நம்ம ஊர் சாலையில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஓடுதா!! இண்டர்நெட்டில் மாஸ் காட்டும் கார் ஓனர்!

இந்தியாவில் டெஸ்லா காரா? என கேட்க தோன்றும் விதமாக, கர்நாடகாவில் டெஸ்லா கார் ஒன்று சாலையில் சுற்றி வருவதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில், மைசூரில் மலைப்பகுதியில் அந்த டெஸ்லா காரில் அதன் உரிமையாளர் பாடல்கள் இசைக்க, விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் அதன் கார்களை விற்பனை செய்ய கடந்த சில வருடங்களாகவே தயாராகி வருகிறது. ஆனால், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது போல் தெரியவில்லை. மத்திய அரசாங்கத்துடன் சில உடன்பாடுகள் ஏற்படாத காரணத்தினால், டெஸ்லாவின் இந்திய வருகை தாமதமாகி வருகிறது.

tesla model x in mysuru

கடந்த 2023ஆம் வருடத்தில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசியதினால் இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் டெஸ்லாவின் கார்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கார்கள் அறிமுகம் செய்யப்படாவிடினும், இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

அதேபோல், நம் நாட்டில் சில பேரிடம் டெஸ்லா கார்களும் உள்ளன. குறிப்பாக, கர்நாடகாவில் ஒருவரிடத்தில் டெஸ்லா கார் உள்ளதை சிலமுறை செய்திகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த டெஸ்லா காரை சமீபத்தில் அதன் உரிமையாளர் மைசூரில் உள்ள சாமுண்டி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் யுடியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.

tesla model x in mysuru

இந்த வீடியோவில் காட்சித் தருவது டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் கார் ஆகும். இது ஓர் எஸ்யூவி ரகத்தில் உடலமைப்பை கொண்ட எலக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் டெஸ்லா நிறுவனம், 'பார்டி மோட்' என்கிற பெயரில் வித்தியாசமான டிரைவ் மோட்-ஐ வழங்குகிறது. இந்த மோடில், முன் & பின்பக்க கதவுகளை திறந்து மூடிக்கொண்டு, விளக்குகளை விட்டு, விட்டு ஒளிர செய்து கார் நடனமாடுவது போல் இருக்கும்.

டெஸ்லா கார்களில் இந்த பார்டி மோட் எவ்வாறானதாக இருக்கும் என்பதை வெளிக்காட்டுவதாகவே மைசூரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ உள்ளது. சிவப்பு நிறத்தில் உள்ள இந்த டெஸ்லா மாடல் எக்ஸ் காரை சாமுண்டி மலைப்பகுதியில் சாலை ஒன்றின் ஓரத்தில் நிறுத்தி, பார்டி மோட் ஆன் செய்து இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

tesla model x in mysuru

பார்டி மோடில் விளக்குகள் விட்டு, விட்டு ஒளிர்வது மட்டுமின்றி, காருக்கு உள்ளேயும் முழு சத்தத்தில் பாடல்கள் இசைக்கப்படும். இதில் ஹைலைட் என்னவென்றால், இசைக்கப்படும் பாடலுக்கு ஏற்றவாறு கதவுகளும், விளக்குகளும் செயல்படுகின்றன. அத்துடன், காரின் வெளிப்பக்கத்தில் உள்ள ரியர்வியூ மிரர்களும் பாடலுக்கு ஏற்றவாறு மடங்கி விரிவடைவதை வீடியோவில் காணலாம்.

டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் கார் வெளிநாடுகளில் 2 விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரின் லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டில் ட்யூயல்-மோட்டார் செட்-அப் வழங்கப்படுகிறது. அத்துடன், 3-எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷனிலும் மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் கார் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. மாடல் எக்ஸ் ஆனது ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட எலக்ட்ரிக் கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் டெஸ்லா நிறுவனம் இந்த அளவிற்கு பிரபலமடைந்து இருப்பதற்கு முக்கிய காரணம், மாடல் எக்ஸ் ஆகும். இந்தியாவிலும் பயன்பாட்டில் உள்ளது என்றால், மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் காரின் வளர்ச்சியை அறிந்துக் கொள்ளலாம். இத்தகைய காரை வைத்திருந்தால், நிச்சயமாக நீங்கள் தான் உங்கள் ஏரியாவில் ஹீரோ. அத்துடன், அவ்வப்போது இவ்வாறான பார்டி மோட் வீடியோகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 30, 2024, 19:09 [IST]
English summary
Tesla model x electric car in mysuru new video out check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X