ரூ75 லட்சத்திற்கு பிஎம்டபிள்யூ காரை வாங்கிய விஜய் டிவி பிரபலம்! முதல் வேலையா இவர் என்ன பண்ணாரு தெரியுமா?
விஜய் டிவி புகழ் தங்கதுரை தற்போது சொந்தமாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரை வாங்கி உள்ளார். இந்த கார் ரூபாய் 75 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இவ்வளவு காஸ்ட்லியான காரை இவர் தனது நீண்ட கால கனவு காராக வைத்து சொந்தமாக வாங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த கார் வாங்கிய சந்தோஷத்தை அவர் கொண்டாடிய விதம்தான் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
விஜய் டிவியில் காமெடி நடிகராக வருபவர் தங்கதுரை. இவர் சொல்லும் பழைய ஜோக்குகள் எல்லாம் பிரபலமானவாயாக இருக்கின்றன. இவர் பழைய ஜோக்குகளுக்காக ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகமும் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இதற்கிடையில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது நீண்ட நாள் கனவாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 என்ற காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டவர் அந்த பக்கத்தில் எனது நீண்ட நாள் பயணத்தில் பல்வேறு கடினமான தருணங்களை சந்தித்து எனது கனவு காரான பிஎம்டபிள்யூ காரை வாங்கி உள்ளேன் என பகிர்ந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் இந்த கார் வாங்கிய சந்தோஷத்தை அவர் ஏழை குழந்தைகளுடன் கொண்டாட நினைத்து சில ஏழை குழந்தைகளை அந்த காரில் டிரைவ் அழைத்துச் அவரது காரிலேயே கூட்டி சென்று வந்துள்ளார். இந்த காட்சிகளை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் தான் மிகவும் சந்தோஷமாக உணர்வதாகவும் மக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் தேவை எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் வாங்கிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் பற்றி தான் இப்போது பலர் பேசி வருகிறார்கள். இது ஒரு எஸ்யூவி ரக காராகும். 5 சீட்டர் கொண்ட இந்த கார் ரூபாய் 68.50 லட்சம் முதல் ரூபாய் 24.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மற்றும் மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பிஎம்டபிள்யூ காரில் இதுவும் ஒன்று.
காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 1995 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே கியர் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. அதுவும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனாக இது வழங்கப்பட்டுள்ளது. சோதனையில் 5 ஸ்டார் பெற்ற பாதுகாப்பான காராக இருக்கிறது. இந்த காரில் மொத்தம் 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 204 மீமி கிரவுண்ட் கிளியரன்ஸும் இந்த காரில் இருக்கிறது.

இந்த கார் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. அதில் தங்கதுரை வாங்கிய கார் பைடோனிக் ப்ளூ என்ற நிறம் கொண்ட காராகும். இந்த காரின் பெர்பார்மென்ஸை பொறுத்தவரை 188 பிஎச்பி பவரும் 400 என்எம் டார்க் திறனுடன் கொண்ட காராக இருக்கிறது. இது ஒரு ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.9 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.
இதுபோக இந்த காரில் முன்பக்கம் பெரிய கிட்னி கிரில், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கமும், பின்பக்கமும் புதிய பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள டெயில் லைட்கள் எல்இடி லைட்களாக வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த காரில் 360 டிகிரி கேமரா, மூன்று ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ஸ் லைட்டிங், 12.3 இன்ச் கொண்ட முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கார் மார்க்கெட்டில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, ஆடி க்யூ5, வால்வோ எக்ஸ்சி 60, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காரை நடிகர் தங்கதுரை வாங்கியுள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த காரை அவர் வாங்கி உள்ளதாக பதிவு செய்துள்ளது. இது பலருக்கு ஊக்கம் தரும் வகையில் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாகனங்கள் வாங்குவது அது மக்களை அதிகம் இருக்கிறது. அவர்கள் வாங்கிய வாகனம் குறித்து மக்கள் பலர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இப்படியாக நடிகர் தங்கதுரை வாங்கிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் குறித்து தற்போது பலர் தேடி வருகிறார்கள். இந்த காரில் அவ்வளவு விலை கொடுத்து வாங்க என்ன இருக்கிறது என கேட்டு வருகிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவை நாங்கள் உங்களுக்கு வழங்கி உள்ளோம்.


Click it and Unblock the Notifications









