சரக்கு கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப்- 10 நிறுவனங்கள்!
உலகின் சரக்கு போக்குவரத்து பெரும் பகுதி கடல் வழியாக நடக்கிறது. சமீப காலமாக உலக மயமாக்கல் கொள்கை மூலமாக சர்வதேச அளவில் கடல் வழி சரக்கு போக்குவரத்து கணிசமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
அனைத்து சரக்கு பரிமாற்றத் துறைகளிலும் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் வர்த்தக மதிப்பும் வியக்க வைப்பதாகவே இருக்கிறது. இந்த நிலையில், இந்த துறையில் சர்வதேச அளவில் கோலோய்ச்சும் டாப்-10 நிறுவனங்களை ஸ்லைடரில் காணலாம்.
டாப்- 10 நிறுவனங்களை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சரக்கு கப்பல் நிறுவனங்கள்
சரக்கு கப்பல் போக்குவரத்தில் உலகின் மிகப்பெரிய டாப்- 10 நிறுவனங்களின் பட்டியலை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். ஒரே நேரத்தில் எவ்வளவு கன்டெய்னர்களை கையாளும் திறன் கொண்டவை என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
Photo Credit:Corey Seeman via Flickr

10. மிட்சூய் ஓ.எஸ்.கே.லைன்ஸ் லிட்
டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்ஓஎல்., சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்துதான். கடந்த 1884ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் தற்போது நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளன. சரக்கு கப்பல்கள் மட்டுமின்றி, உல்லாச கப்பல்கள், படகுகள், எண்ணெய் கப்பல்கள், கன்டெய்னர் கப்பல்களும் அதில் அடங்கும்.
Photo Credit:MOL by Scott Hess via Flickr

9.சிஎஸ்சிஎல்
சீன ஷிப்பிங் கன்டெய்னர் லைன்ஸ் என்பதைத்தான் சிஎஸ்சிஎல் என்று குறிப்பிடுகின்றனர். 1997ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகளில் முக்கிய சக்தியாக விளங்குகிறது.
Photo Credit:CSCL by Corey Seeman via Flickr

8. ஹன்ஜின் ஷிப்பிங் கம்பெனி
தென்கொரியாவை சேர்ந்த ஹன்ஜின் நிறுவனமும் கப்பல் போக்குவரத்து துறையில் மிக முக்கியமானதாக விளங்குகிறது. கடந்த 1949ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனத்திடம் தற்போது 200 கப்பல்கள் உள்ளன. ஆண்டுக்கு 4 மில்லியன் கன்டெய்னர்களை இந்த நிறுவனம் சரக்கு பரிமாற்றம் செய்கிறது. இதில், 2.3 மில்லியன் கன்டெய்னர்களை புசன் துறைமுறைம் வழியாக கையாள்கிறது.
Photo Credit:Hanjin by Pete via Flickr

7. அமெரிக்கன் பிரசிடென்ட் லைன்ஸ்
ஏபிஎல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் சரக்கு கப்பல் போக்குவரத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது. மேலும், கூடுதல் நீளம் கொண்ட கன்டெய்னர்களை கையாண்ட முதல் நிறுவனம் என்ற பெருமைக்குரியது. சிங்கப்பூரை சேர்ந்த ஓரியண்ட் ஷிப்பிங் லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.
Photo Credit:APL by Buonasera via Wikimedia Commons

6.ஹபாக்- லாயிட்
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 1970ம் ஆண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இருப்பினும், சரக்கு போக்குவரத்தில் நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. கடந்த 2005ம் ஆண்டு இந்த நிறுவனத்தை கனடாவை சேர்ந்த சிபி ஷிப்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. இந்த நிறுவனத்திடம் 147 கப்பல்கள் உள்ளன.
Photo Credit:Henry M. Trotter via Wikimedia Commons

6.காஸ்கோ
சீன ஓசியான் ஷிப்பிங் கன்டெய்னர் லைன் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனமும் சரக்கு போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க நிறுவனம். கடந்த 1961ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்த்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் 550 கப்பல்கள் உள்ளன. மேலும், இந்த நிறுவனத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன.
Photo Credit:Roman Boed via Wikimedia Commons

4.எவர்க்ரீன் லைன்ஸ்
சீனாவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான எவர்க்ரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனமும் சரக்கு போக்குவரத்தில் மிப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்திடம் 160 கன்டெய்னர் கப்பல்கள் உள்ளன. இதன் கப்பல்கள் அனைத்தும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருப்பதால் பிரத்யேக அடையாளத்துடன் காணப்படுகின்றன.
Photo Credit:Evergreen via Maritime

3.சிஎம்ஏ சிஜிஎம் குரூப்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் வட அமெரிக்காவிலுல்ள வர்ஜீனியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த 1851ம் ஆண்டு முதல் நீண்ட பாரம்பரியம் கொண்டதாக அறியப்படுகிறது. 200 கடல்வழித்தடங்கலில் 150 நாடுகளிலுள்ள 400 துறைமுகங்களுக்கு சேவையாற்றுகிறது.
Photo Credit:CMA CGM Group

2.மெடிட்டரானியன் ஷிப்பிங் கம்பெனி
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 1970ம் ஆண்டு துவங்கப்பட்டது. உலகின் முக்கிய துறைமுகங்கள் அனைத்திற்கும் சரக்கு போக்குவரத்து பரிமாற்றம் செய்கிறது. இது 474 கப்பல்களை வைத்துள்ளது. இதனிடம் உள்ள எம்எஸ்சி இம்மானுவேல் என்ற கப்பல் உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் 2.3 மில்லியன் டிஇயூ கன்டெய்னர்களை கப்பல்களில் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
Photo Credit:MSC by Havenfoto

1.மெர்ஸ்க்
ஏபிஎம்- மெர்ஸ்க் அழைக்கப்படும் இந்த நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமாக விளங்குகிறது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகன் நகரைத் தலைமையிடமாக கொம்டு செயல்படும் இந்த நிறுவனம் 1904ம் ஆண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்திடம் 600 கப்பல்கள் உள்ளன. எம்மா மெர்ஸ்க் என்று பெயரிடப்பட்ட இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்தான் உலகின் மிகப்பெரிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலுள்ள 150 நாடுகளில் சரக்கு போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் 3.8 மில்லியன் கன்டெய்னர்களை பரிமாற்றுவதற்கான எண்ணிக்கையில் கப்பல்களை கொண்டுள்ளது.
Photo Credit: Maersk by Havenfoto


Click it and Unblock the Notifications








