருந்த கண்ட்ரோலை உபயோகித்து தனது காரை ஃபுல் செல்ஃப்-டிரைவிங் மோடுக்கு மேக்ஸ்பால் ஃபிராங்க்ளின் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவை கீழே காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான சம்பவங்களை வைத்து பார்க்கும்போது செல்ஃப்-டிரைவிங் கார்கள் அவசியமானவை என்றே தோன்றுகிறது. இருப்பினும், மேக்ஸ்பால் ஃபிராங்கிளின் எக்ஸ் பதிவுக்கு, "இவ்வாறான நேரங்களில் மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸை அழையுங்கள்" என பலரும் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால், நள்ளிரவு 2 மணியளவில் மருத்துவ உதவியை உடனடியாக பெறுவது முடியாத காரியமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 15, 2024, 23:59 [IST]
English summary
Tesla model 3 electric car saves man from heart attack check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X