புருனே சுல்தான் தங்க லிமோ கார்... 'அத' மட்டும் கேட்டுடாதீங்க!!

By Saravana

இட நெருக்கடியுடன் செல்லும்போது கார் பயணங்கள் அலுப்பை தருவதாக அமைகிறது. இந்த குறையை போக்கும் விதத்தில் அதிகபட்ச இடவசதியை அளிக்கும் லிமோசின் ரக வாகனங்கள் உச்சபட்ச சொகுசு அனுபவத்தை வழங்குகின்றன. இதனால், லிமோசின் வகை கார்களுக்கும், வாகனங்களுக்கும் கோடீஸ்வரர்கள் மத்தியில் அதீத ஆர்வம் இருக்கிறது.

மேலும், தங்கள் வீட்டு திருமணங்கள் மற்றும் இதர விசேஷங்களுக்கு லிமோசின் கார்களை வாடகைக்கு எடுத்து அந்த அனுபவத்தையும், ஆடம்பரத்தையும் வெளிப்படுத்துகின்றனர். சிலர் சொந்தமாகவே பல கோடிகளை கொட்டி லிமோசின் கார்களையும், வாகனங்களையும் கஸ்டமைஸ் செய்து வாங்குகின்றனர்.

அந்த வகையில், உலகின் வித்தியாசமான மற்றும் விலையுயர்ந்த லிமோசின் ரக கார்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பல்வேறு வசதிகளுடன் விசாலமான சொகுசு அறை போல காட்சி தரும் இந்த லிமோசின் ரக கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


லம்போ லிமோ

லம்போ லிமோ

கடந்த ஆண்டு லம்போர்கினி அவென்டேடார் காரின் லிமோசின் ரக மாடலின் கான்செப்ட்டை கார்ஸ் ஃபார் ஸ்டார்ஸ் என்ற வாடகை கார் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த காரை வடிவமைக்க ஸ்பான்சர்களுக்கும் அழைப்பு விடுத்தது. இதன் அதிகபட்ச விலை காரணமாக இன்னும் கான்செப்ட் நிலையிலேயே இருக்கிறது. இந்த காரின் கான்செப்ட் மாடலில் 700 எச்பி பவரை அளிக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்புற கேபினில் 7 பேர் பயணிப்பதற்கான ஆடம்பர இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. பிளாஸ்மா டிவி உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளுடன் இதில் மினி பாரும் உள்ளது. இந்த கான்செப்ட் மாடலின் படங்களை காண இங்கே கிளிக் செய்யவும். கான்செப்ட் நிலையிலிருந்தாலும், உலகின் காஸ்ட்லியான லிமோசின் கார்களை எடுக்கும்போது இதனை தவிர்க்க முடியவில்லை.

 9. 2015 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்- 600 புல்மேன்

9. 2015 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்- 600 புல்மேன்

உலக அளவில் பல்வேறு கார் கண்காட்சிகளில் இந்த காரின் கான்செப்ட் மாடலை பென்ஸ் காட்சிக்கு வைத்து வருகிறது. பார்ப்போரை பரவசத்தில் ஆழ்ந்தும் இந்த மாடலை அடுத்த ஆண்டு இந்த மாடல் முறைப்படி விர்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த மாடல் மேபேக் 62 கார் மாடலுக்கு மாற்றாக வர இறுக்கிறது. இந்த காரில் அதிகபட்சமான சொகுசு வசதிகளை பென்ஸ் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 21 அடி நீளம் கொண்ட இந்த காரில் புல்லட் ப்ரூப் வசதியும் கொண்டதாக இருககும். ரூ. 6 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது.

8. மில்லியன் யூரோ மினி

8. மில்லியன் யூரோ மினி

உலகின் அதிக விலை கொண்ட மினி கூப்பர் கார் மாடலாக இதனை குறிப்பிடுகின்றனர். கஜகஸ்தான் இளவரசி ரெஜினா அப்துர்ரஸகோவாவுக்கு சொந்தமான இந்த லிமோசின் மாடலில் 47 இஞ்ச் டிவி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இதன் வெளிப்புறம் முழுவதும் ஒரு லட்சம் உயர்ரக கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஜன்னல்களில் 50 கிராம் சுத்த தங்கத்தால் பூசப்பட்டிருக்கிறது. இந்த காரை சுற்றிலும் 30 பார்க்கிங் சென்சார்களும், 20 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ரூ.8.30 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது.

