ஜெய் ஸ்ரீராம்-னு கத்திட்டே கிரேட் காலி செய்த காரியம்.. ஃபார்ச்சூனரை ரொம்ப லேசா எடை போட்டுட்டாரு!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகப் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)-ம் ஒன்றாகும். இந்த காரையே இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் எந்த உபகரணமும் இன்றி தூக்க முயற்சித்து இருக்கின்றார். அவரின் அந்த முயற்சி வெற்றி பெற்றதா? டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இப்படி தூக்குவது சாத்தியமானதுதானா? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நம்மில் பலர் அறிந்த ஓர் நபர் 'தி கிரேட் காலி' ஆவார். உலக புகழ் பெற்ற டபிள்யூ.டபிள்யூ.இ., (WWE) போட்டிகளில் இவர் பங்கு பெற்றிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. ஹல்க்-ஐ போலவே மிகவும் பெரிய உருவம் கொண்ட நபராக இவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

இதனாலேயே இந்தியாவின் முன்னணி பிரபலவங்களில் ஒருவராக அவர் மாறி இருக்கின்றார். இவரின் இயற்பெயர் தலிப் சிங் ரானா என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது மல்யுத்த போட்டிகளைக் காட்டிலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இவர் இயங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே சமூக வலைதள பதிவிற்காக அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார்.
தன்னுடைய இந்த முயற்சி பற்றிய வீடியோவையும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். ஜெய் ஸ்ரீராம் என கூறியவாறு அந்த காரை அவர் தூக்க முயற்சித்தார். இருப்பினும் அவரால் அந்த காரை தூக்க முடிந்தததாக தெரியவில்லை. இருப்பினும் அவருடைய இந்த முயற்சி பாராட்டிற்கு உரியது.

ஆனால், இந்த காரை அவர் தேர்ந்தெடுத்ததுதான் தவறான செயல் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் ஓர் சாதாரண எஸ்யூவி கார் மட்டுமல்ல. ஆஃப்-ரோடை சமாளிக்கும் வசதிக் கொண்ட மிக சூப்பரான எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதனாலேயே இதன் எடையும் மிக மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் எடை சுமார் 2,500 கிலோவிற்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 2 வீல் டிரைவ் வசதிக் கொண்ட ஃபார்ச்சூனரே இந்த எடைக் கொண்டதாக இருக்கின்றது. இதன் 4 வீல் டிரைவ் வசதிக் கொண்டது 2,735 கிலோவிற்கும் அதிகம் எடைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

இத்தகைய மாபெரும் எடைக் கொண்ட காரையே உபகரணம் இன்றி தூக்க முயற்சித்திருக்கின்றார் தி கிரேட் காலி. ஆனால், அவரால் அந்த காரை லேசாக அசைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த அளவு அதிக எடைக் கொண்ட காரை பத்து பேர் சேர்ந்தாலும் நகர்த்துவது என்பது சற்று கடினமானதே ஆகும்.
இதனால்தான், இதுமாதிரியான பெரிய உருவம் கொண்ட கார்களை நகர்த்த அல்ல இடம் பெயர செய்வதற்கு லிஃப்டிங் கருவிகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் சற்று காஸ்ட்லியான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஃபார்ச்சூனரும் ஒன்றாகும். இதன் ஆரம்ப விலையே ரூ. 33.43 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின், குறிப்பாக, செல்வந்தர்களின் பிரியமான எஸ்யூவி கார் மாடலாக ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு இந்திய அரசியல்வாதிகள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காரையே தூக்க பார்த்து தோல்வியைச் சந்தித்து இருக்கின்றார் தி கிரேட் காலி.


Click it and Unblock the Notifications









