டெஸ்லா பெயரில் இந்தியாவில் ஏற்கனவே ஒரு கம்பெனி இருக்குதா? டில்லி கோர்டில் கேஸ் போட்ட எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வரப்போகிறது என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், தற்போது டெஸ்லா நிறுவனம் டெல்லியில் செயல்பட்டு வரும் டெஸ்லா பவர் யுஎஸ்ஏ என்ற நிறுவனத்திற்கு எதிராக பெயரை பயன்படுத்துவது குறித்த வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்திய மார்க்கெட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருவார் என பேசப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் இந்த பயணம் ரத்தானது. இருந்தாலும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடித்தடத்தை பதிப்பதற்கான வழிகளை எல்லாம் பார்த்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.

tesla

இப்படியாக உபி மாநிலம் கூர்கான் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று டெஸ்லா பவர் யுஎஸ்ஏ என்ற பெயரில் துவங்கப்பட்டு அந்த நிறுவனம் நடந்து வருகிறது. அந்த நிறுவனத்திற்கு எதிராக தற்போது டெஸ்லா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனம் சர்வதேச அளவில் பெயர் பெற்ற நிறுவனம் என்பதால் அந்த நிறுவனத்தின் பெயரை டெஸ்லா பவர் யுஎஸ்ஏ என பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது அப்பொழுது டெஸ்லா பவர் யூஎஸ்ஏ என்ற நிறுவனத்தின் தரப்பில் இருந்த ஆஜரான வக்கீல் டெஸ்லா பவர் யுஎஸ்ஏ என்ற நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் எண்ணத்தில் இல்லை எனவும் எதிர்காலத்திலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான எந்த ஒரு தொழிலிலும் இந்நிறுவனம் ஈடுபடாது எனவும் தெரிவித்து. இதனால் இந்த பெயரிலேயே தொடர்ந்து நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

tesla

ஆனால் டெஸ்லா தரப்பிலிருந்து இந்த பெயரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது. தற்போது டெஸ்லா பவர் யுஎஸ்ஏ என்ற பெயரை பதிவு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லி கோர்ட் கேட்டு உள்ளது. அதே நேரம் டெஸ்லா நிறுவனத்திடமும் டெஸ்லா நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதற்கான ஆவணங்களையும் கேட்டுள்ளது. இந்த இரு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தான் அடுத்த கட்ட விவாதங்கள் நடக்கும்.

அதன்படி வரும் மே மாதம் 22ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்குள் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் இந்த ஆவணங்களை சரிபார்த்து அதன் பின்னர் இந்த வழக்கு குறித்த விவாதங்கள் மற்றும் தீர்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டிற்குள் ஒரு பெரிய தொழில் வரப்போகிறது என்றால் அதே பெயரில் மற்ற தொழில்கள் இருக்கிறதா என செக் செய்து கொள்வார்கள்.

tesla

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரப்போகும் எண்ணத்தில் இருப்பதால் இந்த பிரச்சினைகளை எல்லாம் இப்பொழுதே முடித்துக் கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்தவுடன் டெஸ்லா நிறுவனம் தாராளமாக இந்த பிரச்சனையும் இல்லாமல் இந்தியாவில் தொழில் தொடங்க வரலாம், என்பதற்காக இதை செய்து வருகிறது. இவ்வளவு நாள் கழித்து ஏன் திடீரென்று டெஸ்லா நிறுவனம் இப்பொழுது தொழில் துவங்க இந்தியாவிற்கு வருகிறது என நீங்கள் நினைக்கலாம்.

இதற்கு முக்கியமான காரணம் மத்திய அரசு கொண்டு வந்த புது எலெக்ட்ரிக் வாகன பாலிசி தான் ஏற்கனவே இருந்த எலெக்ட்ரிக் வாகன பாலிசி படி வெளிநாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு என்ன விதி இருக்கிறதோ அதை விதி தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் இருந்தது. புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய 100% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.

ஆனால் தற்போது உள்ள புதிய பாலிசியின் படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் எதிர் காலத்தில் ஆலை அமைத்து வாகனங்களை தயார் செய்யவும், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பட்சத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வாகனங்களை சில நிபந்தனையின் அடிப்படையில் இந்தியாவில் 15% வரியில் இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விதிமுறை அடிப்படையில் தான் டெஸ்லா நிறுவனம் முதலில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து மார்க்கெட்டை நன்கு புரிந்து கொண்டு பின்னர் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவதற்கு இருக்கும். அனைத்து தடைகளை தடைகளையும் நீக்குவதற்கான பணியில் இறங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2024, 12:21 [IST]
English summary
Tesla trademark infringement case gurugram tesla power
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X