புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ் நிகழ்ச்சியை அரண்மனையில் வைத்து நடத்தி அமர்க்களப்படுத்தியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். பிரத்யேக படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த மாதம் 26ந் தேதி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புதிய காரை ஓட்டி பார்த்து அலசுவதற்கான மீடியா டிரைவ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் மாடலாக குறிப்பிடப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் சொகுசு தன்மையை பிரதிபலிக்கும் விதத்தில், மீடியா டிரைவ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஃபாலக்ணுமா அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

இந்த புதிய மாடலை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக எமது குழுவினர் நேற்று ஹைதராபாத் சென்றனர். நேற்று இரவு ஃபலக்னுமா அரண்மனையில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் அமைந்தது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

ஃபலக்னுமா அரண்மனையில் உள்ள 101 பேர் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய டைனிங் டேபிளில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மீடியா டிரைவுக்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு ராஜ உபச்சாரத்துடன் இரவு விருந்து நடந்தது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

ஃபலக்னுமா அரண்மனையை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் டிரைவ்ஸ்பார்க் டீமிற்கு கிடைத்தது. இந்த பிரம்மாண்ட அரண்மனை ஐதராபாத் நிஜான் குடும்பத்திற்கு சொந்தமானது. பைகா குடும்பத்தினரிடம் இருந்து இந்த அரண்மனையை ஐதராபாத் நிஜாம் வாங்கினார்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

ஃபாலக்னுமா என்றால் உருது மொழியில் "ஆகாய பிம்பம்" என்று பொருள்படுகிறதாம். ஆங்கிலேய கட்டடக் கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்ட, இந்த அரண்மனை தேளின் வடிவத்தை பெற்றிருப்பது இதன் சிறப்பு.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

இந்த அரண்மனை 32 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாகவும், அழகிய கட்டடக் கலை அமைப்புடன் காட்சியளிக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

நுணுக்கமான கட்டடக் கலை, வண்ணம் பூசப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள், கண்ணை பறிக்கும் அலங்கார விளக்குகளுடன் இப்போது ஜொலிக்கிறது. சார்மினாரில் இருந்து இந்த அரண்மனை 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

1950ம் ஆண்டிற்கு பின்னர் நிஜான் குடும்பம் வெளியேறிய பின்னர், இந்த அரண்மனை செயலிழந்து போனதுடன் 30 ஆண்டுகள் வரை மூடிக் கிடந்தது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

அதன் பிறகு 2000ம் ஆண்டு தாஜ் ஓட்டல் நிர்வாகம் இந்த அரண்மனையை நிஜாம் குடும்பத்திடமிருந்து 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, பழமை மாறாமல், புதுப்பித்து நட்சத்திர ஓட்டலாக மாற்றியது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்பிற்கு இந்த அரண்மனையில்தான் பிரதமர் மோடி விருந்து அளித்தார் என்பது நினைவிருக்கலாம். அதே அரண்மனை ஓட்டலில்தான் தற்போது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காருக்கான மீடியா டிரைவ் நிகழ்ச்சியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மீடியா டிரைவ்... அமர்க்களப்படுத்திய பென்ஸ்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் டெஸ்ட் டிரைவ் ஹைதராபாத்தில் இன்று நடந்து வருகிறது. இந்த காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Article Published On: Thursday, March 15, 2018, 11:20 [IST]
English summary
The Best Car In The World: Does it the best way - Media Drive.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+