அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான லிமோ காரை தயாரிக்க போட்டா போட்டி!

By Saravana

அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவர்களுக்கு உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட லிமோசின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டு தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவுக்காக லிமோசின் கார் வாங்கப்பட்டது. அதனை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்தது. தி பீஸ்ட் என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேடில்லாக் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவரும், முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மனைவியுமான ஹிலாரி ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அவருக்கு ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான புதிய காரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க புலனாய்வுத் துறை மேற்கொள்ள உள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் தி பீஸ்ட் காரைவிட புதிய கார் கூடுதல் வசதிகள் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போதைய அதிபர் ஒபாமா பயன்படுத்தும் காரின் அம்சங்களையும், புதிய காரை வடிவமைப்பதற்கு கோதாவில் இறங்கியிருக்கும் நிறுவனங்கள் பற்றிய செய்திகளை ஸ்லைடரில் காணலாம்.

ஹெவி வெயிட்

ஹெவி வெயிட்

அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் தி பீஸ்ட் லிமோசின் கார் 4.5 டன் எடை கொண்டது. 5 இஞ்ச் தடிமன் கொண்ட பாடி மற்றும் கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

கண்ணி வெடி, எறிகணைகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில், கட்டமைக்கப்பட்டுள்ளது. ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், அவசர கால சமயங்களில் காரை வேகமாக செலுத்தி அபாயகரமான இடத்தை விட்டு தப்பிக்க முடியும்.

 ரசாயன தாக்குதல்

ரசாயன தாக்குதல்

தற்போதைய காரில் ரசாயன தாக்குதல்களிலிருந்து உள்ளே இருக்கும் பயணிகளை காப்பாற்றும் வசதி கொண்டது. இந்த காரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அதிபரின் ரத்த வகை காரிலேயே தயாராக இருக்கும்.

புதிய கார்

புதிய கார்

2017ம் ஆண்டில் புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்பவருக்காக வடிவமைக்கப்பட இருக்கும் புதிய லிமோசின் காரை வாங்குவதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு புலனாய்வுத் துறை வெளியிட உள்ளது.

போட்டா போட்டி

போட்டா போட்டி

அமெரிக்க அதிபருக்கான சமீபத்திய லிமோசின் கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்தான் வடிவமைத்து கொடுத்துள்ளது. இந்த நிலையில், புதிய காரை வடிவமைத்து தருவதற்கான கான்ட்ராக்ட்டை பெறுவதற்கு ஃபோர்டு மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்களும் இந்த முறை கோதாவில் இறங்க உள்ளன.

 கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

இந்த முறை வாங்கப்பட உள்ள புதிய லிமோசின் கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைத்து பெறுவதற்கு அமெரிக்க புலனாய்வுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. புதிய காரின் டிசைன், வசதிகள் மற்றும் இதர அம்சங்கள் குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை தீவிர பரிசீலனையில் இறங்கியுள்ளது.

Article Published On: Wednesday, March 19, 2014, 16:46 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+