4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

தல அஜீத் 4,500 கிமீ பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

நடிகர் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த படத்தை வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

அத்துடன் விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி கொண்டுள்ளன. ஆனால் வலிமை படக்குழுவினரிடம் இருந்து எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. வலிமை படத்தின் அப்டேட்டிற்காக அஜீத் ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்து வருவது நம் அனைவருக்குதே தெரிந்த ஒரு விஷயம்தான்.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

அவர்களுக்கு சற்றே ஆறுதலாக தல அஜீத்தின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில், தல அஜீத் குளிர்கால உடைகளை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவருடன் நின்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த புகைப்படம் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

அத்துடன் வாரணாசியில் உள்ள சாலையோர கடை ஒன்றில் தல அஜீத் சாப்பிடும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படம் தொடர்பாக மேலும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தல அஜீத் தற்போது சிக்கிம் மாநிலத்திற்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். பூடான், திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லையில் சிக்கிம் அமைந்துள்ளது. இமயமலையின் இயற்கை அழகு கொஞ்சும் இந்த மாநிலத்திற்குதான் தல அஜீத் தற்போது சாலை மார்க்கமாக பைக்கில் பயணம் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

சிக்கிம் மாநிலத்திற்கு செல்லும் வழியில் தல அஜீத் வாரணாசியில் பைக்கை நிறுத்தி சாலையோர கடையில் உணவு அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ரசிகர் ஒருவர் அடையாளம் கண்டுகொண்டு, தல அஜீத் உடன் புகைப்படம் எடுத்து கொண்டதாக தெரிகிறது. அந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் சுமார் 2,400 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. தல அஜீத் எங்கிருந்து சிக்கிம் சென்றார்? என்பது உறுதியாக தெரியாத நிலையில், அங்கிருந்து சென்னை திரும்புவதற்கு அவர் 2,400 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும்.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

எப்படியும் சென்னை திரும்புவதற்கு முன்பு அவர் ஒட்டுமொத்தமாக 4,500 கிலோ மீட்டர்கள் பைக்கில் பயணம் செய்து விடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தற்போது வரையில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவராவிட்டாலும் கூட, தல அஜீத் இப்படி ஒரு பைக் பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

ஏனெனில் கடந்த காலங்களில் தல அஜீத் இப்படிப்பட்ட தொலைதூர பைக் பயணங்களை மிகவும் ரகசியமாக மேற்கொண்டுள்ளார். கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதில் தல அஜீத்திற்கு ஆர்வம் அதிகம் என்பதும், அடிப்படையில் அவர் ஒரு பந்தய வீரர் என்பதும் இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டிய விஷயம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Thala Ajith Heads To Sikkim By Bike - Here Are All The Details. Read in Tamil
Story first published: Monday, January 18, 2021, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X