டிரவுசர் விற்பனையில் இறங்கிய உலக புகழ்பெற்ற கார் நிறுவனம்! எந்த நிறுவனம்னு தெரிஞ்சா உரைஞ்சுடுவீங்க!
உலக புகழ்பெற்ற மின் வாகன உற்பத்தி நிறுவனமொன்று டிரவுசர் விற்பனையில் களமிறங்கியிருக்கின்றது. அதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

டெஸ்லா நிறுவனத்தைப் பற்றி அறியாத மின்சார வாகன பிரியர்கள் இருக்கவே முடியாது என்றே கூறிவிடலாம். ஏனென்றால், மின் வாகன பிரியர்களின் நாவை சப்புக்கொட்ட வைக்கின்ற அளவிற்கு அதிக ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட மின்வாகனங்களை அது விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது.

உலக நாடுகள் பலவற்றில் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் இந்நிறுவனத்தால் இந்தியாவில் மட்டும் கால் தடம் பதிக்க முடியவில்லை. இந்திய சாலை போக்குவரத்தின் விதி மற்றும் அதன் கார்களின் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பம் இதற்கு முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தின் சிஇஓ இந்தியாவில் வணிகத்தைத் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

அதேசமயம், தனது தயாரிப்புகளின் பக்கம் மக்களை திருப்புகின்ற வகையில் கூடுதல் திறன் மிக்க வாகனங்களாக புதிய வாகனங்களை உருவாக்கி வருகின்றார். அந்தவகையில், அண்மையில் மாடல் எஸ் மின்சார காரை டெஸ்லா நிறுவனம், அதிக சக்தி வாய்ந்த மற்றும் குண்டு துளைக்காத காராக மாற்றியது. இந்த திறனில் எந்தவொரு வாகன தயாரிப்பு நிறுவனமும் மின்சார காரை வெளியிடவில்லை என்று உலக ஆட்டோ துறையே அதை புகழ்ந்தது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் உள்ளாடை விற்பனையில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த தகவல் பலரிடையே சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளது. உண்மையில் டெஸ்லா நிறுவனம் உள்ளாடை விற்பனையில் இறங்கியிருக்கின்றதா என்ற ஆயிரம் கேள்விகளுடன் அதன் ரசிகர்கள் குழும்பி நிற்கின்றனர்.

இது உண்மைதான் என எலன் மஸ்க் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள உள்ளாடைகளின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த உள்ளாடைகளை லிமிடெட் எடிசனில் விற்பனைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், இந்த டிரவுசர்களின் புகைப்படம் டெஸ்லாவின் அதிகார வலை தளப்பக்கத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது ஒரு ஜோடி ஷார்ட்ஸ்கள் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளு. அவற்றிற்கான விலையாக அமெரிக்க டாலர்களில் 69.420 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய மதிப்பில் ரூ. 5,181 ஆகும். அடேங்கப்பா, இவ்ளோ அதிக விலையில டிரவுசரா என வாயை பிளக்க செய்துள்ளது இந்த உச்சபட்ச விலை. இந்த டிரவசர்களை கோடை காலத்திற்கு ஏதுவாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளது டெஸ்லா. அதில், டெஸ்லா நிறுவனத்தின் லோகோக்களும் இடம்பெற்றிருக்கின்றன.

அத்துடன், டெஸ்லா தற்போது விற்பனைச் செய்து வரும் மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் ஆகியவற்றின் கடைசி எழுத்துக்களும் (எஸ்3எக்ஸ்ஒய்) பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை விரைவில் அமேசான் போன்ற ஆன்-லைன் வர்த்தக தளங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் கொடிக் கட்டிப் பறந்துக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கு எதிர்பார்த்திராத வகையில் புக்கிங் கிடைத்து வருகின்றது. இதன் விற்பனை ஏற்கனவே அதிகம் விற்பனையாகும் கார்களான பிஎம்டபிள்யூ தயாரிப்புகளை ஓரம் கட்டியிருக்கின்றது. இந்த நிலையைத் தொடர்ச்சியாக அது தக்கை வைத்து வருகின்றது.

இந்த நிலையில்தான் டிரவுசர் விற்பனையில் டெஸ்லா நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதுபோன்ற விநோதமான வர்த்தகத்தில் டெஸ்லா நிறுவனம் களமிறங்குவது இது முதல் முறையல்ல. முன்னதாக இந்நிறுவனம், அதன் மற்றுமொரு நிறுவனமான போரிங் நிறுவனத்தின் மூலம் ஃபிளேம்த்ரோவர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

இதன்படி, 20 ஆயிரம் யூனிட்டுகளை அது விற்பனைக்குக் கொண்டுவந்தது. இது அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நில நிமிடங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனை அதிகபட்சம் அமெரிக்கர்களே வாங்கியிருந்தனர். குறிப்பாக, அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தவர்கள் பலரே வாங்கியிருந்தனர்.

இதே விற்பனையை தற்போதைய புது முக வணிகமான டிரவுசர்களும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனம், விரைவில் சைபர் ட்ரக் எனும் மின்சார வாகனத்தை களமிறக்க இருக்கின்றது. இந்த மின் வாகனத்திற்கு ஏற்கனவே சந்தையில் அமோகமான வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








