இப்படியெல்லாம் கார் இருக்கான்னு நீங்க கனவு கூட கண்டிருக்க மாட்டீங்க! எவ்வளவு சூப்பரா இருக்குது பாருங்க

கார்கள் தயாரிக்கப்படும் போது சில தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றனர் ஆனால் இன்று நம் தொழில்நுட்பங்கள் எல்லாம் கால்களில் தேவையே இல்லை என்ற நிலை இருக்கிறது. இப்படியாக கார்களில் உருவாக்கப்பட்ட தேவையில்லாத தொழில்நுட்பங்கள் தான் காணப்படுகிறோம்.

கார்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் மிக முக்கியமான அடையாளமாக மாறிவிட்டது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கார் டிரைவர் இல்லாமல் தானாக ஓடும் என சொன்னால் நம்மை பைத்தியம் என சொல்லி இருப்பார்கள். ஆனால் இன்று அது சாத்தியமாகிவிட்டது தானியங்கி கார்கள் எல்லாம் வந்துவிட்டன.

bizarre car innovations

இப்படியாக கார்களுக்கு மக்களுக்கு தேவையான பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தாலும் சில தொழில்நுட்பங்கள் தேவையே இல்லாத தொழில்நுட்பங்களாக ஒரு காலத்தில் காரில் வந்து அவையெல்லாம் பெயிலியர் ஆகி தற்போது காணாமலேயே போய் விட்டன. அப்படியான தொழில்நுட்பங்களை பற்றிய விரிவான விபரங்களை வரிசையாக காணலாம்.

முகப்பு பகுதியில் குதிரை: கார்கள் தயாரிக்கப்படும் காலத்திற்கு முன்னர் குதிரை வண்டிகள் தான் அதிகம் இருந்தது. குதிரை வண்டிகளை அடிப்படையாகக் கொண்டுதான் கார்கள் உருவாக்கப்பட்டன. இப்படியாக கார்கள் உருவாக்கும் போது அது வாகனம் என்பதை பாமர மக்களுக்கு தெரிவிப்பதற்காக அதன் முன்னால் குதிரை முகம் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் இது தேவையே இல்லாத பாகம் என்பதால் அதை நீக்கிவிட்டனர். இன்று இப்படியான குதிரை வைத்த கார்கள் எதுவும் இல்லை.

bizarre car innovations

குழந்தைகளுக்கான தனி பிரிவு: கார்கள் பிரபலமாகி வந்த காலத்தில் குழந்தைகள் பலர் காரின் மெக்கானிக்கல் லிவர்களை பயணத்தின் போது அடிக்கடி இழுத்து விளையாடினர். அதன் ஆபத்து உணராமல் அவர்கள் இப்படி செய்வதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் காரை தயாரிக்கும் போது குழந்தைகளை தனியாக வைக்கும்படி ஒரு தனி பிரிவு ஒன்றை உருவாக்கி விற்பனை செய்து வந்தனர். ஆனால் நாளடைவில் அது காருக்கு தேவையில்லாத பாகம் என்பதால் அதை நீக்கிவிட்டனர்.

நியூக்ளியர் இன்ஜின்: 1950களில் போர்ட் நிறுவனம் அணுசக்தியில் இயங்கும் இன்ஜினை வடிவமைத்து அதன் மூலம் காரை இயங்க வைக்க ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது. இதன்படி காரின் பின்பகுதியில் ஒரு குட்டி அணு உலையை வைத்து அங்கு அணு சக்தியை பிளப்பதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை வைத்து காரை இயக்க ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைத்தனர். ஆனால் இது மிக ஆபத்தான விஷயம் என்பதால் இந்த தொழில்நுட்பம் ஃபெயிலியர் ஆகி போனது.

bizarre car innovations

ரெக்கார்டு பிளேயர்: 1950களின் மத்தியில் ரெக்கார்டு பிளேயர் பிரபலமாக இருந்தது. அந்த காலத்து படங்களில் வட்டமாக சுருள் வடிவ டேப்புகளை வைத்து மிகப் பெரிய ஒலிபெருக்கியை வைத்து பாடல் கேட்பார்கள். அதை அப்படியே கார்களில் பொறுத்தி இருந்தார்கள். இது மிகப் பெரிய சத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் மேலும் இது காரில் பயன்படுத்துவது சிரமமாக இருந்தது. கார் பள்ளமேடுகளில் போகும்போது இதன் நீடில் அசைந்து ரெக்கார்டு மாறும் நிலை எல்லாம் ஏற்பட்டது. இதனால் இது முற்றிலுமாக காரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

நெருப்பு கக்கி: கார்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் திருட்டு பயம் அதிகமாக இருந்தது. அதே நேரம் ஊருக்கு வெளியே கார்களில் செல்லும் போது வழிப்பறி கொள்ளையர்கள் பிரச்சனை இருந்தது. காட்டுப்பகுதிக்குள் செல்லும்போது மிருகங்களின் பிரச்சனை இருந்தது. இவற்றில் இருந்து எல்லாம் தப்பிக்க வாகனங்களில் பக்கவாட்டு பகுதியில் நெருப்பு கக்கியை பொறுத்திருந்தனர்.பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் இதை முதலில் தனது காரில் பொருத்தியது. ஆனால் இன்று அதற்கான தேவை இல்லாததால் அது முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டது.

bizarre car innovations

சென்ட் தெளிப்பான்: இந்த காலத்திலேயே கார்களை உட்புறத்தை பராமரிக்க விட்டால் அங்கு மோசமான ஸ்மெல் வந்துவிடும். அந்த கால காரை கேட்கவா வேண்டும்? தாங்க முடியாத அளவுக்கு கெட்ட வாடை இருக்கும். அதை நீக்குவதற்காக பென்ஸ் நிறுவனம் முதன்முதலாக சென்ட் டிஸ்பென்சர் என்ற கருவியை காரில் பொருத்தியது. ஆனால் நாளடைவில் அதற்கு மாறாக காரில் நறுமணத்தை கொண்டு வர பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால் அந்த சென்ட் டிஸ்பென்சர் என்ற கருவி தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

பார்க்கிங்கிற்கான ஐந்தாவது வீல்: கார் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கார்களுக்கு நான்கு வீல்கள் தான் இருக்கிறது. ஆனால் இடையில் பார்க்கிங் செய்வதற்கான ஐந்தாவது வீல் ஒன்றை பொருத்தியிருந்தார்கள். இதன்மூலம் காரை எளிதாக பார்க்க செய்யலாம் என கருதி இதை பொருத்தினார்கள். ஆனால் இது பார்க்கிங்கை மேலும் சிரமம் ஆக்கியதால் இதை நீக்கி விட்டார்கள்.

bizarre car innovations

பறக்கும் கார்: பறக்கும் கார் தொழில்நுட்பம் என்பது இன்றளவும் டெவலப்மென்டில் தான் இருக்கிறது. ஆனால் 1960-70களில் பறக்கும் கார் தொழில்நுட்பத்தை ஒரு நிறுவனம் முயற்சி செய்தது காரில் விமானத்தின் இன்ஜினை பொருத்தி அதை பறக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிலிருந்து வெளியான அதிகமான சத்தம் அதிக எரிபொருளை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட காரணங்களால் இது தோல்வியில் முடிந்தது.

தண்ணீரில் மிதக்கும் கார்: கார் தரையிலும் ஓடும் தண்ணீரிலும் ஓடும் என்ற விஷயத்தை எல்லாம் நம் சினிமாவில் பார்த்திருப்போம், இதை உண்மையிலேயே சில நிறுவனங்கள் முயற்சி செய்தன. அதில் வெற்றியும் கண்டது. பல கார்கள் தண்ணீரிலும் மிதக்கும் படியும் சாலையில் ஓடும்படியும் வடிவமைத்தனர். வெளிநாடுகளில் பலர் இதை பெரும் வரவேற்புடன் வரவேற்றனர். ஆனால் இந்த காரின் பராமரிப்பு செலவு அதிகம் மற்றும் இந்த காரை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

இன்று பஸ்களில் டாய்லெட் வசதி இருந்தாலே நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம். ஆனால் 1947களில் கார்களில் டாய்லெட் வசதியை கொண்டுள்ளனர். மேலும் அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் இடையில் நிற்காமல் 10,000 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் தன்மை கொண்டதாக இருந்துள்ளது. ஆனால் நாளடைவில் இடவசதி மற்றும் டாய்லெட்டில் இருந்து வெளியேறும் கெட்ட வாடை ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் இந்த வசதியை நீக்கிவிட்டனர்.

Article Published On: Saturday, October 21, 2023, 21:59 [IST]
English summary
Thankfully failed car innovations the bizarre ones
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X