ஒரு வருஷத்துக்கு முன்னாடி காணாம போன பைக்கை ஹெல்மெட்டுடன் மீட்ட உரிமையாளர்! தினமும் அத செஞ்சதால கிடைச்சிருக்கு!

சமீப காலமாக வாகன திருட்டு இந்தியாவில் சர்வ சாதாரணமாகிவிட்டது. தெருவிற்கு தெரு, மூலைக்கு மூலை, ஏன் வீட்டுக்கு வீடு சிசிடிவி கேமிராக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்ற இந்த சூழலிலும் திருடர்கள் தங்களின் கை வரிசையைத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொண்டு இருக்கின்றனர். இது காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

குறிப்பாக, திருட்டை தவிர்க்க முடியாத சூழலே காண முடிகின்றது. அதிலும், களவு போன வாகனத்தை மீட்டெடுப்பது பல நேரங்களில் தோல்வியையேக் காணுகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன இருசக்கர வாகனம் ஒன்று தற்போது மீட்டெடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Owner retrieves stolen bike year ago

அந்த பைக் காணாமல் போன ஹெல்மெட் உடன் அதன் உரிமையாளர் மீட்டெடுத்து இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் பலரை ஆச்சரியத்தில் உறைய செய்திருக்கின்றது என்றே கூறலாம். கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர் நாகராஜ் ராகவ் அஞ்சன். இவரே ஒரு வருடத்திற்கு முன்பு பைக்கை தொலைத்துவிட்டு தற்போது அதை மீட்டெடுத்தவர் ஆவார்.

போலீஸாரின் உதவி இன்றி அவர் தன்னுடைய பைக்கை மீட்டெடுத்து இருக்கின்றார். இதற்காக அவர் தினமும் ஒரே ஒரு செயலை மட்டுமே செய்து வந்திருக்கின்றார். குறிப்பாக, தவறாமல் தினம் தோறும் செய்து வந்திருக்கின்றார். இதன் காரணத்தினாலேயே அவரால் தொலைந்த பைக்கை ஒரு வருடத்திற்கு பின்னர் மீட்டெடுக்க முடிந்திருக்கின்றது.

துபாயில் பணி புரிந்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கே முன்னர் தாயகம் திரும்பி இருக்கின்றார் நாகராஜ் ராகவ் அஞ்சன். மேலும், தாய்நாட்டிலேயே அவர் செட்டிலும் ஆகி இருக்கின்றார். இந்த நிலையிலேயே சொந்த வேலைகளைப் பார்க்கும் விதமாக அவரும், அவருடைய சகோதரரும் இணைந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பஜாஜ் அவென்ஜர் பைக்கை வாங்கி இருக்கின்றார்.

இந்த பைக்கின் உதவியிலேயே தன்னுடைய அனைத்து வேலைகளையும் அவர் பார்த்து வந்திருக்கின்றார். அந்தவகையில், வழக்கம்போல் அவர் பஜாஜ் அவென்ஜர் பைக்கில் பணிக்காக சென்றிருக்கின்றார். சம்பவ தினத்தன்று மங்களூருவில் உள்ள பிரபல உணவகம், 'ஹோட்டல் ரூபா' முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றிருக்கின்றார்.

பணி முடிந்து மாலை வந்து பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து பைக் காணாமல் போயிருக்கின்றது. அதிர்ந்துபோன அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருடன் முகக் கவசம் அணிந்திருந்ததால் அவனை கண்டுபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இவ்வாறே பல நாட்கள் கடந்துவிட்டன.

இருப்பினும், மனம் தளராத நாகராஜ் ராகவ் அஞ்சன், தினமும் சாலையில் பயணிக்கும்போதெல்லாம் தன்னுடைய வாகனம் கிடைத்துவிடாதா என்கிற நோக்கிலேயே தேடுதல் பார்வையுடன் பயணித்திருக்கின்றார். அவ்வாறு, சமீபத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம் வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோதே அந்த அதிசயம் நடைபெற்றிருக்கின்றது. அவருடைய பைக்கைப் போலவே ஓர் பைக் அவரின் கண்களில் தென்பட்டு இருக்கின்றது.

அதை நெறுங்கி சென்று பார்த்தபோதுதான் அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியேக் காத்திருந்தது. அவருடைய பைக்கின் அதே பதிவெண்ணையே அந்த பைக் கொண்டிருந்தது. நீண்ட அலசல்களுக்கு பின்னர் அது தன்னுடைய பைக்தான் என்பதை அஞ்சன் உறுதிச் செய்தார். இதை அடுத்து, பைக்கை ஓட்டி வந்த நபரை பின் தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து போலீஸிடம் பிடித்துக் கொடுத்திருக்கின்றார்.

அந்த நபரிடத்தில் விசாரிக்கையில் அது தன்னுடைய பைக் அல்ல, அதை தன்னுடைய எஜமானர் வழங்கியதாக கூறி இருக்கின்றார். இதைத்தொடர்ந்து, அந்த எஜமானரிடத்தில் விசாரித்ததில், பைக் நீண்ட காலமாக சாவியுடன் தன்னுடைய வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், யாரும் கேட்க வராததன் காரணத்தினால் அந்த பைக்கை தான் பயன்படுத்தியதாகவும் கூறி இருக்கின்றார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸார், பைக்கை திருடிச் சென்று அடுக்குமாடி குடியிருப்பில் அனாதையாக்கிச் சென்றவர் யார் என்கிற விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பைக் மட்டுமில்லைங்க அதனுடன் தொலைந்து ஹெல்மெட்டும் தற்போது அவருக்கு கிடைத்திருக்கின்றது. ஆகையால், தற்போது அஞ்சன் மகிழ்ச்சியில் உச்சத்தில் திகைத்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலரும் வாகனங்களை தொலைத்து இருப்போம். இவர்களுக்கான மிக சிறந்த அட்வைஸாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மனம் தளராமல் தொலைத்த வாகனத்தை தேடினால் அது கட்டாயம் நம் கைகளை வந்து சேரும் என்கிற அட்வைஸையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 13, 2023, 14:03 [IST]
English summary
The owner found the bike that went missing a year ago how is this possible
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+