புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

புயலில் இருந்து 8 பேரின் உயிரை, பிரபல நிறுவனத்தின் கார் காப்பாற்றியுள்ளது. அது எப்படி? என்பது தெரிந்தால் நீங்க கண்டிப்பா அசந்து போயிருவீங்க!

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. இருந்த போதும் எலெக்ட்ரிக் கார்கள் மீது ஒரு சில விமர்சனங்களும் இருக்கின்றன. எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் குறைவான தூரமே பயணிக்க முடியும், எலெக்ட்ரிக் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் ஊதி தள்ளி வருகின்றன. உலக அளவில், எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில், டெஸ்லா நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிக தூரம் பயணிக்க கூடிய வகையிலும், பெர்ஃபார்மென்ஸில் சிறந்து விளங்க கூடிய வகையிலும், அதி நவீன எலெக்ட்ரிக் கார்களை டெஸ்லா நிறுவனம் தயாரித்து வருகிறது.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

மேலும் பாதுகாப்பிலும் கூட டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் அசத்துகின்றன. டெஸ்லா நிறுவன கார்களில், பாதுகாப்பிற்காக வழங்கப்படும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள், பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் காரணமாக டெஸ்லா நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆம், டெஸ்லா நிறுவனத்தின் 2 கார்கள் 8 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளன. இதற்கு அந்த கார்களில் வழங்கப்பட்டுள்ள ஒரு அதி நவீன தொழில்நுட்ப வசதியே காரணம்.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளை தற்போது டென்னிஸ் புயல் சூறையாடியுள்ளது. டென்னிஸ் புயல் காரணமாக தற்போது இங்கிலாந்து நிலை குலைந்து போயுள்ளது. இந்த சூழலில் புயல் வீசி கொண்டிருந்த சமயத்தில், நெடுஞ்சாலை-ஏ31ல் இரண்டு குடும்பத்தினர் 2 டெஸ்லா கார்களில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

அவை இரண்டுமே டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) கார்கள்தான். இதில், ஒரு காரில் 5 பயணிகளும், மற்றொரு காரில் 3 பயணிகளும் பயணித்து கொண்டிருந்தனர். 2 கார்களுமே ஆட்டோபைலட் முறையில் இயங்கி கொண்டிருந்தன. இந்த 2 குடும்பத்தினரும் மரத்தின் அடியில் சிக்கி நசுங்கி போவதில் இருந்து ஆட்டோபைலட் காப்பாற்றியுள்ளது.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

அதாவது சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓக் மரம் ஒன்று சாலையில் விழவிருந்தது. இதனை சரியாக கணித்த ஆட்டோபைலட், எமர்ஜென்ஸி பிரேக்குகளை உடனடியாக போட்டு காரை நிறுத்தியது. இதனால் 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த பாதுகாப்பு வசதியால் உயிர் தப்பியவர்கள், டெஸ்லா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

இதில், லாரன்ஸ் சாண்டெர்சன் என்பவர் ஒரு டெஸ்லா மாடல் எக்ஸ் காரில், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பயணித்து கொண்டிருந்தார். உயிர் பிழைத்த இந்த நிகழ்வை அதிசயம் என அவர் வர்ணித்துள்ளார். இதேபோன்று மற்றொரு குடும்பமும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

மற்றொரு டெஸ்லா மாடல் எக்ஸ் காரில், ஜோஸ் வைட்லாக் என்பவர், தனது கேர்ள் பிரண்ட் கேட்டி மற்றும் அவரது தாயாருடன் சென்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வால் உற்சாகமடைந்த கேட்டி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கிற்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்தார்.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

இதில் அவர், ''ஹாய் எலான் மஸ்க். உங்கள் கார் என் உயிரை காப்பாற்றியுள்ளது. மேலும் எனது பாய் பிரண்ட் மற்றும் எனது தாயாரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் 5 பேர் கொண்ட மற்றொரு குடும்பமும் காப்பாற்றப்பட்டுள்ள. நன்றி'' என கூறியுள்ளார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புயலில் இருந்து 8 பேரின் உயிரை அசால்டாக காப்பாற்றிய கார்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!!

''நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதில் மகிழ்ச்சி'' என எலான் மஸ்க் தனது பதிலில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெஸ்லா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் கால் பதிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Mirrorpix/ mirror.co.uk

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tesla Model X Autopilot Saves 8 Lives In United Kingdom During Storm Dennis. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X