தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்...

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல், காய்கறி வியாபாரியிடம் விநோதமான டெக்னிக்கை பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

வட இந்தியாவில் நடைபெறும் பல குற்றச் சம்பவங்களுக்கு மூல காரணமாக இருக்கும் தக்-தக் என்ற பிரபல கொள்ளைக் கும்பல் புதிய வழிமுறையைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபடுவதைப் போன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மும்பையில் கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்தி வந்த இந்த கும்பல், தற்போது தலைநகர் டெல்லியில் தங்களின் கை வரிசையை காட்டத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

முன்னதாக இவர்கள், சென்னையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட நடிகை பர்ஹீன் என்பவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'கலைஞன்' என்ற திரைப்படத்தில் நடித்த பர்ஹீன், 'ஜான் தேரே நாம்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் கால் தடம் பதித்தார்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

இதையடுத்து, பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, திருமணம் செய்துகொண்ட இருவரும் டெல்லயின் சர்வ்பிரியா பகுதியில் வசித்து வருகின்றனர்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

இந்த நிலையில், தனது காரில் ஷாப்பிங் மாலுக்கு சென்ற பர்ஹீன் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், அவரை பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கார் கண்ணாடியை உடைக்க முயற்சித்தனர். இதைக் கண்டு காரை நிறுத்திய பர்ஹீன், அவர்களிடம் கோபத்துடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

அப்போது, அந்த கொள்ளைக் கும்பல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைப் போன்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டே, காரில் இருந்த பை, செல்போன், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

இதனைச் சுதாரித்துக் கொண்ட பர்ஹீன், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்காக அழைக்க ஆரம்பித்தார். இதனால், கொள்ளை கும்பல் உடனடியாக பர்ஹீனை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், பர்ஹீன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ராணுவ வீரர் ஒருவர், பர்ஹீனை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஆய்வு மேற்கொண்ட போலீஸார், இது தக்-தக் கொள்ளைக் கும்பலின் கை வரிசை என்பதை உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம், நடப்பாண்டின் ஜனவரி மாதம் 20ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், இதே பாணியை சற்று வித்தியாசமாகக் கையாண்டு தக்-தக் கொள்ளைக் கும்பல் மீண்டும் ஓர் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது டெல்லி வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ வெளிாயகி மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

டெல்லி நரேலா பகுதியைச் சேர்ந்தவர் விஜய். அதேபகுதியில் காய்-கறி விற்பனைச் செய்து வருகின்றார். தனது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 2.5 லட்சத்தை எடுத்த அவர், தனது ஹூண்டாய் எலைட் காரி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

அப்போது, அவரை இருசக்கர வாகனத்தில் கடந்துச் சென்ற இருவர், காரின் முன்புறம் தீ பிடித்திருப்பதாக கூறினார். தொடர்ந்து, வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் காரின் முன்பக்கம் தீ ஏற்பட்டிருப்பதாக கூறினார். தொடர்ச்சியாக இரண்டு பேர் கூறியதை அடுத்து விஜய், தனது காரில் வைத்திருந்த பணப் பையை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

மேலும், காரின் முன்பகுதியில் நின்று காரை பரிசோதிக்க ஆரம்பித்தார். ஆனால், காரின் எந்த பக்கமும் தீ பிடிக்கவில்லை. இதனால் குழப்பம் அடைந்த விஜய், அங்கு சில துளி சிதறி இருந்ததைக் கண்டார்.

இதனை அவ்வழியாக பாதசாரியைப் போன்று நடந்து சென்ற மற்றுமொரு இளைஞர் ஊற்றிவிட்டு செல்வதை நம்மால் வீடியோவில் காண முடிகின்றது.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

என்ன நடக்கின்றது என்பதை விஜய் உணர்வதற்குள், தீ பிடித்திருப்பதாக கூறி சென்ற இரு இளைஞர் மிகவும் அதிகவேகமாக திரும்பி வந்து, அவர் வைத்திருந்த பணப் பையை பிடிங்கிக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இதன் பின்னரே, தான் சூழ்ச்சி வலையில் சிக்கியிருக்கின்றோம் என்பதை விஜய் உணர்ந்தார்.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

அதேசமயம், கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றதால், அவர்களை அவரால் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

இந்த சம்பவத்தை அங்கு பார்த்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், அந்த கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்து பணப் பையை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களை விசாரித்ததில் பிரபல தக்-தக் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்... அதிர்ச்சி வீடியோ!

இச்சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், கொள்ளைக்கான மூலக் காரணமானம் யார் என்பதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2019, 11:49 [IST]
English summary
Thak Thak Gang Snatching Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+