உலகின் மிகப்பெரிய டாப் 10 பயணிகள் விமானங்கள்!

Written By:

உலகத்தை சுருங்கச் செய்ததில் விமானப் போக்குவரத்துக்கும் முக்கிய பங்குண்டு. விமானப் போக்குவரத்தின் தேவை அதிகரித்து வருவதால், விமானங்களின் வடிவமும், வேகமும் கூடிக் கொண்டே செல்கிறது. அதற்கு தகுந்தாற்போல்இ மிக பிரம்மாண்டமான வடிவத்தில் விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஏதோ கல்யாண மண்டபத்தில் புகுந்தது போன்று , பல நூறு பயணிகளின் தலைகளை காணும் உணர்வை தரும் விதத்தில், வடிவமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக பிரம்மாண்டமான பயணிகள் விமானங்களில் நீங்களும் பயணித்திருக்கலாம், அல்லது பயணிக்கும் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். அதற்கு ஏதுவாக அந்த விமானங்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 10. ஏர்பஸ் ஏ340-300

10. ஏர்பஸ் ஏ340-300

இருக்கை எண்ணிக்கை - 295

1993ம் ஆண்டு முதல் உற்பத்தியில் இருக்கும் இந்த விமானம். கிட்டத்தட்ட நடுத்தர வகை கல்யாண மண்டபத்தின் அளவு 295 பேர் அமர்வதற்கான இருக்கைகள் அமைப்பதற்கான இடவசதியையும், அவர்களின் உடைமைகள் மற்றும் எரிபொருளை சுமந்து கொண்டு பறக்கும். அதாவது, சாதாரண கட்டணம் கொண்ட இருக்கைகளாக இருந்தால் 295 பேரும், இரண்டு வகுப்புகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டால், 267 பேரும் பயணிக்கலாம். அதிகபட்சமாக 13,705 கிமீ தூரம் இடைநில்லாமல் பயணிக்கும். இந்த பட்டியலில் கடைசி இடம் பிடித்த இந்த விமானத்திலேயே 300 பேர் பயணிக்கலாம் என்றால், அடுத்தடுத்து வரப்போகும் விமானங்களை நினைத்தாலே, கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்டத்தை பெற்றிருக்கின்றன. இந்த விமானத்தில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுவரை 246 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

 09. ஏர்பஸ் ஏ340- 500

09. ஏர்பஸ் ஏ340- 500

முந்தைய ஸ்லைடில் பார்த்த ஏர்பஸ் ஏ340 குடும்ப வரிசையில் 372 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதி கொண்ட மாடல். சாதாரண வகுப்பு இருக்கைகளாக இருந்தால், 372 பேரும், இரண்டு வகுப்புகள் கொண்ட இருக்கை அமைப்பு கொண்ட இந்த விமானத்தில் 313 பேரும் பயணிக்கலாம். இடை நில்லாமல் 16,700 கிமீ தூரம் பறக்கும் என்பதால், பெரும்பாலும் நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் உலகின் அதிக தூரம் பயணிக்கும் விமானம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்த விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 553 டர்போஃபேன் எஞ்சின்கள் பயன்டுத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 22 விமானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதில் எமிரேட்ஸ் நிறுவனத்திடம் மட்டும் 10 விமானங்கள் உள்ளன.

 08. ஏர்பஸ் ஏ340 - 600

08. ஏர்பஸ் ஏ340 - 600

ஏர்பஸ் ஏ340 குடும்ப வரிசையில் அதிக இருக்கை வசதி கொண்ட மாடல். இந்த விமானத்தில் சாதாரண வகுப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தால், 420 பேர் பயணிக்க முடியும். இந்த விமானத்தில் 4 ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 553 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த விமாநம் 14,353 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 933 கிமீ வேகத்தில் பயணிக்கும்.

 05. போயிங் 777 - 200

05. போயிங் 777 - 200

சர்வதேச அளவில் விமான தயாரிப்பில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திற்கும், அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திற்கும் இடையில்தான் நேரடி போட்டி. அந்த வகையில், ஏர்பஸ் நிறுவனத்திற்கு போட்டியாக போயிங் வைத்திருக்கும் மாடல்கள் பல உண்டு. அதில், போயிங் 777-200 விமானமும் முக்கியமானது. இந்த விமானத்தில் 440 பேர் வரை பயணிக்க முடியும். இடைநில்லாமல் 14,260 கிமீ தூரம் வரை பறக்கும் வல்லமை கொண்டது. இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி நிறுவனத்தின் PW4090 என்ற இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மணிக்கு 944 கிமீ வேகத்தில் பறக்கும். இதுவரை 439 விமானங்களை போயிங் விற்பனை செய்துள்ளதை வைத்தே, இதற்கான மவுசும், பயன்பாடும் குறித்து அறிந்து கொள்ளலாம்.

06. ஏர்பஸ் ஏ380-700

06. ஏர்பஸ் ஏ380-700

உலகின் மிகப்பெரிய விமான மாடலாக வர்ணிக்கப்படும் ஏர்பஸ் ஏ380 குடும்பத்தில் குறைந்த இருக்கை எண்ணிக்கை கொண்ட மாடல் இதுதான். ஆனால், இதில் 525 பேர் பயணிக்க முடியும். இந்த விமாநத்தில் நான்கு அலையன்ஸ் ஜிபி7270 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 16,112 கிமீ தூரம் பயணிக்கும். மணிக்கு 1,087 கிமீ வேகத்தில் பறக்கும்.

05. போயிங் 777-300

05. போயிங் 777-300

போயிங் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகப்பெரிய பயணிகள் விமான மாடல்களில் ஒன்று. இந்த விமானத்தில் 550 பயணிகள் வரை செல்ல முடியும். இரண்டு வகுப்புகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டால், 451 பேர் பயணிக்கலாம். அதிகபடசமாக, 11,135 கிமீ தூரம் பயணிக்கும். இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் ஆர்ஆர்892 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு அதிகபட்சமாக 944 கிமீ வேகத்தில் பயணிக்கும்.

04. போயிங் 747- 400

04. போயிங் 747- 400

இந்த விமானத்தில் சாதாரண வகுப்பு இருக்கைகளாக அமைக்கப்பட்டிருந்தால், 624 பேர் பயணிக்க முடியும். இடைநில்லாமல் 13,446 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 910 கிமீ வேகத்தில் பறக்கும். இந்த விமானத்தில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நான்கு GE CF6-80C2B5F எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை 1,358 விமானங்களை போயிங் விற்பனை செய்துள்ளது.

03. போயிங் 747 -8

03. போயிங் 747 -8

இந்த விமானத்தில் 700 பேர் பயணிக்க முடியும். இரண்டு வகுப்புகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டால், அதிகபட்சமாக 600 பேர் பயணிக்கலாம். இடைநில்லாமல் 14,816 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த விமானத்திலும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நான்கு GEnx 2B67 என்ற எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மணிக்கு 1,044 கிமீ வேகம் வரை பறக்கும். ஆனால், இதுவரை 5 விமானங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

02. ஏர்பஸ் ஏ380 - 800

02. ஏர்பஸ் ஏ380 - 800

உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380 விமானம் மூன்று மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதில், நடுத்தர வகை மாடல் இது. இந்த விமானத்தில் 853 பேர் வரை பயணிக்க முடியும். இரண்டு வகுப்பு இருக்கைகள் இருந்தால், 644 பேர் பயணிக்கலாம். இடைநில்லாமல் 15,200 கிமீ தூரம் பயணிக்கும். மணிக்கு 1,087 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த விமானத்தில் நான்கு ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 970பி எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை 192 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

01. ஏர்பஸ் ஏ380- 900

01. ஏர்பஸ் ஏ380- 900

உலகின் மிகப்பெரிய விமானமான இதில், 900 பேர் வரை பயணிக்கலாம். அதாவது, ஒரு பெரிய ஆடிட்டோரிம் போன்ற இடவசதியை கொண்ட விமானம். இந்த விமானத்தில் நான்கு ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் பி சீரிஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 1,087 கிமீ வேகம் வரை பறக்கும். இந்த விமான சேவை இந்தியாவில் இருந்தாலும், ஒரு சில விமான நிலையங்களில் மட்டுமே இந்த விமானத்தை இறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் இந்த விமானத்தை தரையிறக்க முடியாது.

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானப்படைகள்: சீனாவுக்கு அடுத்து இந்தியா!

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானப்படைகள்: சீனாவுக்கு அடுத்து இந்தியா!

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The 10 Biggest Passenger Airplanes in the World.
Story first published: Saturday, July 2, 2016, 14:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more