வியக்கவைக்கும் பரபரப்பான போக்குவரத்து அம்சங்களை கொண்ட உலக நாடுகள்... சிறப்பு தொகுப்பு..!!

வியக்கவைக்கும் பரபரப்பான போக்குவரத்து அம்சங்களை கொண்ட உலக நாடுகள்... சிறப்பு தொகுப்பு..!!

உலகெங்கும் உள்ள நாடுகள் எப்போதும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பரபரப்பு என்பது மனிதனுக்கான ஒரு ஆர்பரிப்பு. அது கொண்டாட்டமாகவும் இருக்கலாம். கவலையாகவும் மாறலாம்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

பெரும்பாலும் மனித கால்தடம் பதிந்துவிட்ட உலகின் பல பகுதிகளுக்கு, பரபரப்பும் அவனுடே சென்றடைந்துள்ளது.

பரபரப்பிற்கான அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பகுதிகளுக்கும் அல்லது நாடுகளுக்கும் மாறுபடும்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

தனிமனித பரபரப்பு என்பது சமூகம், கட்டமைப்பு, இயங்கும் தளம் என அனைத்தையும் உள்ளடக்கியது.

இப்படி பலவிதங்களில் காணப்படும் பரபரப்பிற்கான கட்டமைப்புகள், ஒருசேர சந்திக்கும் இடம்தான் சாலைகள்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

ஆங்கிலத்தில் இது ரஷ் ஹவர் என்று குறிப்பிடப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் சாலை பரபரப்புக்கள் (ரஷ் ஹவர்) எவ்வாறு அடையாளம் காணப்படுகிறது என்பதை இனி பார்க்கலாம்.

சீனா, பெய்ஜீங்

சீனா, பெய்ஜீங்

இந்த புகைப்படத்தை பார்த்தால் ஏதோ பொம்மை கார்கள் அணிவகுத்து நிற்பது போல் தெரிகிறதா? ஆனால் அது தான் இல்லை.

சீனா தலைநகர் பெய்ஜீங்கில் பிரதான சாலை ஒன்றில் பீக் ஹவர் டிராஃபிக்கில் சாலையை கடக்க அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் தான் இவை.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் கொண்ட சீனா பரபரப்பை பிரம்மாண்டமாக உணர்த்தும் இந்த டாப் வியூ ஆங்கிள் கிளிக், சூப்பர் தான்.

பங்களாதேஷ், டாக்கா

பங்களாதேஷ், டாக்கா

இந்தியாவில் ஆட்டோரிக்‌ஷாக்களுக்கு பதிலாக பங்களாதேஷில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் தான் அதிகம். பெரும்பாலான பயணிகள் இதில் செல்வது தான் அங்கு வாடிக்கை.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

இந்தியாவில் புகை மாசுவிற்கு மத்தியில் உருவாகும் பல ரஷ் ஹவர்களை பார்த்து பழக்கமான நமக்கு, சைக்கிள் ரிக்‌ஷா கூட்டத்தில் பரபரப்பை காண்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

இத்தாலி, வெனீஸ்

இத்தாலி, வெனீஸ்

அண்ணா சாலை வழியாக ஆஃபிஸ் போகும் போது கடும் டிராஃபிக் ஏற்பட்டால், அருகில் ஓடும் கூவம் நதியில் ஒரு படகு போக்குவரத்து இருந்திருந்தால், நன்றாக இருக்கும்லே என்று தோன்றும்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

ஆனால் சென்னை அதற்கும் தாங்காது என்பது தான் நிதர்சனம். ஏனென்றால் நீர்வழி போக்குவரத்து பிரதானமாக உள்ள வெனீஸ் நகரில் ரஷ் ஹவர் டிராஃபிக்கே படகு பயன்பாட்டால் தான் ஏற்படுகிறது.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

மீன் சந்தை, காய்கறி சந்தை, தினசரி மக்கள் பயன்பாடு, சுற்றுலா வாசிகள் வருகை என வெனீஸ் நகரத்தில் இந்த நீர் வழி பயணங்கள், சென்னை அண்ணா சாலையை விட மிகவும் ரஷ் ஹவர் பயன்பாட்டை கொண்டது.

இந்தியா, சட்டீஸ்கர்

இந்தியா, சட்டீஸ்கர்

இந்தியாவில் நாம் அவசர அவசரமாக எங்காவது போகும்போது தான், சாலையில் மாடு எருமை போன்ற விலங்குகள் வாகனத்தின் முன் பாயும்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

அதை நீங்கி சாலையில் இருந்து ஓரங்கட்டி நாம் வண்டியை ஓட்டுவதற்குள், பரபரப்புகள் அடங்கி ரத்த அழுத்தம் உச்சமாகி விடும்.

வீட்டு விலங்குகள் சாலைகளில் சுற்றி தீரிவது பெரும்பாலான இடங்களில் தற்போது இல்லை என்றாலும், அது இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.

ஜப்பான், டோக்கியோ

ஜப்பான், டோக்கியோ

இந்தியர்களுக்கு எவ்வாறு தங்களது சொந்த வாகனங்களில் சென்று பரபரப்பான சாலைகளில் டிராஃபிகில் மாட்டிக்கொள்வது பிடிக்குமோ... அந்தளவிற்கு ஜப்பானியர்களுக்கு மெட்ரோ ரயில்கள்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

என்னதான் ஸ்கூட்டர், பைக், கார் போன்றவற்றை அதிகம் தயாரிக்கும் நாடாக ஜப்பான் இருந்தாலும், அங்கு பெரும்பாலான அவர்கள் பொது போக்குவரத்தில் தான் பயணிப்பார்கள்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த புகைப்படத்தில் மெட்ரோ ரயிலில் ஏற இவர் முற்படவில்லை. படியில் நிற்பவர்களை உள்ளே தள்ளிவிட்டு கதவிடுக்கில் பயணிகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவி செய்கிறார்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

பொதுமக்களினின் எண்ணிக்கையால் நிரம்பி வழியும் டோக்கியோவின் மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகளை கூட்ட நெரிசலில் ரயிலின் உள்ளே தள்ளிவிடுவதற்கு பிரத்யேகமாக வேலையாட்களே இருக்கிறார்கள்.

ரஷ்யா, மாஸ்கோ

ரஷ்யா, மாஸ்கோ

ரஷ்யாவின் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. அங்கு எல்லாருக்கும் கார், எதற்கும் கார் தான்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

தட்பவெட்ப நிலை காரணமாக ரஷ்யாவில் கார் பயன்பாடு தான் அதிகம். வீட்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அவரவருக்கு கார்களை நிச்சயமாக வைத்திருப்பார்கள்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

இதனால் அந்நாட்டில் சாலையில் ரஷ்ஹவர் டிராஃபிக் என்றால் அது வாகனங்கள் தான். இந்த புகைப்படத்தில் இருப்பது போன்ற நிலை தான் அங்கு நிலவும்.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

போக்குவரத்து தேர்வுகள் என்பது ஒவ்வொரு நாடுகளின் கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு மாறுபடக்கூடியது.

உலகநாடுகளில் நிலவும் வியக்கவைக்கும் போக்குவரத்து பரபரப்புகள்..!!

அதேபோல அதனால் ஏற்படும் நெருக்கடிகள் என்பது பல நாடுகளுக்கும் மிகப்பெரிய தலைவலியாகத்தான் உள்ளது அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாகாக இருந்தாலும் சரி.

Article Published On: Friday, November 3, 2017, 15:40 [IST]
English summary
Read in Tamil: The Rush Hour in Different Countries. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+