அட்டகாசமான உல்லாச படகு: அந்தரத்திலிருந்து கடல் அழகை ரசிக்கும் வாய்ப்பு!

By Saravana

வழக்கமான டிசைனிலிருந்து மாறுபட்டு, சற்றே வித்தியாசமான உல்லாச படகு மாதிரி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆடம்பர வசதிகள் பிற படகுகளை போல இருந்தாலும், அந்தரத்திலிருந்து கடல் அழகை ரசிக்கும் விதத்தில் இந்த படகு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பெரும் பணக்காரர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்கள் கொண்ட இந்த படகின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இத்தாலிய டிசைனர்

இத்தாலிய டிசைனர்

இந்த படகு மாதிரியை இத்தாலியை சேர்ந்த கேப்ரியல் டெருஸி என்ற டிசைனர் வடிவமைத்துள்ளார். இந்த படகிற்கு Shaddai என்று பெயரிட்டிருக்கிறார். இதற்கு ஹீப்ரூ மொழியில்ல அளவற்ற ஆற்றல் என்று பொருள்படுகிறது.

சாய்ந்த கோபுரம்

சாய்ந்த கோபுரம்

150 மீட்டர் நீளம் கொண்ட சடாய் படகில், உரிமையாளருக்கான உல்லாச வசதிகள் கொண்ட தனி அறை 38 மீட்டர் உயரம் கொண்ட சாய்ந்த கோபுரத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

இந்த சாய்ந்த கோபுரத்தின் மேல் அறை மட்டுமில்லை, பார், சாப்பாட்டுக்கூடம், நீச்சல் குளம் போன்றவை உள்ளன. இதனால், கடல் அழகு சலித்தாலும், உடனே இந்த பக்கம் கவனத்தை செலுத்தலாம்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

கோபுரத்தைத் தாண்டி, படகின் கீழ் பகுதியில் உள்ள டெக்கில், நீச்சல் குளம், பீச் க்ளப், மீன் தொட்டி போன்றவை உள்ளன.

 பரவச அனுபவம்

பரவச அனுபவம்

38 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் அறையிலிருந்து கடலின் அழகை ரசிப்பது ஒரு பரவச அனுபவத்தை வழங்கும் என்று கேப்ரியல் கூறியிருக்கிறார். இப்படி ஒரு அனுபவத்தை இதுவரை எந்த ஒரு ஆடம்பர படகிலும் பெற்றிருக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.

முதலீடு தேவை

முதலீடு தேவை

தற்போது இந்த ஆடம்பர படகை தயாரிப்பதற்கு, முதலீடு செய்ய விருப்பமுடைய பெரும் பணக்காரர்களை தேடி வருகிறார்கள். நிச்சயம் இந்த படகு பெரும் பணக்காரர்களை கவரும் விததிதல் உள்ளதால், விரைவில் தயாரிப்புக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

Article Published On: Monday, May 16, 2016, 10:38 [IST]
English summary
This concept superyacht from Italian designer Gabriel Teruzzi could be the future of travel for the world's oligarchs. The futuristic superyacht is called the Shaddai, a Hebrew word which when translates into English as 'omnipotent' or 'almighty'.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+