Just In
- 8 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 9 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 20 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 23 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- News
அக்னி பாத் திட்டத்தை சும்மா ஒன்றும் எதிர்க்கவில்லை! இது தான் காரணம்! காங்கிரஸ் தந்த டீடெயில்!
- Finance
பணத்தை அச்சடிக்க 5000 கோடி செலவு செய்த ஆர்பிஐ.. பணமதிப்பிழப்புக்கு பின் இதுதான் அதிகம்..!
- Movies
‘தாய்க்கிழவி’..வில்லன் டயலாக்கை பாட்டாக்கி இப்படியா பண்ணுவது..தனுஷுக்கு கமல் கட்சி நிர்வாகி கண்டனம்
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வாரிசு போஸ்டரில் விஜய் கெத்து காட்டுவது என்ன பைக் தெரியுமா? விலை இவ்ளோதானா? எல்லாரும் ஷோரூமுக்கு ஓட போறாங்க!
தளபதி விஜய்யின் வாரிசு பட போஸ்டர்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், அவர் பயன்படுத்தியுள்ள பைக் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்று (ஜூன் 22) நடிகர் விஜய் (Vijay) பிறந்த நாள். இதை முன்னிட்டு பிரபலங்கள் பலர் சமூக வலை தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ரசிகர்களும் சமூக வலை தளங்களில் தளபதி விஜய்யின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது அடுத்த படத்தின் அப்டேட்களும் வெளியாகியுள்ளன.

விஜய்யின் அடுத்த படத்திற்கு வாரிசு (Varisu) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி (Vamshi Paidipally) இயக்குகிறார். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. இந்த போஸ்டர்கள் சமூக வலை தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று கொண்டுள்ளன.

இதில் ஒரு போஸ்டரில் விஜய் கம்பீரமாக பைக்கில் அமர்ந்துள்ளார். The Boss Returns என்ற கெத்தான வாசகத்துடன் உள்ள அந்த போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கும் அந்த போஸ்டர் குறித்து, பலருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. விஜய் அமர்ந்திருப்பது என்ன பைக்? என்பதுதான் அந்த சந்தேகம்.

எனவே வாரிசு படத்தின் போஸ்டரில் விஜய் பயன்படுத்தியுள்ள அந்த பைக் குறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். விஜய் அமர்ந்திருப்பது யெஸ்டி அட்வென்ஜர் (Yezdi Adventure) பைக் ஆகும். யெஸ்டி ஒரு காலத்தில், அதாவது கடந்த 1980 மற்றும் 1990களில் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த பைக் பிராண்டுகளில் ஒன்று.

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடப்பாண்டு தொடக்கத்தில் யெஸ்டி பிராண்டின் கீழ் 3 புதிய பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. நடப்பாண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அந்த 3 யெஸ்டி பைக்குகளில் ஒன்றுதான் யெஸ்டி அட்வென்ஜர். இந்த பைக்கில், 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.7 பிஹெச்பி பவர் மற்றும் 29.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. யெஸ்டி பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 பைக்குகளிலேயே இதுதான் அதிக சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது யெஸ்டி அட்வென்ஜர் பைக்கில் உள்ள அதே இன்ஜின்தான் மற்ற 2 பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் பவர் அவுட்புட் வெவ்வேறு வகைகளில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. யெஸ்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எஞ்சிய 2 பைக்குகள் யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster) மற்றும் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் (Yezdi Scrambler) ஆகும்.

யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.3 பிஹெச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். மறுபக்கம் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 28.7 பிஹெச்பி பவரையும், 28.2 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

பவர் அவுட்புட் வேறுபட்டாலும், இந்த 3 பைக்குகளிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. இதில், தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 2.10 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் மாடலின் விலை 2.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பொதுவாக அஜீத் (Ajith) திரைப்படங்களில் பைக் சேஸிங் காட்சிகள் அதிகளவு இடம் பிடிக்கும். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படத்தில் கூட பைக்குகளுக்கு மிகவும் அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. வலிமை திரைப்படத்தில் பைக் ரைடர்களை வைத்துதான் கதையே உருவாக்கப்பட்டிருந்தது.

பொதுவாக அஜீத் தனது திரைப்படங்களில் பயன்படுத்தும் பைக்குகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். அந்த பைக்குகளுடன் ஒப்பிடும்போது தற்போது விஜய்யின் வாரிசு போஸ்டரில் இடம்பெற்றுள்ள யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் விலை மிகவும் குறைவுதான். எனவே விஜய் ரசிகர்கள் பலர் யெஸ்டி அட்வென்ஜர் பைக்கை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இந்த சூழலில், வாரிசு போஸ்டரில் விஜய் பைக்கில் அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு திரைப்படத்தில் யெஸ்டி அட்வென்ஜர் பைக்குடன் விஜய் ஒரு சில காட்சிகளில் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு திரைப்படம் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
-
இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
-
ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
-
கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!