‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

இருவரது உயிரை பறித்த அமெரிக்க, டெக்ஸாஸ் விபத்தில், ஆளில்லா இயங்கும் தங்களது காரை பயணி ஒருவர் இயக்கியுள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

கடந்த வாரத்தில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆட்டோபைல்ட் தொழிற்நுட்ப வசதியின் மூலம் ஆளில்லா இயங்கும் திறன் கொண்ட டெஸ்லா கார் ஒன்று கோர விபத்தில் சிக்கியது. அதனை பற்றி நமது செய்திதளத்தில் கூட பார்த்திருந்தோம்.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

சாலைக்கு அருகே இருந்த மரத்தில் மோதிய கார் உடனடியாக தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீயில் கருகியே இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் இன்னமும் உறுதியாக தெரியப்படவில்லை.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

விபத்திற்குள்ளான மாடல் எஸ் காரின் ஆட்டோபைலட் வசதியில் கோளாறு எதுவும் ஏற்படவில்லை எனவும், ஓட்டுனர் இருக்கையில் யாரும் அமரவில்லை எனவும் டெஸ்லா அந்த சமயத்தில் தெரிவித்திருந்தது.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

ஆனால் காரின் ஆட்டோபைல்ட்டில் ஏற்பட்ட கோளாறினால் தான் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் பரவின. இந்த நிலையில் இந்த விபத்து காரில் ஓட்டுனர் இருக்கையில் பயணி அமர்ந்திருந்துள்ளார் என டெஸ்லா நிறுவனம் இப்போது தெரிவித்துள்ளது.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

இது தொடர்பாக டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், "இதற்கு ஆட்டோபைலட் காரணம் என்று கூறினர், ஆனால் அது உண்மை இல்லை" என கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட விசாரணையில் டெஸ்லா இந்த விஷயத்தை உறுதி செய்துள்ளது.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

நெருப்பில் கருகி மிஞ்சம் கிடந்த கார் பாகங்களின் மூலம், தானியங்கி-ஸ்டேரிங் சக்கரத்தின் செயல்பாட்டில் தடைகள் ஏற்பட்டுள்ளன என்பதையும், சீட் பெல்ட்கள் ஒன்று சேராமல் இருப்பதையும் டெஸ்லா கண்டறிந்துள்ளது.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

இதை எல்லாம் வைத்துதான் விபத்தில் சிக்கிய கார் ஒருவரால் இயக்கப்பட்டுள்ளது என டெஸ்லா கூறுகிறது. போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் விபத்தின் போது ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்திருக்க வாய்ப்புள்ளதாகவே கூறுகின்றனர்.

‘ஆளில்லா’ இயங்கும் டெஸ்லா கார் விபத்திற்கு இதுதான் காரணமா? அநியாயமாய் பலியான இரு உயிர்கள்...

டெஸ்லாவின் ஆட்டோபைலட் வசதியில் காரின் ஸ்டேரிங், ஆக்ஸலரேட்டர் மற்றும் ப்ரேக் உள்ளிட்டவை தானாக இயங்கும். இத்தகைய வசதி பெற்ற டெஸ்லா கார்களை இயக்கத்தின் போது பயணிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்பது தான் முதல் விதிமுறை ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tesla Model S in Texas crash was being driven by someone. Read all details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X