எலக்ட்ரிக் காரில் பெட்ரோலை நிரப்ப முயன்ற பெண்!! டெஸ்லா காருக்கு உண்டான மரியாதை போச்சே... எலான் மஸ்க் ட்விட்!

டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண் இணையத்தில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளார். இதற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அப்படி என்ன பதிலளித்தார் என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருப்பது வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை ஆகும். இதனை குறைக்க பிஎஸ்6 போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும், இவை தற்காலிகமானவையே. ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் நமது எதிர்காலம். இதற்கேற்ப உலக நாடுகள் தயாராகி வருகின்றன, நமது இந்தியாவும் கூட.

electric car owner tries fill petrol

எலக்ட்ரிக் வாகனங்களினால் காற்று மாசடைவது தவிர்க்கப்படுவது மட்டுமின்றி, பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கான மூல பொருட்களை மற்ற நாடுகளிடம் இருந்து வாங்குவதும் குறையும் என்பதே நமது மத்திய அரசு இந்த விஷயத்தில் முனைப்புடன் இருப்பதற்கு முக்கிய காரணமாகும். அமெரிக்கா, சீனா, யுகே போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், அத்தகைய நாடுகளிலும் எலக்ட்ரிக் வாகனங்களை பற்றி அறியாதவர்களும் இருக்கதான் செய்கின்றனர். இதற்கு உதாரணமாகவே யுகே-இல் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 22 வயது ஆன டேனில்லே வ்ரைட் தான் ஓட்டிவந்த டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலை நிரப்ப முயன்றுள்ளார். நல்லவேளையாக, இப்படியொரு அரிய பெண்மணியை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

electric car owner tries fill petrol

பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது டெஸ்லா காரை நிறுத்திய டேனில்லே வ்ரைட் பெட்ரோல் குழாயை கையில் எடுத்து கொண்டு, நுழைக்க காரை சுற்றிலும் ஓட்டை எங்கு உள்ளது என தேடியுள்ளார். பார்ப்பதற்கே செம்ம காமெடியாக இருந்த இந்த நிகழ்விற்கு இணையத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களது ஹாஹா ஸ்மைலியை பதிவிட்டு வருகின்றனர். டெஸ்லா கார்களில் வெளிப்பக்கத்தில் எந்த இடத்திலும் ஓட்டை வழங்கப்படுவதில்லை.

இதனால் காரை சுற்றி, சுற்றி வந்த டேனில்லே-ஆல் கடைசி வரையில் பெட்ரோல் நிரப்பும் பகுதியை மாடல் ஒய் எலக்ட்ரிக் காரில் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இவரது இந்த ஆர்பாட்டத்தை பார்த்த மற்றவர்கள் இது எலக்ட்ரிக் கார் என கூறுவதையும், இருப்பினும் அதனை கேட்டும் கேட்காமல் டேனில்லே தனது தேடல் வேலையை தொடர்வதையும் கீழே பதிவிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் காணலாம். இந்த பதிவில் எலான் மஸ்க்கை டேக் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலமாக இந்த வீடியோவை பார்த்த எலான் மஸ்க், "அவ்வப்போது நடக்கக்கூடியவையே. கடுமையாக பழக்கமாகி உள்ளன" என தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை இதுவரையில் 4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதுகுறித்து பின்னர் டேனில்லே அளித்த பேட்டியில், "இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்ட போது இவி மிகவும் புதியது; நான் எனது பழைய ஞாபகத்தில் செய்துவிட்டேன்" என கூறினார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டேனில்லே இவ்வாறு தெரிவித்தாலும், பலர் இதனை நாடகம் என்றே தெரிவிக்கின்றனர். இதனை மேலே பதிவிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவின் கமெண்ட் பிரிவிலும் காணலாம். சிலர் பிரபலமாகுவதற்கு இவ்வாறு நடிப்பது உண்டு. யாருக்கு தெரியும்... இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் கூட இந்த பெண்ணிற்கு தெரிந்தவராக இருக்கலாம். எப்படியோ இந்த வீடியோ எலான் மஸ்க்கின் கவனத்திலும் பட்டுவிட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 24, 2023, 14:57 [IST]
English summary
Tesla model y electric car owner tries fill petrol in uk
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+