எல்லாம் 'பாலாஜி' குடுத்தது! 6 கோடி ரூபா காரில் ஊரையே மிரள விடுவது அந்த முக்கிய அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்களா!
உலகின் பணக்கார கடவுளாக அறியப்படுபவர், திருப்பதி வெங்கடாஜலபதி (Tirupati Venkatajalapathi). பாலாஜி என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். எனவே வாழ்க்கையில் செல்வம் கொழிக்க வேண்டும் என்று விரும்பும் பலரும், தங்கள் பெயர்களுக்கு பின்னால் பாலாஜி என்ற பெயரை சேர்த்து கொள்கின்றனர். அத்துடன் வியாபார நிறுவனங்களையும் கூட பாலாஜி என்ற பெயரிலேயே நடத்துகின்றனர். இதற்கு பாலாஜி டெலிஃபிலிம்ஸ் லிமிடெட் (Balaji Telefilms Limited) நிறுவனம் ஒரு உதாரணம். இந்த நிறுவனம் மும்பை (Mumbai) நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களை, பாலாஜி டெலிஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து கொண்டுள்ளது. பாலிவுட் நடிகரான ஜிதேந்திராதான் (Jeetendra) பாலாஜி டெலிஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது மனைவி ஷோபா கபூர் (Shobha Kapoor), இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

அதே சமயம் ஜிதேந்திரா - ஷோபா கபூரின் மகளான ஏக்தா கபூர் (Ekta Kapoor), பாலாஜி டெலிஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் க்ரியேட்டிவ் ஹெட்-ஆக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அது ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி (Range Rover SV Autobiography) கார் ஆகும். ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி சொகுசு காரின் விலை 5.70 கோடி ரூபாய் என இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திரையுலக ரசிகர்கள் இந்த காரை ஆச்சரியத்துடன் பார்க்க தொடங்கியுள்ளனர்.

ஏக்தா கபூர் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி காரை வாங்கியுள்ளது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவை ஏக்தா கபூரின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில் ஏக்தா கபூர் கார் காதலர் ஆவார். இதற்கு அவரது கார் கலெக்ஸனே (Car Collection) சாட்சி. ஏக்தா கபூரிடம் ஏற்கனவே ஜாகுவார் எஃப்-பேஸ் (Jaguar F-Pace), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் மேபேக் எஸ் 500 (Mercedes Benz S-Class Maybach S 500) மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) உள்ளிட்ட கார்கள் எல்லாம் உள்ளன.
இதில், ஜாகுவார் எஃப்-பேஸ் காரின் மதிப்பு சுமார் 70 லட்ச ரூபாய் எனவும், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் மேபேக் எஸ் 500 காரின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் எனவும், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் மதிப்பு சுமார் 3.50 கோடி ரூபாய் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: திரைப்பட தயாரிப்பாளர்களுக்கே உரித்தான சொகுசு வாழ்க்கையைதான் ஏக்தா கபூர் வாழ்ந்து வருகிறார். அவரிடம் உள்ள சொகுசு கார்கள் இதை பறைசாற்றுகின்றன. வரும் காலங்களில் அவர் இன்னும் விலை உயர்ந்த சொகுசு கார்களை எல்லாம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் பேச கூடிய ஒரு தயாரிப்பாளராக ஏக்தா கபூர் மாறியுள்ளார். தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள தி சபர்மதி ரிப்போர்ட் (The Sabarmati Report) திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஏக்தா கபூரும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்த திரைப்படம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை (Godhra Train Burning Incident) அடிப்படையாக கொண்டது. குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில்வே ஸ்டேஷன் (Godhra Railway Station) அருகே கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (Sabarmati Express Train) தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பான வரலாற்றை இந்த படம் பேசுகிறது.
இந்த திரைப்படத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அமித் ஷாவின் 'குட் புக்கில்', ஏக்தா கபூர் இடம்பிடித்துள்ளார். இன்று (டிசம்பர் 2) பார்லிமெண்ட்டிலேயே (Parliament) இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) உள்ளிட்டோர் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏக்தா கபூரும் கலந்து கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








