விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

விண்வெளியில் இருக்கும் டெஸ்லா காரை டிராக் செய்ய ஒரு சாமானியன் செய்த துணிகர காரியம்..!!

By Azhagar

தற்போதைய காலத்தில் கார்களை டிராக் செய்வது மிக எளிதான ஒரு விஷயம். தொழில்நுட்பம் தெரிந்த யாருவேண்டுமானாலும் அதை ஜிபிஎஸ் உள்ளிட்ட மற்ற இணைக்கும் தொழில்நுட்பங்கள் வைத்து எளிதாக செய்துவிடலாம்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

குறிப்பாக போர் விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை கூட டிராக் செய்வது கூட எளிதானதாக உள்ளன . அதற்கென பிரத்யேகமான சில வலைதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா காரை டிராக் செய்ய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிதீவிர ரசிகர் ஒருவர் இணையதள கணக்கை தொடங்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

விண்வெளி தொழில்துறையில் பணியாற்றும் பென் பீயர்சென் என்ற மின்சாரவியல் பொறியாளர் www.whereisroadster.com என்ற முகவரியில் வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா காரின் அனைத்து நகர்வுகளையும் எளிதாக கண்டறியலாம் என தெரிவித்துள்ளார்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

கடந்த 6ம் தேதி ஃப்ளோரிடா கென்னடி மையத்தில் இருந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த ஃபால்கான் ஹெவி ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தியது.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

இந்த வின்னோடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பயன்படுத்தி வந்த செர்ரி ரெட் நிறத்திலான டெஸ்லா ரோஸ்டர் கார் வைக்கப்பட்டு இருந்தது.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

மின்சார திறன் பெற்ற இந்த கார் 2017 டிசம்பர் மாதத்தில் உலக பார்வைக்கு வந்தது. துவக்க நிலையிலிருந்து 100 கி.மீ வேகத்தை 1.9 விநாடிகளில் எட்டிபிடிக்கும் திறன் பெற்றது இந்த கார்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடி விலை பெறும் இந்த ரோட்ஸ்டர் எஸ்யூவி கார் மணிக்கு 402 கி.மீ வேகத்தில் செல்லும். மின்சாரத்தில் இயங்கும் சூப்பர் காராகவே இது பார்க்கப்படுகிறது.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை தொடர்ந்து டெஸ்லாவின் தயாரிப்புகள் இந்தியா உட்பட அடுத்தடுத்து பல நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளன.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

இதை மனதில் வைத்து, முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் என்ற பெயரை பெற்று, அதன் மூலம் புதிய நாடுகளிலுள்ள கார் விற்பனை சந்தையை மொத்தமாக கைப்பற்றவே எலான் மஸ்க் இவ்வாறு சாதனை செய்தார் என்று கூறப்படுகிறது.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

தற்போது பூமியை விட்டு தொலை தூரம் சென்றுவிட்ட டெஸ்லா கார் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கும் தொலை தூரத்தில் உள்ளது. இதன் ஒவ்வொரு நகர்வையும் பல உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

இதை உணர்ந்துகொண்டு பொறியாளர் பென் பீயர்சென் தொடங்கியுள்ள வலைதள கணக்குதான் www.whereisroadster.com என்ற இணையதளம்.

இந்த வலைதளம் நாசா மற்றும் அதன் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் தரவரிசைக்குள் நுழைந்து டெஸ்லா காரின் ஒவ்வொரு அளவுருக்குகளையும் அங்கியிருந்து எடுத்து வழங்கும்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

www.whereisroadster.com குறித்த தகவல் வெளியானதிலிருந்து பல்வேறு மக்கள், இதற்குள் நுழைந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரோட்ஸ்டர் காரின் தகவல்களை தேடி படித்து வருகின்றனர்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

தனது இணையதள முகவரி பிரபலமாக தொடங்கியிருப்பது பென் பியர்சென்னிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவரும் எலான் மஸ்க் போல மிகவும் குறும்பு பிடித்தவர் போல.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

www.whereisroadster.com தளத்தில் கீழ் பகுதியில் பென் பியர்சன் இவ்வாறு கூறியுள்ளார், "இந்த தளம் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் அல்லது எலான் மஸ்க் உடன் எந்த விதத்திலும் இணைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. நான் விண்வெளி ஆர்வலன்" என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்லா காரை டிராக் செய்ய சாமானியன் செய்த எளிய வழி..!!

எலான் மஸ்க் நிர்வகித்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பது மறுக்க முடியாத ஒன்று தான்.

ஆனால் பென் பியர்சன் போல பல ஆர்வ கோளாறுகள் முளைத்து எலான் மஸ்கின் இந்த சாதனையை மழுங்கடித்து விடுவார்கள் என்பது வானவியல் துறை சார்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Tesla Roadster In Space — Track The Location And Speed Of The First Car In Space Here
Story first published: Tuesday, February 20, 2018, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X