 7. மேபேக் லான்டயூலிட்

7. மேபேக் லான்டயூலிட்

மெர்சிடிஸ் பென்ஸ் அங்கமாக இருந்து வந்த மேபேக் பிராண்டு கடந்த ஆண்டு மூடுவிழா கண்டது. ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீயுடன் போட்டி போட முடியாமல், சந்தையை இழந்த மேபேக் பிராண்டில் வந்த இந்த லிமோசின் ரக மாடலும் விலை மதிப்புமிக்கது. இந்த காரில் மேபேக் 62எஸ் காரில் பயன்படுத்தப்பட்ட அதே 312 எச்பி பவரை அளிக்கும் பை-டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இதன் கூரை வடிவமைப்பு வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை நிற லெதர், தங்கம் மற்றும் கிரானைட் வேலைப்பாடுகளுடன் கூடிய இன்டிரியர் என தனது மதிப்பை கூட்ட பல காரணங்களை வைத்திருக்கிறது. இந்த கார் ரூ.8.60 கோடி மதிப்புடையது.

6. மிட்நைட் ரைடர்

6. மிட்நைட் ரைடர்

உலகின் மிகப்பெரிய லிமோசின் வாகனமாக இது கருதப்படுகிறது. டிராக்டர் ட்ரெயிலரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில், 40 பேர் பயணிக்கலாம். ஓய்வறைகள், 1,800 வாட் ஸ்பீக்கர் சிஸ்டம், நைட் கிளப் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வசதிகள், பார் போன்றவற்றுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.15.36 கோடி விலை கொண்டது.

 5. தி பீஸ்ட்

5. தி பீஸ்ட்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்காக 2009ம் ஆண்டு வாங்கப்பட்ட லிமோசின் மாடல் இது. கேடில்லாக் நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்த இந்த லிமோசின் மாடலில் ஏராளமான பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு வசதிகல் உள்ளன. இந்த கார் ரூ.18.45 கோடி விலை மதிப்பு கொண்டது.

 4. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் லிமோ

4. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் லிமோ

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ரோல்ஸ்ராய்ஸ் பிரியர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் வாடகைக்கு கேட்கும் முதல் மாடல் இதுவாகத்தான் இருக்கிறது. இதுவும், புல்லட் ப்ரூப் வசதியுடன், ஏராளமான வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது. இந்த காரில் 432 எச்பி பவரை அளிக்கும் 6.8 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.23.37 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது.

3. அமெரிக்கன் ட்ரீம்

3. அமெரிக்கன் ட்ரீம்

பிரபல அமெரிக்க கார் சேகரிப்பாளர் ஜே ஓர்பெர்க்கிற்கு சொந்தமான இந்த லிமோசின் கார்தான் உலகின் நீளமான கார் மாடலாக குறிப்பிடப்படுகிறது. 100 அடி நீளத்துடன் 26 சக்கரங்களை கொண்டது. நீச்சல் குளம், சூரிய குளியலுக்கான பெஞ்ச், பெரிய அளவிலான படுக்கைகள், ஹெலிபேட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ரூ.24.60 கோடி மதிப்புடையது.

2. பேட்மொபைல் லிமோசின்

2. பேட்மொபைல் லிமோசின்

பேட்மேன் திரைப்படங்களின் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட லிமோசின் கார் மாடல். கடந்த 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த காரில் ராக்கெட் லாஞ்சர், கார் சக்கரங்கள் உள்ளிழுக்கும் வசதியுடன் கட்டமைக்கப்பட்டது. கார்வெட் காரின் வி8 ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் ரூ.25.83 கோடி விலை மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது.

1. புருனே சுல்தான் ரோல்ஸ்ராய்ஸ் லிமோ

1. புருனே சுல்தான் ரோல்ஸ்ராய்ஸ் லிமோ

மயக்கம் போடும் விலை கொண்ட லிமோ கார் புருனே சுல்தான் ஹசனல் போல்கியா வசம் உள்ளது. 1990ம் ஆண்டுகளில் ரோல்ஸ்ராய்ஸ் விற்பனை செய்த பாதி கார்களை புருனே அரச குடும்பம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு நன்றிக்கடனாக போல்கியாவின் திருமணத்திற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட இந்த காரை ரோல்ஸ்ராய்ஸ் கஸ்டமைஸ் செய்து கொடுத்தாக கூறப்படுகிறது. ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஸ்பர் லிமோசின் என்று அழைக்கப்படும் இந்த கார் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டிருக்கிறது. மேலும், தங்க அலங்கார வேலைப்பாடுகளும் வியக்க வைக்கிறது. பின்புறத்தில் தர்பார் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூ.86 கோடி மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2014, 13:36 [IST]
English summary
The limousine is the pinnacle of all luxury cars. It allows for the passenger to sit back and enjoy the ride while being entertained by some of the finest features to ever be put into a vehicle. When a limo drives by or pulls over to a curb, everyone looking on knows that the person or persons riding in those back seats are rolling in cash.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+