பிளாஸ்டிக் டிவைடர்கள் மீது வெண்டுமென்ற காரை ஏற்றிய நபர்.. காருக்கு சின்ன கீரல்கூட ஏற்படல.. எப்படி தெரியுமா?

இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) இருக்கின்றது. கடந்த கால கட்டத்தில் இந்த காரை வெறும் ஆஃப்-ரோடு (Off-Road) பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக மட்டுமே மஹிந்திரா தயார் செய்து விற்பனைக்கு வழங்கி வந்தது.

ஆனால், இப்போது விற்பனையில் இருக்கும் தார், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமல்ல தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. என்னதான் ரெண்டு வகையான பயன்பாட்டிற்கு உகந்த தயாரிப்பாக இந்த கார் உருவாக்கப்பட்டு இருந்தாலும், ஆஃப்-ரோடு பயணங்களின்போது மிக சிறப்பாக அந்த வாகனம் செயல்படுவதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது.

Mahindra thar driver drives over plastic

இத்தகைய காரையே, அதாவது, மிக சிறப்பாக ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ளும் இந்த காரை, இந்தியர் ஒருவர் மிக மோசமாக பயன்படுத்தி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சாலையின் நடுவே சாலையை பிரிக்கும் விதமாக பிளாஸ்டிக் டிவைடர்கள் (Plastic Barriers) பொருத்தப்பட்டு இருக்கும்.

எதிரில் வரும் மற்ற வாகனங்களை இடைமறிக்காமல் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த அம்சம் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய ஓர் அம்சத்தின்மீதே மஹிந்திரா தார் கார் உரிமையாளர் ஒருவர் வேண்டுமென்றே ஏற்றிக் கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Thar driver drives over plastic

கார் ஏற்றப்பட்ட பின்னரும் அந்த பிளாஸ்டிக் பேரியர்கள் நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிகின்றது. வாகன ஓட்டிகள் தெரியாமல் இவற்றின் மீது ஏற்ற நேரிடலாம். அந்த நேரத்தில் பேரியர்கள் நிலை நிறுத்த வேண்டும் என்கிற நோக்கில், இந்த பேரியர்கள் அனைத்தும் நெகிழும் தன்மையுடன் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால்தான், பேரியர்கள் பெரும்பாலானவை நல்ல நிலையில் இருக்கின்றன. அதேவேளையில், ஒரு சில பிளாஸ்டிக் டிவைடர்கள் தாரின் அதிக எடை மற்றும் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் உடைந்து நொறுங்கி இருக்கின்றன. ஆகையால், காவல்துறை கட்டாயம் இந்த வாகனத்தின் மீது கடுமையாந நடவடிக்கையை எடுக்கும் என தெரிகின்றது.

Mahindra thar

தெரியாமல் இந்த டிவைடர்கள் மீது மோதினாலே காவல்துறை அந்த குறிப்பிட்ட வாகனத்தின்மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும். இந்த மாதிரியான சூழலில் மஹிந்திரா தார் கார் உரிமையாளர் வேண்டும் என்றே இந்த டிவைடர்கள் மீது மோதியிருப்பது காவல்துறையின் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுத்து இருக்கின்றது.

சம்பவம் நடைபெற்ற இடம் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. வீடியோவை வைத்து பார்க்கையில் இந்த சம்பவம் வட இந்தியாவில் அரங்கேறி இருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. காரில் நம்பர் பிளேட் இல்லாத காரணத்தினால் வாகனத்தின் உரிமையாளர் குறித்து கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.

தார் டிரைவர் இவ்வாறு செய்வதற்கு காரணமாக என்ன இருக்கலாம் என ஆராய்ந்ததில், அந்த சாலை ஓர் மிகக் குறுகலான பாதையாகவும், ஒரே ஒரு வாகனம் மட்டுமே பயணிக்கின்ற ஓர் சாலையாகவும் இருந்ததே இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே அந்த நபர் சாலையின் நடுவே பொருத்தப்பட்டு இருந்த பேரியர்களை ஏற்றி அழிக்க நினைத்திருக்கலாம் என யூகிக்க முடிகின்றது.

ஒன்றின் ஒன்றாக வாகனம் செல்ல வேண்டும் என்றே இந்த பேரியர்கள் பொருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், அதையே உடைத்தெறியும் முயற்சியில் தார் உரிமையாளர் ஈடுபட்டு இருக்கின்றார். டிவைடர்களை தெரியாமல் அவர் மோதிவிட்டார் என்று கூற முடியாது. ஏனெனில் அனைத்து டிவைடர்களிலும் ரெஃப்ளெக்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இவை வெளிச்சம் இல்லா நேரங்களில்கூட மிகவும் பிரகாசமாக தெரியும். ஆகையால், அவை கண்களுக்கு புலப்படவில்லை என கூறி சமாளிக்க முடியாது. எனவே இந்த சம்பவத்தை தெரிந்தே செய்திருக்கின்றார் என்பதையும் நம்மால் உறுதி செய்ய முடிகின்றது. இந்த பேரியர்கள் நெகிழும் தன்மைக் கொண்டவை என்பதால் தார் காருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

ஏன் சிறு சிராய்ப்புகள்கூட அந்த காரில் ஏற்படவில்லை. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு ரூ. 10.98 லட்சம் தொடங்கி ரூ. 16.94 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆஃப்-ரோடு பயண பிரியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிசிடிவி கேமிரா மற்றும் வைரல் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த தார் காரின் அலட்சியமான செயல்குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. ஆகையால், பொது சொத்தை சேதப்படுத்தியதற்கான நடவடிக்கை இந்த கார் மீது விரைவில் பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 13:38 [IST]
English summary
Thar suv driver deliberately drove over plastic divider here is viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X