கார் கதவை சாத்த தெரியாமல் மானத்தை வாங்கிய தமிழ் பட நடிகை! ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!

பொது இடங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பிரபல மனிதர்கள் சிறிய தவறு செய்து விட்டால் கூட, சமூக வலை தளங்களில் பயங்கரமான கேலி மற்றும் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே பிரபலமான நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொது இடங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்கின்றனர். இருப்பினும் அதையும் மீறி ஒரு சிலர் சில சமயங்களில் சிறிய தவறுகளை செய்து விடுகின்றனர். இதன் காரணமாக சமூக வலை தளங்களில் ஒரு சில நாட்களுக்கு அவர்களை 'ட்ரோல்' செய்து பாடாய்படுத்தி விடுகின்றனர்.

இந்த வரிசையில் பிரபலமான நடிகை ஒருவர் தற்போது சமூக வலை தளங்களில் கேலி மற்றும் கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறார். அவர் பிரபல நடிகையான ஊர்வசி ரவுத்தேலா (Urvashi Rautela) ஆவார். கேமரா முன்பாக அவர் செய்த காரியம் ஒன்றுதான், அவரது பாடாய்படுத்தி கொண்டிருக்கும் கேலி மற்றும் கிண்டல்களுக்கு காரணம்.

Urvashi Rautela Trolled For Manually Closing Door Of Rolls Royce Cullinan

அப்படி அவர் என்ன செய்தார்? என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக முதலில் ஊர்வசி ரவுத்தேலாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். இவரை பற்றி பலருக்கும் தெரியும் என்றாலும் கூட, தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். ஊர்வசி ரவுத்தேலா மிகவும் பிரபலமான நடிகை ஆவார்.

ஹிந்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் ஊர்வசி ரவுத்தேலா நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கும் கூட இவர் நன்கு பரிட்சயமானவர்தான். கடந்த 2022ம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் (The Legend) திரைப்படத்தில், அருள் சரவணன் (Arul Saravanan) உடன் ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார்.

Urvashi Rautela

சரி, விஷயத்திற்கு வருவோம். ஊர்வசி ரவுத்தேலாவை சுற்றி வரும் ட்ரோல்களுக்கு ஒரு வைரல் வீடியோதான் காரணம். இந்த வைரல் வீடியோவில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காரின் கதவை ஊர்வசி ரவுத்தேலா தனது கைகளால் மூடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் கதவுகள் அதிக எடை கொண்டதாக இருக்கும். அவற்றை கைகளால் ஒவ்வொரு முறையும் மூடுவது என்பது பலருக்கும், குறிப்பாக செல்வந்தர்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக இருக்கலாம். இதன் காரணமாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் டோர்கள் வழங்கப்படுகின்றன.

இந்த வசதியை பயன்படுத்துவதற்காக ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஒரு பட்டன் வழங்கப்பட்டிருக்கும். அதை அழுத்தினால், கதவு தானாகவே மூடி கொள்ளும். பட்டனை அழுத்துவதை தவிர நாம் வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) போன்ற கார்களில் எல்லாம் இந்த வசதி உள்ளது.

ஊர்வசி ரவுத்தேலா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரிலும் கூட, ஆட்டோமேட்டிக் டோர் வசதி இருக்கிறது. ஆனால் ஊர்வசி ரவுத்தேலா அதை பயன்படுத்தாமல், சற்று திணறியபடியே தனது கைகளால் கதவை மூடியுள்ளார். இதன் காரணமாகவே ஊர்வசி ரவுத்தேலாவை நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வசதிகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது ஊர்வசி ரவுத்தேலாவிற்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஊர்வசி ரவுத்தேலா முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இதன் காரணமாக ஏராளமான விலை உயர்ந்த கார்களை அவர் வைத்துள்ளார். எனவே ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் ஆட்டோமேட்டிக் டோர் வசதியை பற்றி அவருக்கு தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என நாங்கள் கருதுகிறோம்.

அதாவது ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இப்படி ஒரு வசதி உள்ளது என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும் வேடிக்கையாக தனது கைகளாலேயே கதவை அவர் மூடியிருக்கலாம். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவை நன்றாக கவனித்தால், அவர் வேடிக்கையாக நடந்து கொள்வதை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஒருவேளை அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் ஆட்டோமேட்டிக் டோர் வசதியை பற்றி தெரியவில்லை என்றாலும் கூட, இவ்வளவு ட்ரோல்கள் அவசியமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இங்கு அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே சமூக வலை தளங்களில் வார்த்தைகளை நாகரிகமாக பயன்படுத்துவது நல்லது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 13:51 [IST]
English summary
The legend actress urvashi rautela trolled for manually closing door of rolls royce cullinan suv
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+