தனிநபர் ஜெட் விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் லிமோசின் வேன்!

Written By:

இப்போது நித்தமும் ஒரு புதிய வசதியும், நவீன தொழில்நுட்பங்களும் காரில் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும், பலரின் எதிர்பார்ப்பையும் ஒருங்கே பூர்த்தி செய்யும் கார்கள் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்பார்ப்புகளை விஞ்சும் ஒரு லிமோசின் ரக வேனை ஜெர்மனியை சேர்ந்த கார் கஸ்டமைஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. அந்த காரின் படங்களையும், வீடியோவையும் பார்த்து முடிக்கும்போது வியப்பும், ஏக்கமுமே மிஞ்சும். பசியோடு இருக்கும் இவ்வேளையில், அறுசுவை உணவு சாப்பிட்ட உணர்வை இந்த வேன் ஏற்படுத்தும். அந்தளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய லிமோசின் ரக வேனை இப்போது ஸ்லைடரில் பார்க்கலாம்.

ஜெர்மனி நிறுவனம்

ஜெர்மனி நிறுவனம்

ஜெர்மனியை சேர்ந்த க்ளாசென் என்ற கார் கஸ்டமைஸ் நிறுவனம்தான் இந்த சொகுசு வேனை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

மாடல்

மாடல்

மெர்சிடிஸ் பென்ஸ் வயானோ வேனின் அடிப்படையில் இந்த லிமோசின் ரக வேன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

விசேஷ அம்சம்

விசேஷ அம்சம்

இந்த வேனின் மிகவும் விசேஷமான அம்சம், சினிமாவில் வருவது போன்று இந்த காரின் பாடியை நீடித்துக் கொள்ள முடியும். அதற்கு ஏற்ப சுருங்கி, விரியும் வகையில் விசேஷ கட்டமைப்புடன் இந்த வேன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் பாகம்

கூடுதல் பாகம்

இந்த வேனின் சேஸீயை கத்தரித்து நடுவில் கூடுதல் உடற்கூடு பாகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு பட்டனை அழுத்தினால், வேன் நீடித்துக் கொள்கிறது.

இடவசதி

இடவசதி

வீல் பேஸ் நீடிக்கப்பட்டதும் உட்புறத்தில் மிக மிக விசாலமான இடவசதியை கொண்டதாக மாறிவிடுகிறது. ஒரு பெரிய அறையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தரும்.

இருக்கைகள்

இருக்கைகள்

உட்புறத்தில் 4 சொகுசான உயர் வகை இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. அதற்கு நடுவில் ஆர்ம் ரெஸ்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு வசதி

பொழுதுபோக்கு வசதி

டிவி திரையுடன் கூடிய பொழுதுபோக்கு சாதனங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ரகசிய அறை

ரகசிய அறை

பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வைப்பதற்காக கைரேகை மூலமாக திறக்கும் வசதி கொண்ட ரகசிய அறையும் இருக்கையின் அருகிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 டேபிள்கள்

டேபிள்கள்

தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய அளவில் மடக்கிக் கொள்ளும் வசதி கொண்ட டேபிள்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

விசாலமான ஜன்னல்கள்

விசாலமான ஜன்னல்கள்

இந்த வேனில் மிகவும் விசாலமான ஜன்னல்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், திரை சீலை போட்டு மூடப்பட்டு இருக்கிறது.

சிறிய பார்

சிறிய பார்

கேபினிலையே மது வகைகளை வைத்துக் கொள்வதற்கு ஏதுவான குளிர்சாதன பெட்டி மற்றும் கோப்பைகளை வைப்பதற்கான இடவசதியும் உள்ளது.

ரன் பிளாட் டயர்கள்

ரன் பிளாட் டயர்கள்

இந்த வேனில் ரன் ஃப்ளாட் டயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், பஞ்சரானாலும் குறிப்பிட்ட தூரம் வரை வேனில் பாதுகாப்பாக பயணிக்கலாம்.

அலுவலகம்

அலுவலகம்

தற்காலிக அலுவலகமாக பயன்படுத்துவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் ஏற்ற வசதிகளை இந்த வேன் கொண்டுள்ளது. அதற்கான இணைய தொடர்பு வசதிகளும் உள்ளன.

டேப்லெட் கட்டுப்பாடு

டேப்லெட் கட்டுப்பாடு

கேபினில் உட்புறத்தில் விளக்குகளின் வெளிச்சத்தை குறைப்பது, இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது, பொழுதுபோக்கு சாதனத்தை கட்டுப்படுத்துவது போன்ற அனைத்தையும் டேப்லெட்டின் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த வேனில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த வேன் அதிகபட்சமாக 217 கிமீ வேகம் வரை செல்லும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

டிரைவர் உள்பட 6 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.

எடை

எடை

இந்த வேன் 3,050 கிலோ எடை கொண்டது. மெட்டாலிக் கறுப்பு வண்ணத்தில் மட்டுமே கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது.

 விலை

விலை

விலை விபரத்தை தகுதியுடைய வாடிக்கையாளர்களிடம் நேரடியாக மட்டுமே தெரிவிக்கப்படும் என்று க்ளாசென் நிறுவனம் தெரிவிக்கிறது.

பாலிவுட் நடிகர் சல்மான்கானின் மல்டி ஆக்சில் சொகுசு பஸ்!

பாலிவுட் நடிகர் சல்மான்கானின் மல்டி ஆக்சில் சொகுசு பஸ்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Most Luxurious VIP Limousin Van.
Story first published: Wednesday, March 30, 2016, 13:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark