சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

யாருக்குமே தெரியாமல் தல அஜீத் செய்ததாக கூறப்படும் காரியம் ஒன்று ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜீத் வலம் வந்து கொண்டுள்ளார். ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அஜீத், கார் மற்றும் பைக் ஓட்டுவதை பெரிதும் விரும்பக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக ஹை-பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது என்றால், அஜீத்திற்கு கொள்ளை பிரியம்.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

எனவே அஜீத்தின் திரைப்படங்களில் பைக் சேஸிங் மற்றும் சாகச காட்சிகள் அடிக்கடி இடம்பெறும். இதற்கு முன்பு வெளியான அஜீத்தின் திரைப்படங்களில் பைக் சாகச காட்சிகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வரிசையில் அஜீத்தின் அடுத்த படமான வலிமையிலும், பைக் சாகச காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

தல அஜீத் - இயக்குனர் வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் காம்போவில் வெளியாகவுள்ள இரண்டாவது திரைப்படம் வலிமை. இதற்கு முன்பாக இதே கூட்டணி நேர்கொண்ட பார்வை படத்திலும் பணியாற்றியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வலிமை படத்திலும் இந்த கூட்டணி கைகோர்த்துள்ளது.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கு பைக் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சியில் தான் பயன்படுத்திய பைக்கை தல அஜீத் மிகவும் விரும்பி ஓட்டியுள்ளார். எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அந்த பைக்கிலேயே அஜீத் சென்னை வந்ததாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

வலிமை படத்தில் பயன்படுத்தும் மோட்டார்சைக்கிளை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு தல அஜீத் ஓட்டி வந்ததாக முன்னணி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்வு சமீபத்தில்தான் நடந்ததாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக அஜீத் பைக் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

தல அஜீத் குமார் ஓட்டி வந்ததாக கூறப்படும் ஸ்போர்ட்ஸ் பைக், வலிமை படத்தின் சேஸிங் காட்சியில், அவர் பயன்படுத்துவதற்கு என ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த பைக்கை அஜீத் மிகவும் விரும்பி ஐதராபாத்தில் இருந்து சென்னை வரை ஓட்டி வந்ததாக தெரிகிறது.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

அதுவும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அங்கிருந்து தல அஜீத் சென்னை வர விமான டிக்கெட் தயாராக இருந்துள்ளது. ஆனால் விமானத்திற்கு பதில் பைக்கிலேயே பயணிக்க அஜீத் முடிவு செய்தார். இதன் காரணமாக விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ரேஸிங் உடையில் அஜீத் இருப்பது போன்றும், அவர் பைக் ஓட்டுவதை போன்றும் சில படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது? என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி கவனம் ஈர்த்துள்ளது. இதனிடையே வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்த்தி கொள்ளப்பட்ட பிறகு, வலிமை படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சமயத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2020, 16:30 [IST]
English summary
Thala Ajith Rides 'Valimai' Sports Bike From Hyderabad To Chennai?. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+