பேய் நடமாட்டம்?... சென்னையின் அச்சமூட்டும் 5 சாலைகள்!

Posted By:

சினிமா, சீரியல் என எங்கு பார்த்தாலும் பேய் நெடி. மனித ஆவி, பேய் போன்ற கட்டுக் கதைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடித்து நொறுக்கி, விஞ்ஞானத்திலும், விவேகத்திலும் பன்மடங்கு உயர்ந்து விட்ட போதிலும் பலர் இதனை மனதளவில் புறந்தள்ள மறுக்கின்றனர்.

இதனால், இதுபோன்ற கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இரவு 10 மணிக்கு ஆசுவாசமாக டிவி பார்க்க அமர்ந்தால் கூட, ரிமோட் கிடைப்பதில்லை. அந்தளவு இந்த பேய், பிசாசு தொல்லை உண்மையிலேயே நம்மை வறுத்தெடுக்கிறது. அது கூட பரவாயிலல்லை. இந்த கட்டுக்கதைகளால் பலரை அச்சமூட்டி வைத்திருக்கும் சென்னை சாலைகள் சிலவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.

 01. அண்ணா மேம்பாலம்

01. அண்ணா மேம்பாலம்

எந்நேரமும் வாகன போக்குவரத்தால் திமிலோக பட்டு வரும் அண்ணா மேம்பாலத்தில் நடந்த சில தற்கொலை சம்பவங்களை வைத்து, அங்கு ஆவி நடமாட்டம் இருப்பதாக கட்டுக் கதைகள் உண்டு. அமானுஷ்யமான செயல்களும் இங்கு நடைபெறுவதாக கதைகள் உண்டு. நாம் அந்த பாலத்தில் பலமுறை கடந்து போன போது ஒரு ஆவியையும் சந்திக்க இயலவில்லை என்பது வருத்தமே.

Photo Credit:artupdate.com

02. புளூ கிராஸ் ரோடு

02. புளூ கிராஸ் ரோடு

அடர்ந்த மரங்களுடன் அச்சமூட்டும் வகையில் இருப்பதாலோ என்னவோ, இந்த சாலை குறித்த கதைகளை நம்பி பலர் இந்த சாலையை தவிர்க்கின்றனர். பகல் வேளைகளியே செல்ல அச்சப்படும், இந்த சாலை இரவு வேளையில் சொல்லவா வேண்டும்.

Photo Credit:fearandyou.in

03. கிழக்கு கடற்கரை சாலை

03. கிழக்கு கடற்கரை சாலை

கார் அல்லது பைக்கில் ஒரு செமத்தியான ரவுண்ட் செல்வதற்கு ஏற்ற இடமாக கருதப்படும், இந்த சாலையை, மச்சா, நைட்ல போகாதாடா என்று நண்பர்கள் அறிவுரை கூறும் அளவுக்கு அச்சமூட்டும் சாலையாக தெரிவிக்கின்றனர். சுனாமியில் சிக்கி இறந்தவர்கள் இரவு நேரங்களில் இந்த சாலையில் ஆவியாக உலவுதாக கதைகள் ஏராளம். இந்த வழியில் இரவில் பயணித்த போது அப்படி ஒரு ஆவியையும், பேயையும் இதுவரை கண்டதில்லை.

Photo Credit:hourdose.com

04. பெசன்ட் அவென்யூ ரோடு

04. பெசன்ட் அவென்யூ ரோடு

பெசன்ட் நகர், பெசன்ட் அவென்யு தெருவில் எப்போதுமே ஆள் அரவமற்ற நிசப்தமான சூழலை கொண்டிருக்கிறது. இரவில் இந்த சாலையில் செல்வோர் பேய் தாக்குதலுக்கு உள்ளாவதாக கட்டுக்கதைகள் ஏராளம்.

Photo Credit:commons.wikimedia.org

05. செயிண்ட் மேரீஸ் ரோடு

05. செயிண்ட் மேரீஸ் ரோடு

ஆழ்வார்பேட்டை, டிமான்ட்டி காலனி அருகிலுள்ள செயிண்ட் மேரீஸ் சாலையில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக கட்டுக்கதைகள் உண்டு. இந்த சாலையிலும் பலர் செல்வதை தவிர்க்கின்றனர். இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் ஒரு சினிமாவும் வந்து பயத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Photo Credit:thehindu.com

 பேயாம், பிசாசாம்...

பேயாம், பிசாசாம்...

இந்த 21ம் நூற்றாண்டிலும் இது போன்ற கட்டுக்கதைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது. அதன் காரணமாகவே இதுபோன்ற கட்டுக்கதைகளை வைத்து சினிமாக்காரர்கள் எளிதாக வியாபாரம் செய்ய முடிகிறது. 500 கோடி கிமீ தொலைவில் உள்ள புளூட்டோவுக்கு சேட்டிலைட் அனுப்பி சாதித்து செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த கட்டுக் கதைகளுக்கு மதிப்பளிப்பது விந்தைதான். சமூக விரோத செயல்களுக்கான சுதந்திரத்தை பெறுவதற்கும், வியாபாரத்திற்கும் இந்த சமூகத்தை தவறான பாதையில் கொண்டு செல்வதற்காக கிளப்பி விடப்படும் இதுபோன்ற கட்டுக் கதைகளை புறந்தள்ளுவதே சரியாக இருக்கும்.

Photo Credit:hourdose.com

  
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
check these 5 haunted roads in Chennai.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark