அமெரிக்க ராணுவத்தில் தரையிலும், தண்ணீரிலும் செல்லும் புதிய கவச வாகனங்கள்!

Written By:

அமெரிக்க ராணுவத்தின் யுனைடேட் ஸ்டேட்ஸ் மரைன் கார்ப்ஸ் பிரிவுக்கு தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய விஷேச கவச வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. அதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய புரோட்டோடைப் மாடல்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு மத்தியில் மொத்தம் 16 நீர்நில கவச வாகனங்கள் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, பரீச்சார்த்த முறையில் சோதனைகள் செய்யப்பட உள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் நீர்நில கவச வாகனங்களுக்கு பதிலாக விரைவில் படையில் சேர்க்கப்பட இருக்கின்றன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆர்டர்

ஆர்டர்

பழமையாகிவிட்ட ஆம்பிபியஸ் கவச வாகனங்களுக்கு பதிலாக இந்த புதிய ஆம்பிபியஸ் வாகனங்கள் விரைவில் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் படையில் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக, 16 வாகனங்களை தயாரித்து வழங்க ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

Iveco நிறுவனம் வடிவமைத்திருக்கும் இந்த கவச வாகனங்களை BIA நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த கவச வாகனங்களை பல்வேறு கடும் சோதனைகளுக்கு உட்படுத்தி, வடிவமைத்துள்ளனர்.

கடுமையான சோதனைகள்

கடுமையான சோதனைகள்

மிக சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு முன்னேறும் விசேஷமான கட்டமைப்பு கொண்டது. அதற்காக, இந்த கவச வாகனத்தில் வலிமையான அடிப்பாகமும், கட்டமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கவச வாகனம்

கவச வாகனம்

இந்த வாகனத்தில் இருக்கும் எஞ்சின் 700 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், 8 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதால், தரையில் எந்தவொரு கரடுமுரடான பகுதிகளிலும் எளிதாக கடந்து சென்று எதிரிகள் பகுதிகளில் தாண்டவமாடும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் திறன்

தாக்குதல் திறன்

தண்ணீர் வழித்தடத்தின் மூலம் கடலோரப் பகுதிகளுக்கு சென்று வெகு எளிதாக தரைத் தாக்குதல்களை நடத்துவதற்காக இந்த கவச வாகனங்களை வாங்குகின்றனர்.முடியும். அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கைகளுக்கு இந்த கவச வாகனம் பயன்படுத்தப்படும்.

 வீரர்கள்

வீரர்கள்

தற்போது இரண்டு புரோட்டோடைப் வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு புரோட்டோடைப் வாகனத்திலும் இரண்டு வீரர்கள் செல்ல முடியும்.

நீர்நில வாகனத்தின் வல்லமைகளை வீடியோவில் காணலாம்.

 

மேலும்... #ஆஃப் பீட்
English summary
The United States Marines are some of the toughest guys on the planet. Once they have someone in their sites, well that someone usually get captured or Killed In Action (KIA). Now these tough guys can operate almost anywhere and when they want to storm the beaches, they use amphibious assault vehicles.
Story first published: Monday, November 30, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark