இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

காதலன் பிரேக் அப் செய்ததால் மிகுந்த கோபமடைந்த பெண் ஒருவர் தான் பரிசாக வழங்கிய விலையுயர்ந்த ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இணையத்தில் வைரலாகும் இதுக்குறித்த வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

பிரேக் அப், எப்போதும் காதலர்களின் துயரமான நிகழ்வாகும். ஆனால் தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் பிரேக் அப் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறக்கூடிய விஷயமாக மாறிவிட்டது.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

பார்த்தவுடன் ஒருவரை பிடித்துவிட்டால் அவருடன் பழகி பார்க்கிறார்கள். அழகில் பிடித்தாலும் குணத்தில் இருவருக்கும் ஒத்து போகவில்லை என்றால் உடனே பிரேக் அப் தான். ஆனால் திருமணத்திற்கு முன்பே இணையின் குணத்தை தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

ஆனால் சிலர் வேறொருவரை கரம் பிடிப்பதற்காக, வேண்டுமென்றே சில காரணங்களை கூறி (பொய்யான காரணமாக கூட இருக்கலாம்) தான் காதலித்த ஆணையோ அல்லது பெண்ணையோ கழற்றிவிடுகிறார்கள். இது சில நேரங்களில் பெரிய பிரச்சனையில் சென்று முடிந்துவிடுகிறது.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

அவ்வாறான ஓர் சம்பவத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். தாய்லாந்தை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

இதில் ஒரு பிரச்சனை தீவிரமாகவே, அந்த பெண்ணின் காதலன், நம் இருவருக்கும் செட் ஆகாது என கூறி திடீரென பிரேக்கப் செய்துள்ளார். எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணால் அந்த இளைஞரை சமாதனப்படுத்த முடியவில்லை.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த பெண், தான் பரிசாக அந்த இளைஞருக்கு வழங்கிய ரூ.28 லட்சம் மதிப்புள்ள ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அந்த இளைஞர் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்த அந்த பெண் கட்டத்திற்கு கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த மோட்டார்சைக்கிளை யாரும் இல்லாத நேரமாக பார்த்து கொளுத்தியுள்ளார்.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

இதற்காகவே அவர் வரும்போதே எரியக்கூடிய ஆயிலை பாட்டிலில் எடுத்து வந்துள்ளார். தீ வைத்து கொளுத்திய பிறகு வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. அவர் எரித்தது என்னமோ அவர் பரிசாக வழங்கிய மோட்டார்சைக்கிளை தான், ஆனால் பார்க்கிங் ஏரியா என்பதால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

இதனால் தீ மற்ற வாகனங்களுக்கும் பரவியுள்ளது. மேலுள்ள வீடியோவில் இந்த பெண் பரிசாக வழங்கிய மோட்டார்சைக்கிளை காட்டிலும் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் அதன் அருகில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அவை அனைத்தும் தீயில் எரிந்து எழும்பு கூடுகளாகி உள்ளன.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக ஆயிலை ஊற்றியதாலும், தீயை நெருக்கமாக சென்று வைத்ததினாலும், தீ அந்த பெண்ணின் மீதும் படுவதுபோலவே இந்த வீடியோவில் தெரிகிறது. ஆனால் அடுத்த காட்சியில் அந்த பெண் நல்லப்படியாகவே அந்த இடத்தில் இருந்து காலியாகுகிறார்.

இனி பிரேக்கப் செய்வதற்கே யோசிப்பாங்க!! எக்ஸ்-காதலரின் ரூ.23 லட்சம் மதிப்பிலான பைக்கை எரித்த பெண்!

தீயணைப்பு வீரர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்ததினால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த பெண் அவரது முன்னாள் காதலருக்கு பரிசாக வழங்கிய மோட்டார்சைக்கிளின் மதிப்பு மட்டுமே 1 மில்லியன் பாட் (ரூ.23 லட்சம்) என தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Thai Woman Sets Ex-lover's Rs 23 Lakh Bike She Gifted Him on Fire to Take Revenge.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X